வாகன நிறுவனங்களால் விவசாயிகளின் வருவாயை உயர்த்த முடியும்... எப்படி தெரியுமா? பாஜக அமைச்சர் செம ஐடியா

வாகன நிறுவனங்கள் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த முடியும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

வாகன நிறுவனங்களால் விவசாயிகளின் வருவாயை உயர்த்த முடியும்... எப்படி தெரியுமா? பாஜக அமைச்சர் செம ஐடியா

இந்தியா தற்போது எதிர்கொண்டு வரும் மிக முக்கியமான பிரச்னைகளில் ஒன்று காற்று மாசுபாடு. தலைநகர் டெல்லியே காற்று மாசுபாடு பிரச்னையில் சிக்கி தவித்து கொண்டிருப்பது இதற்கு ஓர் உதாரணம். டெல்லி காற்று மாசுபாடு பிரச்னை பத்திரிக்கைகளில் அவ்வப்போது தலைப்பு செய்தியாக மாறி விடுகிறது. இதே போன்று நாட்டின் பல்வேறு நகரங்களும் காற்று மாசுபாடு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளன.

வாகன நிறுவனங்களால் விவசாயிகளின் வருவாயை உயர்த்த முடியும்... எப்படி தெரியுமா? பாஜக அமைச்சர் செம ஐடியா

பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள்தான் காற்று மாசுபாடு பிரச்னைக்கு மிக முக்கியமான காரணமாக உள்ளன. எனவே இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

வாகன நிறுவனங்களால் விவசாயிகளின் வருவாயை உயர்த்த முடியும்... எப்படி தெரியுமா? பாஜக அமைச்சர் செம ஐடியா

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு, ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் போன்றவற்றை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

வாகன நிறுவனங்களால் விவசாயிகளின் வருவாயை உயர்த்த முடியும்... எப்படி தெரியுமா? பாஜக அமைச்சர் செம ஐடியா

இந்த சூழலில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தற்போது ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். பயோ எரிபொருள் சார்ந்த வாகனங்களை உருவாக்க வேண்டும் என ஆட்டோமொபைல் நிறுவனங்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.

வாகன நிறுவனங்களால் விவசாயிகளின் வருவாயை உயர்த்த முடியும்... எப்படி தெரியுமா? பாஜக அமைச்சர் செம ஐடியா

விவசாயம் சார்ந்த எரிபொருளில் இயங்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தி செய்ய வேண்டும் என அவர் கேட்டு கொண்டுள்ளார். தற்போதைய நிலையில் இந்தியா எதிர்கொண்டு வரும் மிக முக்கியமான சவால்களில் ஒன்றாக காற்று மாசுபாடு பிரச்னை இருப்பதாக அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

வாகன நிறுவனங்களால் விவசாயிகளின் வருவாயை உயர்த்த முடியும்... எப்படி தெரியுமா? பாஜக அமைச்சர் செம ஐடியா

எனவே மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களை தயாரிப்பதில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் என நிதின் கட்கரி கேட்டு கொண்டுள்ளார். இது இந்தியாவின் சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்கு உதவி செய்வதோடு, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கும் உதவும் எனவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

வாகன நிறுவனங்களால் விவசாயிகளின் வருவாயை உயர்த்த முடியும்... எப்படி தெரியுமா? பாஜக அமைச்சர் செம ஐடியா

மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்கள் இந்தியாவிற்கு எவ்வளவு அவசியம் என்பதை நிதின் கட்கரி மிக நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மாற்று எரிபொருட்களில் ஓடும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவையும் குறைக்க முடியும்.

வாகன நிறுவனங்களால் விவசாயிகளின் வருவாயை உயர்த்த முடியும்... எப்படி தெரியுமா? பாஜக அமைச்சர் செம ஐடியா

இதனிடையே பாஸ்ட்டேக் குறித்த முக்கிய தகவல் ஒன்றையும் அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில், 50 சதவீதத்திற்கும் அதிகமான பரிவர்த்தனைகள் பாஸ்ட்டேக் மூலம் ஏற்கனவே நடைபெறுவதாக நிதின் கட்கரி கூறியுள்ளார். கடந்த டிசம்பர் 1ம் தேதி முதல், அனைத்து வாகனங்களுக்கும், பாஸ்ட்டேக் கட்டாயம் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

வாகன நிறுவனங்களால் விவசாயிகளின் வருவாயை உயர்த்த முடியும்... எப்படி தெரியுமா? பாஜக அமைச்சர் செம ஐடியா

ஆனால் டிசம்பர் 1ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்படவில்லை. அதற்கு பதிலாக 15 நாள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன்படி வரும் டிசம்பர் 15 முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வாகன உரிமையாளர்கள் தற்போது பாஸ்ட்டேக்கை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Most Read Articles
English summary
Air Pollution: Nitin Gadkari Urges Automobile Manufacturers To Develop Biofuel-Based Vehicles. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X