முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா?

இந்தியாவில் லம்போர்கினி உருஸ் காரை வைத்திருக்கும் பிரபலங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா?

இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) கார் புகழ்பெற்ற மாடலாக திகழ்ந்து வருகிறது. லம்போர்கினி நிறுவனம் இதனை சூப்பர் எஸ்யூவி என கூறுகிறது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு ஆண்டில், 50க்கும் மேற்பட்ட உருஸ் கார்களை லம்போர்கினி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா?

இந்தியா போன்ற நாடுகளில் இவ்வளவு உருஸ் கார்களை விற்பனை செய்திருப்பது உண்மையில் சாதாரண விஷயமல்ல. நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற வாகனம் என்பதுதான் உருஸ் காரின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் முக்கிய காரணம். லம்போர்கினி கார்களை சொந்தமாக்க வேண்டும் என்ற கனவு இந்தியாவில் ஏராளமானோருக்கு உள்ளது.

முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா?

ஆனால் அவர்களால் லம்போர்கினி கார்களை வாங்கி இந்தியாவில் ஓட்ட முடியாது. ஏனெனில் சூப்பர் கார்கள் இந்திய சாலைகளுக்கு ஏற்றவை அல்ல. இங்கு சூப்பர் கார்களை அவ்வளவு எளிதாக ஓட்ட முடியாது. ஆனால் லம்போர்கினி உருஸ் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்றதாக உள்ளது. எனவே இந்திய வாடிக்கையாளர்கள் லம்போர்கினி உருஸ் காரை அதிகளவில் தேர்வு செய்கின்றனர்.

முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா?

லம்போர்கினி உருஸ் காரில், 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இந்த இன்ஜின் 641 பிஎச்பி பவர் மற்றும் 850 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது. பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3.6 வினாடிகளிலும், 200 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை 12.8 வினாடிகளிலும் எட்டிவிடும் திறன் லம்போர்கினி உருஸ் காருக்கு உள்ளது.

முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா?

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 305 கிலோ மீட்டர்கள். இந்தியாவில் லம்போர்கினி உருஸ் காரை ஏராளமானோர் வைத்துள்ளனர். அவர்களில் மிகவும் பிரபலமான மனிதர்களை பற்றியும், அவர்களது லம்போர்கினி உருஸ் கார் பற்றியும்தான் இந்த செய்தியில் நாம் பார்க்க போகிறோம்.

முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா?

முகேஷ் அம்பானி:

முகேஷ் அம்பானியின் கராஜில் பல்வேறு கவர்ச்சிகரமான சொகுசு கார்கள் உள்ளன. இவ்வளவு சொகுசு கார்களை ஒரே கூரையின் கீழ் இந்தியாவில் வேறு எங்கேயாவது பார்க்க முடியுமா? என்பது சந்தேகமே. முகேஷ் அம்பானியின் கராஜிற்கு சமீபத்தில் வந்து சேர்ந்துள்ள உறுப்பினர்தான் லம்போர்கினி உருஸ் எஸ்யூவி.

இந்த பவர்ஃபுல் எஸ்யூவி காரின் விலை 3 கோடி ரூபாய் (எக்ஸ் ஷோரூம், டெல்லி). இந்தியாவிற்கு வந்த முதல் லம்போர்கினி உருஸ் எஸ்யூவி கார்களில் ஒன்றாக முகேஷ் அம்பானியின் கார் கருதப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த காரில் ஆகாஷ் அம்பானியுடன், ரன்பீர் கபூரும் ஒன்றாக பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா?

புனித் ராஜ்குமார்:

கன்னட சினிமா துறையில், நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பல்வேறு முகங்களுடன் வெற்றிக்கொடி நாட்டி கொண்டிருப்பவர் புனித் ராஜ்குமார். புத்தம் புதிய லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரை கடந்த மார்ச் மாதம் அவர் தனது மனைவிக்கு பரிசாக அளித்தார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அவர் இந்த பரிசை தனது மனைவிக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா?

ரன்வீர் சிங்:

இந்தியாவின் லம்போர்கினி உருஸ் உரிமையாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இதில் சமீபத்தில் இணைந்துள்ளார். பிரகாசமான சிகப்பு நிறத்தில் அவர் லம்போர்கினி உருஸ் காரை வாங்கியுள்ளார். மும்பை மாநகர சாலைகளில் ரன்வீர் சிங் இந்த காரில் சமீபத்தில் வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா?

தர்ஷன்:

பிரபல கன்னட நடிகரான தர்ஷன் லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரை கடந்த மே மாதம் வாங்கினார். பிரகாசமான மஞ்சள் நிறத்தில் அவர் லம்போர்கினி உருஸ் காரை வாங்கியுள்ளார். இது லம்போர்கினி நிறுவனத்தால் பயன்படுத்தப்படும் பிரபலமான 'கலர் ஷேட்' ஆகும். அவரது லம்போர்கினி உருஸ் கார் மஞ்சள் நிற பிரேக் காலிபர்கள் உடன் கருப்பு நிற அலாய் வீல்களை பெற்றுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
4 Popular Lamborghini Urus Owners Of India. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X