புதிய டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் 7 முக்கிய அம்சங்கள்

டாடா அல்ட்ராஸ் கார் பொது பார்வைக்கு வந்துவிட்டது. விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த கார் போட்டியாளர்களைவிட சவாலான விலையில் எதிர்பார்க்கப்படுவதால், புத்தாண்டில் கார் வாங்க திட்டமிட்டிருப்போரின் தேர்வு பட்டியலில் இணைந்துள்ளது. அத்துடன், இந்த கார் போட்டியாளர்களைவிட கூடுதல் மதிப்பை தரும் சில விஷயங்களுடன் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கிறது.

புதிய டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் 7 முக்கிய அம்சங்கள்

டாடா அல்ட்ராஸ் வாய்ஸ் பாட்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இந்த வசதியை அல்ட்ராஸ் காரை வாங்க பிரியப்படுவோருக்காக அறிமுகப்படுத்தி உள்ளது. ஸ்மார்ட்ஃபோனில் கூகுள் அசிஸ்டென்ட் வசதியை வைத்திருப்போர், Okay Google, Talk To Altroz என்று கூறினால், இந்த கார் பற்றிய சிறப்பம்சங்கள், படங்கள் என அனைத்து விஷயங்களையும் கூகுள் மூலமாகவே பெற முடியும். காரை முன்பதிவு செய்யும் வசதி, டெஸ்ட் டிரைவ் செய்வதற்கான முன்பதிவு, ஷோரூம் தேர்வு என அனைத்தையும் இந்த வசதி மூலமாக வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

புதிய டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் 7 முக்கிய அம்சங்கள்

முதல்முறையாக...

பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் முதல்முறையாக தட்டையான அடிப்பாகத்துடன் ஸ்டீயரிங் வீல், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், பவர் டெயில்கேட் ஓபன் வசதி, விரைவாக ஸ்மார்ட்ஃபோன் சார்ஜ் செய்வதற்கான சார்ஜர், ஏறி, இறங்க வசதியாக 90 டிகிரி கோணம் வரை விரிவடையும் கதவுகள், ஸ்மார்ட் ஸ்டார்ட்- ஸ்டாப் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் 7 முக்கிய அம்சங்கள்

பிஎஸ்-6 எஞ்சின்கள்

டாடா அல்ட்ராஸ் காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் உள்ளன. பெட்ரோல் மாடலில் இருக்கும் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 86 எச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 90 எச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

புதிய டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் 7 முக்கிய அம்சங்கள்

வேரியண்ட்டுகள்

இந்த கார் வசதிகளை பொறுத்து 9 விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கும். எக்ஸ்இ, எக்ஸ்இ ரிதம், எக்ஸ்எம், எக்ஸ்எம் ரிதம், எக்ஸ்எம் ஸ்டைல், எக்ஸ்டி, எக்ஸ்டி அர்பன், எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்இசட் ஆப்ஷன் பேக் ஆகிய வேரியண்ட்டுகளில் வர இருக்கிறது. இதில், முழுமையான அனைத்து வசதிகளும் எக்ஸ்இசட் வேரியண்ட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் 7 முக்கிய அம்சங்கள்

வண்ணத் தேர்வுகள்

புதிய டாடா அல்ட்ராஸ் கார் அவெனியூ ஒயிட், ஸ்கைலைன் சில்வர், டவுன்டவுன் ரெட், ஹைஸ்ட்ரீட் கோல்டு மற்றும் மிட்டவுன் க்ரே ஆகிய 5 விதமான வண்ணத் தேர்வுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது.

புதிய டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் 7 முக்கிய அம்சங்கள்

முக்கிய வசதிகள்

இந்த காரில் ஆட்டோமேட்டிக் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, கூல்டு க்ளவ் பாக்ஸ் ஆகிய வசதிகளையும் பெற்றிருக்கிறது.

புதிய டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் 7 முக்கிய அம்சங்கள்

முன்பதிவு

புதிய டாடா அல்ட்ராஸ் காருக்கு ரூ.21,000 முன்பணத்துடன் டீலர்களில் முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. வரும் ஜனவரியில் விற்பனைக்கு அறிமுகமாக உள்ளது. ரூ.5.5 லட்சம் முதல் ரூ.8.5 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Here is everything that you need to know about the all new Tata Altroz premium hatchback car.
Story first published: Thursday, December 5, 2019, 15:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X