2019ல் விற்பனையில் மோதவுள்ள 7 எஸ்யூவி கார்கள்..!!!

இந்த 2019ம் ஆண்டில் டாட்டா, மாருதி, நிஸான் போன்ற முன்னணி கார் நிறுவனங்கள் போட்டிபோட்டு கொண்டு தங்கள் புது ரக கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அப்படி பகையுடன் விற்பனை களத்தில் இறங்கும் 7 புது எஸ்யூவி கார்களை இந்த செய்தியில் காணலாம்.

2019ல் விற்பனையில் மோதவுள்ள 7 எஸ்யூவி கார்கள்..!!!

மாருதி சுசுகி எஸ்-கிராஸ் பெட்ரோல்:

மாருதி சுசுகியின் எஸ்-கிராஸ் போன்ற பிரீமியம் பிளாக்‌ஷிப் கார், நெக்சா விநியோகஸ்தர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதில் மேம்படுத்தப்பட்ட எஸ்-கிராஸ் ஏற்கனவே ஐரோப்பிய சந்தையில் விற்பனையில் சிறப்பான இடத்தை பிடித்தது. டீசல் என்ஜின் உடன் விற்பனைக்கு வந்த எஸ்-கிராஸ் தற்போது பெட்ரோல் என்ஜினுடன் விற்பனைக்கு வரவுள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின் 103 பிஎச்பி பவர் மற்றும் 600 என்.எம் டார்க் திறனை வழங்கும். இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அமைக்கப்பட்டுள்ளது.

2019ல் விற்பனையில் மோதவுள்ள 7 எஸ்யூவி கார்கள்..!!!

மாருதி சுசுகி எர்டிகா கிராஸ்:

மாருதி நிறுவனத்தின் புதிய கார்கள் உருவாக்கப்பட்டு வரும் ஹார்ட்டெக் என்ற புதிய பிளாட்ஃபார்மில் எர்டிகா கிராஸ் கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், எடை குறைந்திருப்பதுடன் அதிக வலுவான கட்டமைப்பை பெற்றிருக்கிறது. இந்தியாவில் விரைவில் அமலுக்கு வர இருக்கும் புதிய கிராஷ் டெஸ்ட் பாதுகாப்பு தர சோதனைகளுக்கு ஈடுகொடுக்கும் பாதுகாப்பு அம்சங்களையும் பெற்றிருக்கிறது. 6 சீட்கள் கொண்ட இந்த கார் ஸ்போர்ட்ஸ் காரை போன்று டிசைன் செய்யப்பட்டுள்ளது.

2019ல் விற்பனையில் மோதவுள்ள 7 எஸ்யூவி கார்கள்..!!!

கியா எஸ்பி:

தென் கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் 2019ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் கால்பதிக்கிறது. இந்நிறுவனம் தயாரித்து வரும் புதிய கார்களை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியிருந்தது. அந்த நிகழ்ச்சியில் கியா மோட்டார்ஸ் வெளியிட்ட எஸ்பி காம்பேக்ட் எஸ்யூவி கார் பெரியளவில் இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்தது. இந்தியாவின் எதிர்கால எஸ்யூவி கார் தேவைகளை கருதி, அதற்கேற்றவாறான கட்டமைப்பு நிலைப்பாடு, ஸ்போர்டி திறன் மற்றும் நீண்ட ஹூடு பகுதிகளை இந்த கார் பெற்றிருப்பது அசத்தலாக உள்ளது.

2019ல் விற்பனையில் மோதவுள்ள 7 எஸ்யூவி கார்கள்..!!!

மஹிந்திரா எக்ஸ்யூவி 300:

இந்தியாவை சேர்ந்த ஆட்டோ தயாரிப்பு நிறுவனமாக மஹிந்திரா நிறுவனம், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி 300 உயர் ரக எஸ்யூவி வரும் பிப்ரவரி மாதம் 15ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த சப்-4 மீட்டர் எஸ்யூவி-கள் மாருதி விட்டாரா ப்ர்ஸ்சா, டாடா நெக்ஸோன் மற்றும் ஃபோர்டு ஈகோஸ்போர்ட் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.எக்ஸ்யூவி 300 சன்ரூப், டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 7-ஏர்பேக்ஸ், குரூஸ் கண்ட்ரோல், ESP, ஆல் 4 டிஸ்க் பிரேக், லெதர் சீட்கள் போன்றவைகளை கொண்டிருக்கும். மேலும் 6 மேனுவல் கியர் வசதி. ஆட்டோமேட்டிக் கியர் வசதி என இரு தேர்வுகளில் வருகிறது.

2019ல் விற்பனையில் மோதவுள்ள 7 எஸ்யூவி கார்கள்..!!!

டாடா ஹாரியர்:

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும், புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி வரும் ஜனவரி 23ம் தேதி விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், டாடா ஹாரியர் எஸ்யூவியானது முதலில் டீசல் எஞ்சின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே வர இருப்பது உறுதியாகி இருக்கிறது.இது லேண்ட்ரோவர் நிறுவனத்தின் டி8 பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்படுவதுதான். ஆம். லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் உருவாக்கப்பட்ட எல்550 பிளாட்ஃபார்ம் அடிப்படையிலான டாடாவின் ஒமேகா பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

2019ல் விற்பனையில் மோதவுள்ள 7 எஸ்யூவி கார்கள்..!!!

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி:

நிஸான் கிக்ஸ் டஸ்ட்டர், டெரானோ ஆகிய எஸ்யூவி மாடல்கள் உருவாக்கப்பட்ட, நிஸான் - ரெனோ கூட்டணியின் B0 பிளாட்ஃபார்மில் புதிய கிக்ஸ் எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் மாடல் பரிமாணத்தில் சற்று பெரிய காராக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.டெரானோ எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்கள்தான் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட இருக்கின்றன. மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வரும்.

MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!

2019ல் விற்பனையில் மோதவுள்ள 7 எஸ்யூவி கார்கள்..!!!

எம்ஜி ஹெக்டர்:

இங்கிலாந்தை சேர்ந்த பழமையான கார் நிறுவனம் எம்ஜி மோட்டார்ஸ் தற்போது சீனாவை சேர்ந்த செயிக் வாகன குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய விற்பனையில் எம்ஜி நிறுவன முதல் மாடலாக எஸ்யூவி ரக கார் மாடலான எம்ஜி ஹெக்டர் இந்த ஆண்டு இறுதியில் விறபனைக்கு வரவுள்ளது. புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி 5 சீட்டர் மாடலாக பிரிமியம் ரகத்தில் வர இருக்கிறது. எனினும், ஜீப் காம்பஸ் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களைவிட வடிவத்தில் பெரிய மாடலாக இருக்கும். எனவே, இடவசதியில் சிறப்பான மாடலாக வாடிக்கையாளர்களை கவரும்.

Most Read Articles
English summary
7 New Rivals To Face Tough Competition: Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X