புதிய ரெனோ ட்ரைபர் பட்ஜெட் எம்பிவி கார்... 8 முக்கிய அம்சங்கள்!

ரெனோ ட்ரைபர் பட்ஜெட் எம்பிவி கார் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காரின் முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டிசைன்

டிசைன்

ரெனோ க்விட் காரின் டிசைன் தாத்பரியங்களை கொண்ட பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் போல டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள் உள்ளிட்டவற்றுடன் பிரிமீயம் கார் போல அசத்தலாக இருக்கிறது. இந்த காரின் டிசைன் இந்தியர்களை நிச்சயம் கவரும்.

இன்டீரியர்

இன்டீரியர்

புதிய ரெனோ ட்ரைபர் கார் பட்ஜெட் விலை மாடலாக இருந்தாலும், கருப்பு- கிரீயேஜ் என இரட்டை வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸடம், எம்ஐடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், தட்டையான அ்டிப்பாகத்துடன் கூடிய ஸ்டீயரிங் வீல் ஆகியவை இந்த காரின் இன்டீரியரை பிரிமீயம் கார் போல காட்டுகிறது.

பரிமாணம்

பரிமாணம்

புதிய ரெனோ ட்ரைபர் கார் 4 மீட்டர் நீளத்திற்குள் வடிவமைக்கப்பட்டு இருக்கும் 7 சீட்டர் மாடலாக வந்துள்ளது. ட்ரைபர் கார் 2,636 மிமீ வீல் பேஸ் கொண்டதாக இருக்கிறது. போதுமான இடவசதியை அளிக்கும் விதத்தில் இன்டீரியர் மிக சிறப்பான வடிவமைப்பை பெற்றிருக்கிறது.

கிரவுண்ட் கிளியரன்ஸ்

கிரவுண்ட் கிளியரன்ஸ்

புதிய ரெனோ ட்ரைபர் கார் 182 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருக்கிறது. 7 பேருடன் சென்றாலும், காருக்கும், தரைக்கும் போதிய இடைவெளி இருக்கும். ஸ்கிட் பிளேட்டும் உள்ளது. எனவே, அச்சப்படாமல் ஓட்டிச் செல்வதற்கான வாய்ப்பை வழங்கும்.

இருக்கை அமைப்பு

இருக்கை அமைப்பு

புதிய ரெனோ ட்ரைபர் காரின் மிக முக்கிய அம்சம், இந்த கார் 5 சீட்டர், 6 சீட்டர், 7 சீட்டர் மாடல்களில் வர இருக்கிறது. மேலும், மூன்றாவது வரிசை இருக்கையை கழற்றி மாட்ட முடியும். கடைசி வரிசை இருக்கைகள் இல்லாமல், 5 சீட்டர் மாடலாக பயன்படுத்தும்போது 625 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியை பெற முடியும்.

வசதிகள்

வசதிகள்

புதிய ரெனோ ட்ரைபர் காரின் டாப் வேரியண்ட்டில் எல்இடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், இரண்டு ஏசி அவுட்லெட்டுகள், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கூல்டு கிளவ் பாக்ஸ் ஆகியவை இடம்பெற இருக்கிறது. இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் மூலமாக, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை இணைக்க முடியும். அத்துடன் புஷ் டு டார்க் மற்றும் வீடியோ பிளேபேக் வசதிகளையும் வழங்கும். இந்த காரில் கீ லெஸ் என்ட்ரி வசதி, புஷ் பட்டன் ஸ்டார்ட் ஆகிய வசதிகளை ஸ்மார்ட் கார்டு என்ற மின்னணு சாவி மூலமாக இயக்க முடியும்.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

டாப் வேரியண்ட்டில் 4 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா, ஹை ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், சீட் பெல்ட் வார்னிங் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற இருக்கின்றன.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

பண்டிகை காலத்தில் இந்த புதிய ரெனோ ட்ரைபர் எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.5.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரையிலான அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது. டட்சன் கோ ப்ளஸ் மற்றும் மாருதி எர்டிகா கார்களுக்கு இடையிலான ரகத்தில் நிலைநிறுத்தப்படும்.

MOST READ: ஹூண்டாய் வெனியூ கார் டெலிவிரி துவங்கியது... வாடிக்கையாளர்கள் குஷி

Most Read Articles
மேலும்... #ரினால்ட்
English summary
Here are five things that you need to know about Renault’s all new compact MPV, Triber. Read in Tamil.
Story first published: Sunday, June 23, 2019, 10:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X