வேறொருவரின் பெயரில் எலெக்ட்ரிக் காரை வாங்கிய அம்பானி... எதற்காக இப்படி வாங்கினார் தெரியுமா?

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் என்று புகழப்படும் முகேஷ் அம்பானி வேறொருவரின் பெயரில் எலெக்ட்ரிக் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதற்கான காரணத்தை இந்த பதிவில் விரிவாக காணலாம்.

வேறொருவரின் பெயரில் எலெக்ட்ரிக் காரை வாங்கிய அம்பானி... எதற்காக இப்படி வாங்கினார் தெரியுமா?

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர்தான் முகேஷ் அம்பானி. இவரை இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர் என்று மட்டுமே கூறிவிட முடியாது. ஏனென்றால், உலக பணக்காரர்களின் பட்டியலிலும் இவர் முன்னணி இடத்தில் இருக்கின்றனர்.

வேறொருவரின் பெயரில் எலெக்ட்ரிக் காரை வாங்கிய அம்பானி... எதற்காக இப்படி வாங்கினார் தெரியுமா?

இத்தகைய செல்வந்ததாரரான முகேஷ் அம்பானி, பல விலையுயர்ந்த சொகுசு கார்களை தன் வசம் வைத்துள்ளார். அண்மையில்கூட சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை வாங்கியிருந்தார். இந்த கார் அதிநவீன பாதுகாப்பு அம்சம் கொண்ட காராகும். வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி தாக்குதல் என பலவற்றை தாங்கிக் கொள்ளும் சக்தி கொண்டது இது.

வேறொருவரின் பெயரில் எலெக்ட்ரிக் காரை வாங்கிய அம்பானி... எதற்காக இப்படி வாங்கினார் தெரியுமா?

அதேசமயம், இந்த கார் சொகுசு விஷயத்திலும் சலைத்தது அல்ல என கூறப்படுகின்றது. இதுமட்டுமின்றி, முகேஷ் அம்பானியின் கார் நிறுத்தி வைக்கும் கராஜில் ஏகப்பட்ட சொகுசு கார்களின் அணி வகுப்பு இருக்கின்றன.

அந்தவகையில், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன், லம்போர்கினி உருஸ், பென்ட்லீ பென்டேகா உள்ளிட்ட பல்வேறு விலையுயர்ந்த கார்கள் காணப்படுகின்றன.

வேறொருவரின் பெயரில் எலெக்ட்ரிக் காரை வாங்கிய அம்பானி... எதற்காக இப்படி வாங்கினார் தெரியுமா?

முகேஷ் அம்பானி மட்டுமின்றி அவரது குடம்பத்தினர் அனைவருமே கார் விரும்பிகள் என கூறப்படுகின்றது. இதன்காரணமாகவே, அவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கான தனித்துவமான கார்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனை, முகேஷ் அம்பானி குடும்பத்தினரின் கான்வாயை பார்த்தாலே நமக்கு புரிந்துவிடும்.

வேறொருவரின் பெயரில் எலெக்ட்ரிக் காரை வாங்கிய அம்பானி... எதற்காக இப்படி வாங்கினார் தெரியுமா?

மேலும், இவர்கள் வைத்திருக்கும் கார்களுக்கென முகேஷ் அம்பானியின் மும்பை வீட்டில் 6 தளங்கள் நிறுவப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்தகைய செல்வந்ததாரர், டெஸ்லா நிறுவனத்தின் மாடல் எஸ் தானியிங்கி எலெக்ட்ரிக் காரை செகண்ட் ஹேண்டாக வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேறொருவரின் பெயரில் எலெக்ட்ரிக் காரை வாங்கிய அம்பானி... எதற்காக இப்படி வாங்கினார் தெரியுமா?

உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி ஏன் இந்த காரை செகண்ட் ஹேண்டாக வாங்கியுள்ளார் என்ற தகவல் வேடிக்கையாக இருக்கின்றது. இதனை நாம் கீழே பார்க்கலாம்...

வேறொருவரின் பெயரில் எலெக்ட்ரிக் காரை வாங்கிய அம்பானி... எதற்காக இப்படி வாங்கினார் தெரியுமா?

முகேஷ் அம்பானியின் இந்த கார்குறித்த புகைப்படம் நிர்மீத் பட்டில் என்ற இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர் மூலம் வெளியுலகிற்கு வந்துள்ளது. இதன் பதிவெண்ணைக் கொண்டு ஆய்வு செய்ததில், இதனை முகேஷ் அம்பானி செகண்ட் ஹேண்டாக வாங்கியுள்ளார் என்பது தெரியவந்தது.

இதற்கான ஆதாரமாக உள்ள புகைப்படத்தை நீங்கள் கீழே காணலாம்.

வேறொருவரின் பெயரில் எலெக்ட்ரிக் காரை வாங்கிய அம்பானி... எதற்காக இப்படி வாங்கினார் தெரியுமா?

டெஸ்லா நிறுவனத்தின் கார்கள் இன்னும் இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை. ஆகையால், இதனை முகேஷ் அம்பானி வெளிநாட்டில் இருந்து பிரத்யேகமாக இறக்குமதி செய்துள்ளார்.

இவ்வாறு, இறக்குமதி செய்ததன் காரணத்தினாலயே, இந்த காரை செகண்ட் ஹேண்டாக வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், இந்த முகேஷ் அம்பானிக்கு ஏற்றுமதி செய்த நிறுவனம், முதலில் அவருடைய பெயரிலேயே பதிவு செய்துள்ளார். இதன் பின்னரே, முகேஷ் அம்பானிக்கு டெலிவரி செய்துள்ளார்.

வேறொருவரின் பெயரில் எலெக்ட்ரிக் காரை வாங்கிய அம்பானி... எதற்காக இப்படி வாங்கினார் தெரியுமா?

இதனாலயே, இந்த காரை அவர் செகண்ட் ஹேண்டாக வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த கார் முகேஷ் அம்பானிக்காகவே சிறப்பாக ஏற்றுமதி செய்யப்பட்டு அவருக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

வேறொருவரின் பெயரில் எலெக்ட்ரிக் காரை வாங்கிய அம்பானி... எதற்காக இப்படி வாங்கினார் தெரியுமா?

டெஸ்லா நிறுவனத்தின் மாடல் எஸ் கார் அதிக திறன் கொண்டதாக இருக்கின்றது. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார் 423 பிஎஸ் பவரையும், 660 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இது வெறும் 4.3 செகண்டிலேயே 0-த்தில் இருந்து 100 கிமீ வேகத்தைத் தொட்டுவிடும். அதேசமயம், இதன் உச்சபட்ச வேகம் 250 கிமீ வேகமாக இருக்கின்றது.

வேறொருவரின் பெயரில் எலெக்ட்ரிக் காரை வாங்கிய அம்பானி... எதற்காக இப்படி வாங்கினார் தெரியுமா?

டெஸ்லா மாடல் எஸ் கார் ஒரு முழுமையான சார்ஜில் 495 கிமீ வரை செல்லும். இதற்கேற்ப 100kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை வெறும் 42 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 396 கிமீ தூரம் வரை செல்லும். இது இந்தியாவில் இன்னும் விற்பனைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இதனை இறக்குமதி செய்தல் உள்ளிட்ட பல காரணங்களால் சுமார் 1.5 கோடி ரூபாய் வரை செலவு செய்து முகேஷ் அம்பானி வாங்கியுள்ளார்.

வேறொருவரின் பெயரில் எலெக்ட்ரிக் காரை வாங்கிய அம்பானி... எதற்காக இப்படி வாங்கினார் தெரியுமா?

அதேசமயம், இந்த கார் அமெரிக்காவில் இந்திய ரூபாய் மதிப்பில் 73 லட்சத்திற்கு மட்டுமே விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. 100 சதவீத இறக்குமதி என்பதால் முகேஷ் அம்பானி இரு மடங்கு தொகை கொடுத்து அந்த காரை வாங்கியுள்ளார். இதில், பதிவு மற்றும் காப்பீட்டு தொகை அடங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ambani Bought A Tesla Model S Second Hand? Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X