புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது!

பெரும் ஆவலை ஏற்படுத்தி இருக்கும் புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி காருக்கு முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது!

ஹூண்டாய் நிறுவனம் 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் வடிவமைக்கப்பட்ட புதிய வெனியூ எஸ்யூவியை அண்மையில் இந்தியாவிலும், நியூயார்க் ஆட்டோ ஷோவிலும் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்தது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு செல்ல இருக்கும் இந்த புத்தம் புதிய எஸ்யூவி வரும் 21ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது!

இந்த நிலையில், ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு இன்றுமுதல் அதிகாரப்பூர்வமாக முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. ஆன்லைனிலும், டீலர்களிலும் முன்பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது!

ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்கள் ஹூண்டாய் வெனியூ காரின் எஞ்சின், கியர்பாக்ஸ், வசதிகளின் அடிப்படையில் வேரியண்ட்டையும், உங்களுக்கு அருகாமையிலுள்ள டீலர் விபரத்தையும் பதிவு செய்து முன்பதிவு செய்யலாம். ரூ.21,000 முன்பணத்துடன் முன்பதிவு ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது!

எனினும், இன்று சில டீலர்களில் இதுகுறித்து வினவியபோது, நாளை முன்பதிவு துவங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரகசியமாக சில டீலர்களில் முன்பதிவு செய்யப்பட்டு வந்தநிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக முன்பதிவு துவங்கி இருப்பதால், வாடிக்கையாளர்களின் காத்திருப்புக்கு முடிவு கிடைத்துள்ளது. ஆன்லைனில், வரும் 20ந் தேதி வரை முன்பதிவு ஏற்றுக்கொள்ளப்பட உள்ளது.

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது!

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு அதிக அளவில் முன்பதிவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பல காரணங்களை முன்வைக்கலாம். க்ரெட்டா எஸ்யூவி மூலமாக எஸ்யூவி விரும்பிகளின் மனதில் சிறப்பான இடத்தை ஹூண்டாய் பதிய வைத்துள்ளது.

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது!

அழகிய டிசைன், சிறந்த தொழில்நுட்ப வசதிகள், மூன்றுவிதமான எஞ்சின் தேர்வுகள், கைக்கு தோதான பட்ஜெட் ஆகியவை புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு அதிக வரவேற்பை பெற்றுத் தரும் என்று தெரிகிறது.

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது!

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் புரொஜெக்டர் பனி விளக்குகள், எல்இடி பகல்நேர விளக்குகள், வயர்லெஸ் சார்ஜர், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பல்வேறு வசதிகளை அள்ளித் தரும் புளூலிங்க் மொபைல்போன் செயலி, அர்கமிஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது!

சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், கார்னரிங் விளக்குகள், கூல்டு க்ளவ் பாக்ஸ் ஆகியவையும் இடம்பெற இருக்கிறது. அதேபோன்று, இந்த காரின் டாப் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் அசிஸ்ட், பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட பல பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட உள்ளன.

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது!

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் 82 பிஎச்பி பவரையும், 116 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 118 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட இருக்கின்றன. இதில், 1.0 லிட்டர் டர்போ எஞ்சினுடன் டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் வழங்கப்படும்.

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது!

டீசல் மாடலில் இருக்கும் 1.4 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும் 220 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடலானது மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வரும் என்று தெரிகிறது. போட்டியாளர்களுக்கு சளைக்காத அளவில் இதன் மைலேஜ் இருக்கும் என்று கருதப்படுகிறது.

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது!

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியானது ரூ.7.5 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
All New Hyundai Venue Bookings Open in India.
Story first published: Thursday, May 2, 2019, 14:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X