தன் பெயருடைய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த பிரபல விளையாட்டு வீரர்: யாரென தெரிந்தால் ஆச்சரியம் உறுதி

பிரபல விளையாட்டு வீரர் ஒருவர் தன் பெயரை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனத்தின் எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

தன் பெயர் கொண்ட எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த பிரபல விளையாட்டு வீரர்: யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தை மையமாகக் கொண்டு இயங்கும் போல்ட் மொபிலிட்டி நிறுவனம், நகரவாசிகளின் பயன்பாட்டை மனதில் கொண்டு, மைக்ரோ ரகத்திலான பி-நானோ என்ற எலக்ட்ரிக் காரை தயாரித்துள்ளது.

டிரைவருடன் சேர்த்து இருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அந்த காரை, போல்ட் நிறுவனம் தற்போது பிரான்ஸில் நடைபெற்றும் வைவா டெக்னாலஜி கூட்டத்தில் அறிமுகம் செய்துள்ளது.

தன் பெயர் கொண்ட எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த பிரபல விளையாட்டு வீரர்: யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

மேலும், சிறப்பாக இந்த காரை விளையாட்டு வீரரான உசைன் போல்டை வைத்து அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இத்துடன், காருக்கு பி-நானோ என்ற பெயரை வைத்து அவருக்கு சிறப்பு சேர்த்துள்ளது (பி-என்பது போல்டை குறிக்கும்). இத்துடன் சில மைக்ரோ ரகத்திலான எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும், இந்த கண்காட்சியில் அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

தன் பெயர் கொண்ட எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த பிரபல விளையாட்டு வீரர்: யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

போல்ட் நிறுவனம், எலக்ட்ரிக் கார் மட்டுமின்றி மைக்ரோ ரகத்திலான எலக்ட்ரிக் இ-ஸ்கூட்டர்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றது. இதன்காரணமாகவே, தற்போது சில மைக்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை, இரண்டு மைல் தூரத்திற்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

தன் பெயர் கொண்ட எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த பிரபல விளையாட்டு வீரர்: யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

பி-நானே காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 24 கிமீ தூரம் வரை செல்லலாம். அதற்கேற்ப திறனுள்ள பேட்டரிகள் இதில் வழங்கப்பட்டுள்ளன. இவை கழட்டி மாட்டிக் கொள்ளும் தன்மையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகையால், வழியில் சார்ஜ் இல்லாமல் கார் நின்றுவிட்டால் தள்ளிக்கொண்டு போய் சார்ஜ் செய்வதை தவிர்த்து, பேட்டரியை மட்டும் கழட்டி சென்று சார்ஜ் செய்துக் கொள்ளலாம்.

தன் பெயர் கொண்ட எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த பிரபல விளையாட்டு வீரர்: யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

இரண்டு கதவுகளைக் கொண்ட இந்த காரில் இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து செல்ல முடியும். அதற்கான இடவசதிகள் மட்டுமே இதில் வழங்கப்பட்டுள்ளன. அதேசமயம், இந்த கார் குறித்த மற்ற தொழில்நுட்ப அம்சங்களின் தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

தன் பெயர் கொண்ட எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த பிரபல விளையாட்டு வீரர்: யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

சியாட் நிறுவனம், அதன் குவாட்ரிசைக்கிள் ரகத்திலான மைக்ரை காரை கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்தது. இதற்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில், தற்போது இந்த பி-நானோ உருவாகி வருகின்றது. ஆனால், இந்த கார் உற்பத்தியானது 2021ம் ஆண்டுதான் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இதற்கான புக்கிங் தற்போதிலிருந்தே நடைபெற்று வருவதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பி-நானோ காரானது ரைட்-ஷேரிங் நோக்கத்திற்காகவே தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாகவே, இந்த கார்களில் கழட்டி மாட்டிக்கொள்ளும் வகையிலான பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மைக்ரோ காரைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பேட்டரி தீர்ந்துவிட்டாலோ அல்லது சேருமிடத்தை அடைந்துவிட்டாலே நினைத்து இடத்தில் விட்டுவிட்டு சென்றுவிடலாம்.

தன் பெயர் கொண்ட எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த பிரபல விளையாட்டு வீரர்: யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

அவ்வாறு, விட்டு செல்லப்பட்ட கார்களின் பேட்டரியை போல்ட் நிறுவனத்தின் ஊழியர்கள் மாற்றிவிடுவார்கள். மேற்படி, அடுத்த வாடிக்கையாளர் கொண்டு செல்லும்படி, அந்த காரைத் தயார் செய்வார்கள் அல்லது நிறுத்தப்பட்ட மைக்ரோ கார்களை, வேன் மூலம் அங்கிருந்து அகற்றி போல்டின் மையத்திற்கு கொண்டு சென்று சார்ஜ் செய்வார்கள்.

தன் பெயர் கொண்ட எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த பிரபல விளையாட்டு வீரர்: யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

ஆகையால், இந்த கார் முழுக்க நகர வாசிகளின் பயன்பாட்டை கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டிருப்பது, இந்த நடவடிக்கைகளின் மூலம் தெரிய வருகிறது. ஆனால், இதுபோன்ற சேவை இந்தியாவில் பயன்பாட்டிற்கு வருமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது.

Most Read Articles
English summary
All-Electric Bolt B-Nano Revealed. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X