புதிய ரெனோ ட்ரைபர் எம்பிவி காரின் அறிமுகம் எப்போது?

ரெனோ ட்ரைபர் எம்பிவி கார் எப்போது அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்ற விபரம் உள்பட பல முக்கிய தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ரெனோ ட்ரைபர் எம்பிவி காரின் அறிமுகம் எப்போது?

ரெனோ நிறுவனம் புதிய பட்ஜெட் எம்பிவி காரை உருவாக்கி இருக்கிறது. இதுவரை RBC என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்பட்டு வந்த இந்த காரின் பெயர் நேற்று வெளியிடப்பட்டது. ரெனோ ட்ரைபர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய 7 சீட்டர் கார் பட்ஜெட் விலையில் வர இருப்பதால் பெரும் ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.

புதிய ரெனோ ட்ரைபர் எம்பிவி காரின் அறிமுகம் எப்போது?

ரெனோ க்விட் மற்றும் கேப்ச்சர் கார்களின் டிசைன் தாத்பரியங்கள் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருப்பது டீசர் மூலமாக தெரிய வருகிறது. மேலும், எல்இடி பகல்நேர விளக்குகள், வி வடிவிலான முகப்பு க்ரில் அமைப்பு, பெரிய ஜன்னல் கண்ணாடிகள் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக தெரிகின்றன.

புதிய ரெனோ ட்ரைபர் எம்பிவி காரின் அறிமுகம் எப்போது?

ரெனோ- நிஸான் கூட்டணியின் CMF-A+ பிளாட்ஃபார்மில்தான் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. டட்சன் கோ காரின் கூடுதல் நீளம் கொண்ட மாடலாக டட்சன் கோ ப்ளஸ் கார் வடிவமைக்கப்பட்டு இருப்பது போலவே, ரெனோ க்விட் காரின் கூடுதல் நீளம் கொண்ட மாடலாக இருக்கும் என்று தெரிகிறது. எனினும், டட்சன் கோ ப்ளஸ் காரின் குறைகளை நிவர்த்தி செய்து இந்த காரை ரெனோ உருவாக்கி இருப்பதாக கருதப்படுகிறுத.

புதிய ரெனோ ட்ரைபர் எம்பிவி காரின் அறிமுகம் எப்போது?

இந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கும். ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும்.. இந்த கார் 4 மீட்டர் நீளத்திற்குள் இருக்கும் என்பதால் வரிச்சலுகையை பெறும் வாய்ப்புளளது. இதனால், விலை சவாலாக இருக்கும்.

புதிய ரெனோ ட்ரைபர் எம்பிவி காரின் அறிமுகம் எப்போது?

மேலும், இந்த காரில் பல்வேறு எஞ்சின் ஆப்ஷன்கள் சொல்லப்பட்ட நிலையில், ரெனோ க்விட் காரில் பயன்படுத்தப்படும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் பயன்படுத்தப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால், இது 7 எச்பி பவரை கூடுதலாக வெளிப்படுத்தும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ரெனோ ட்ரைபர் எம்பிவி காரின் அறிமுகம் எப்போது?

இந்த எஞ்சினின் டர்போசார்ஜர் கொண்ட மாடலும் பின்னர் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய ரெனோ ட்ரைபர் எம்பிவி காரின் அறிமுகம் எப்போது?

புதிய ரெனோ ட்ரைபர் கார் வரும் ஜூலை மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த புதிய மினி எம்பிவி கார் ரூ.5.5 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் விலையில் வரும் 7 சீட்டர் மாடல் என்பதால் வரவேற்பை பெறும் என்று தெரிகிறது.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault will launch it new mini MPV - is calleed Triber in July this year.
Story first published: Friday, April 5, 2019, 10:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X