எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி குறித்த நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி வரும் 27ந் தேதி விற்பனைக்கு வர இருக்கிறது. மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் அதிக தொழில்நுட்ப அம்சங்களுடன் புதிய எம்ஜி ஹெக்டர் வர இருக்கிறது. இந்த நிலையில், இந்த புதிய எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும் சில முக்கிய அம்சங்களை பகிர்ந்து கொள்கிறோம்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி குறித்த நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்!

வெவ்வேறு பிராண்டுகளில்...

சீனாவை சேர்ந்த செயிக் குழுமத்தின் கீழ்தான் இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார்ஸ் இயங்கி வருவது தெரிந்த விஷயம்தான். ஆனால், எம்ஜி ஹெக்டர் சீனாவில் விற்பனையாகும் பவ்ஜுன் 530 எஸ்யூவியின் ரீபேட்ஜ் வெர்ஷனாக இந்தியாவில் வர இருக்கிறது. இதே பவ்ஜுன் 530 எஸ்யூவி எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியாக மட்டுமல்லாமல், புதிய செவர்லே கேப்டிவா மற்றும் விலிங் அல்மாஸ் ஆகிய பிராண்டுகளில் விற்பனை செய்யப்படுவது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமாக கூறலாம்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி குறித்த நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்!

முக்கிய வசதிகள்

புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் நேரடி இன்டர்நெட் இணைப்பை பெறுவதற்கான சிம் கார்டுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட இருக்கிறது. இதன் மூலமாக ஜியோ ஃபென்சிங், நேவிகேஷன் உள்ளிட்ட 50 விதமான வசதிகளை பெற முடியும். கியா செல்டோஸ் காரில் 37 வசதிகளை யுவோ கனெக்ட் அப்ளிகேஷன் மூலமாக பெற முடியும். ஆனால், இந்த காரில் அதனைவிட அதிக அளவிலான வசதிகளை பெறும் வாய்ப்பு உள்ளது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி குறித்த நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்!

சாய்மான வசதி

புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் சாய்மான வசதியை வழங்கும் பின் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், நீண்ட தூர பயணங்களின்போது பின் இருக்கை பயணிகள் மிக சாவகாசமான பயண அனுபவத்தை பெற முடியும். இந்த எஸ்யூவியின் பின் இருக்கையை 25 டிகிரி வரை சாய்த்துக் கொள்ள முடியும்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி குறித்த நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்!

அதிக வீல் பேஸ்

புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி இதன் ரகத்திலேயே அதிக வீல் பேஸ் கொண்ட மாடல். இந்த காரின் வீல்பேஸ் 2,750 மிமீ ஆக உள்ளது. இதனால், உட்புறத்தில் அதிக இடவசதியை பயணிகளுக்கு வழங்குகிறது. மேலும், 587 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் உள்ளது. போட்டியாளர்களைவிட அதிக இடவசதி, பூட்ரூம் கொள்திறன் இதன் மிக முக்கிய அம்சமாக இருக்கும்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி குறித்த நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்!

360 டிகிரி கேமரா

புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் 360 டிகிரி கேமரா கொடுக்கப்பட இருக்கிறது. காரை சுற்றிலும் முழுமையாக கண்காணித்து பார்க்கிங் செய்வதற்கு இது ஏதுவாக அமையும். குறிப்பாக, நெருக்கடியான பார்க்கிங் பகுதிகளில் இந்த கேமரா சிறந்த பாதுகாப்பை அளிக்கும். ஆனால், இந்த 360 டிகிரி கேமரா வசதி டாப் வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்பட உள்ளது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி குறித்த நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்!

சன்ரூஃப்

மிட்சைஸ் எஸ்யூவி கார்களில் மிகப்பெரிய சன்ரூஃப் எனப்படும் கண்ணாடி கூரை அமைப்பை இந்த கார் பெற்றிருக்கிறது. அதுவும் டியூவல் பேன் எனப்படும் இரட்டை கண்ணாடி கூரை அமைப்புடன் வருவதும் முக்கிய விஷயம். இதுவும் ஷார்ப் என்ற டாப் வேரியண்ட்டில் மட்டுமே கொடுக்கப்பட இருக்கிறது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி குறித்த நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்!

ஹைப்ரிட் மாடல்

புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் வழங்கப்பட இருக்கிறது. இதுதவிர்த்து, 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 48V மைல்டு ஹைப்ரிட் மாடலிலும் வருகிறது. இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அளிக்கப்படும். இந்த மாடல் லிட்டருக்கு 15.81 கிமீ மைலேஜை வழங்கும்.

Most Read Articles
English summary
Here are some interesting features and facts about the upcoming MG Hector SUV. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X