கோடைகால வெப்பத்தில் கார்களை பாதுகாப்பது எப்படி?: சிறந்த சில ஐடியாக்கள்

கோடைகால அனலினால் காரினுள் வெப்பம் அதிகரித்து ஓட்டுனர்கள் கார்களை ஓடுவதற்கு மிகவும் கடினமான சூழ்நிலை உண்டாகும். இதனை தவிர்க்க கோடை வெப்பத்தில் கார்களை பாதுகாப்பது எப்படி என சில வழிகளை இந்த செய்தியில் காணலாம்.

கோடைகால வெப்பத்தில் கார்களை பாதுகாப்பது எப்படி?: சிறந்த சில ஐடியாக்கள்

இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் கோடை காலம் முழுமையாக துவங்கும் முன்னரே வெயில் மக்களை வதைக்க ஆரம்பித்துள்ளது. பல நகரங்களில் 100 டிகிரியை நெருங்கியுள்ள வெப்பத்தால் மக்களின் இயல்பு வாழக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெயில் வெப்பத்தில் நாம் குளிரூட்டும் விஷயங்களை செய்து நம்மை பராமரித்து கொள்வது போல கார்களையும் பராமரிக்க வேண்டும்.

கோடைகால வெப்பத்தில் கார்களை பாதுகாப்பது எப்படி?: சிறந்த சில ஐடியாக்கள்

கோடை காலமான மே மற்றும் ஜூன் மாதத்தில் தான் அதிகமாக வெளியூர் பயணங்கள் மற்றும் சுற்றுலா செல்லும் வாய்ப்புகள் உள்ளதால் காரை கூலாக வைப்பது கார் ஓட்டுபவர்களின் சிரமத்தை குறைக்கும். காரினுள் அதிக உஷ்ணம் வராமல் தவிர்க்க காரினுள் குளிர்ந்த நிலையை தக்க வைப்பது மிகவும் அவசியம். குறிப்பாக கோடை காலங்களில் குழந்தைகளுடன் செல்லும்போது காரின் உஷ்ணம் அவர்களை அதிகமா பாதிக்கும். இதனை தவிர்க்க சில வழிமுறைகளை கையாண்டால் வெப்பத்தில் காரினை பாதுக்காக்க முடியும்.

கோடைகால வெப்பத்தில் கார்களை பாதுகாப்பது எப்படி?: சிறந்த சில ஐடியாக்கள்

காரின் டோர்களில் பிரதிபலிப்பான்கள் மற்றும் மறைப்புகள் பொறுத்துவத்தின் மூலம் காரினுள் வரும் வெப்பத்தை கட்டுப்படுத்தலாம். குறிப்பாக தரமான பிரதிபலிப்பான்கள் மற்றும் மறைப்புகள் காரில் பொருத்துவதன் மூலம் காரினுள் வரும் வெப்பம் தடுக்கப்பட்டு குளுமையான சூழல் உருவாகிறது. மேலும் பிரதிபலிப்பான்கள் மற்றும் மறைப்புகள் கார் டோரின் கண்ணாடிகள் மங்காமல் தடுக்க உதவுகிறது. இதனால் டோரின் கண்ணாடிகள் நீண்ட காலம் தாரமாக இருக்கும். பிரதிபலிப்பான்கள் மற்றும் மறைப்புகள் மூலம் காரின் ஓட்டுநர் மட்டுமின்றி பயணிகளும் சிறப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும்.

கோடைகால வெப்பத்தில் கார்களை பாதுகாப்பது எப்படி?: சிறந்த சில ஐடியாக்கள்

காரினை பார்க்கிங் செய்யம்போது நிழலான இடத்தில் பார்க்கிங் செய்வது காரின் வெப்பத்தை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி கார் பெயிண்டின் தன்மை குறையாமல் கட்டுப்படுத்தும். குறிப்பாக மரங்களின் நிழலில் நிறுத்தினால் மரத்தின் குளுமையான காற்று காரினுள் குளிர்ந்த சூழலை அப்படியே வைத்திருக்கும். அதிலும் காரினை நிழலில் நிறுத்தும்போது டோர் கண்ணாடிகளை திறந்து வைத்தால் காற்று உங்கள் காரினுள் உள்ள வெப்பத்தை குறைக்கும். ஆனால் காரினுள் உங்கள் விலையுயர்ந்த பொருட்களை விட்டுச்செல்லாம் இருப்பதை உங்கள் பாதுகாப்பிற்காக உறுதி செய்து கொள்ளுங்கள.

கோடைகால வெப்பத்தில் கார்களை பாதுகாப்பது எப்படி?: சிறந்த சில ஐடியாக்கள்

கோடை காலத்தில் தினமும் காரினை எடுக்கும் முன்பு குளிர்ந்த நீரை காரின் மேல் ஊற்ற வேண்டும் இது காரின் வெப்பத்தை வெகுவாக குறைக்கும். குளிர்ந்த நீர் காரின் வெப்பத்தை வெளியேற்றி இதமான காற்றை காரினுள் செலுத்தி காரினை கூலாக வைத்திருக்கும். மேலும் காரில் செல்லும்போது குறிப்பிட்ட தூரத்திற்கு ஒருமுறை காரின் முன் கண்ணாடியில் குளிர்ந்த நீரை ஊற்றுவதன் மூலம் காரின் முன் கண்ணாடியின் மூலம் வரும் உஷ்ணத்தை குறைக்கலாம்

கோடைகால வெப்பத்தில் கார்களை பாதுகாப்பது எப்படி?: சிறந்த சில ஐடியாக்கள்

காரினை பொது இடங்களில் அல்லாது பொது மால்கள் மற்றும் அப்பார்மெண்ட்களில் உள்ளது போன்ற பேஸ்மன்ட் பார்க்கிங்களில் காரினை நிறுத்தும்போது காரின் டோர் கண்ணாடிகளை திறந்து வைத்து செல்ல வேண்டும். பொதுவாக அது போன்ற பேஸ்மன்ட் பார்கிங்களில் வெயிலின் வெப்பம் குறைவாகவே இருக்கும் ஆகையால் காற்று காரினுள் செல்வதால் காரினுள் உள்ள வெப்பத்தை குறைக்கும். இது குறிப்பாக ஏசி இல்லாத கார்களுக்கு சிறந்த வழியாக இருக்கும்.

Read More:இந்தியர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டி வரும் நான்கு புதிய கார்கள்: மிக விரைவில் அறிமுகம்!

கோடைகால வெப்பத்தில் கார்களை பாதுகாப்பது எப்படி?: சிறந்த சில ஐடியாக்கள்

காரின் ஏசியினை குறிப்பிட்ட காலத்தில் சர்வீஸ் செய்து வைக்க வேண்டும். தவறினால் ஏசி அனல் காற்றினை காரினுள் செலுத்தும் வாய்ப்புள்ளது. மேலும் காரில் செல்லும் பொது ஏசியினை ஆன் செய்த்தவுடன் சிறிது நேரம் காரின் டோர் கண்ணாடிகளை திறந்து வைக்க வேண்டும். இது காரின் வெளியில் இருந்து வரும் குளிர் காற்றை காரினுள் ஏசி மூலம் பரப்புவதற்கும் உதவியாக இருக்கும். ஏசி காற்றுடன் இயற்கை காற்று சேர்ந்தால் காரினுள் இன்னும் குளுமையான சூழல் காணப்படும்.

கோடைகால வெப்பத்தில் கார்களை பாதுகாப்பது எப்படி?: சிறந்த சில ஐடியாக்கள்

மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலமாக கோடைகால வெப்பத்தில் கார்களை சிறப்பாக பாதுகாப்பதுடன் காரின் பெயிண்ட் மற்றும் மிரர்களின் ஆயுட்காலத்தை நீடிக்கவும் உதவுகிறது. காரின் குளுமையான சூழலை பாதுகாப்பதன் மூலம் காரின் என்ஜின் தன்மையும் குறையாமல் பாதுக்காக்க முடியும். கோடை காலத்தில் நம்மை பராமரித்து கொள்வது போல கார்களையும் பராமரிப்பது மிகவும் அவசியமாகும்.

Most Read Articles
English summary
5 Ways to Prevent Your Vehicle: Read More in Tamil
Story first published: Monday, May 6, 2019, 12:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X