மோடிக்கு எதிராக சித்து விளையாட்டை ஆரம்பித்த சந்திரபாபு நாயுடு... பாஜக அதிர்ச்சியடைய காரணம் இதுதான்

பிரதமர் மோடிக்கு எதிராக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது சித்து விளையாட்டை ஆரம்பித்துள்ளார். இதனால் பாஜக கூடாரம் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

பிரதமர் மோடிக்கு எதிராக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது சித்து விளையாட்டை ஆரம்பித்துள்ளார். இதனால் பாஜக கூடாரம் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

பிராமண இளைஞர்களுக்கு மட்டும் கார்கள்... அரசின் திடீர் சலுகைக்கு காரணம் இதுதான்...

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடைபெற்று கொண்டுள்ளது. இந்த சூழலில், அங்குள்ள பிராமண இளைஞர்களுக்கு கார் வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு தற்போது செயல்படுத்தியுள்ளது.

பிராமண இளைஞர்களுக்கு மட்டும் கார்கள்... அரசின் திடீர் சலுகைக்கு காரணம் இதுதான்...

பிராமண இளைஞர்களுக்கு வழங்குவதற்காக முதற்கட்டமாக 50 மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) கார்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், 30 கார்கள் நேற்று (ஜன.4) பிராமண இளைஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

பிராமண இளைஞர்களுக்கு மட்டும் கார்கள்... அரசின் திடீர் சலுகைக்கு காரணம் இதுதான்...

ஆந்திர மாநிலத்தின் அமராவதி நகரில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். பின்னர் மாருதி சுஸுகி டிசையர் கார்களின் சாவிகளை, 30 பிராமண இளைஞர்களுக்கு அவர் வழங்கினார்.

பிராமண இளைஞர்களுக்கு மட்டும் கார்கள்... அரசின் திடீர் சலுகைக்கு காரணம் இதுதான்...

தற்போதைய நிலையில், வேலையில்லாமல் இருக்கும் பிராமண இளைஞர்களுக்கு மட்டும் மாருதி சுஸுகி டிசையர் கார்கள் வழங்கப்படுகின்றன. இந்த கார்கள் 5.60-9.45 லட்ச ரூபாய் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பிராமண இளைஞர்களுக்கு மட்டும் கார்கள்... அரசின் திடீர் சலுகைக்கு காரணம் இதுதான்...

ஆனால் கார்களை வாங்குவதற்கு பிராமண நல சங்கம் தலா 2 லட்ச ரூபாயை மானியமாக வழங்குகிறது. எனவே காரின் விலையில் 10 சதவீத தொகையை மட்டும் பயனாளிகள் செலுத்தினால் போதும். எஞ்சிய தொகையை, ஆந்திர பிரதேச பிராமண கூட்டுறவு கடன் சங்கம், தவணை முறை கடனாக வழங்குகிறது.

பிராமண இளைஞர்களுக்கு மட்டும் கார்கள்... அரசின் திடீர் சலுகைக்கு காரணம் இதுதான்...

வேலையில்லாமல் உள்ள பிராமண இளைஞர்களின் குடும்ப நலனிற்காக மாருதி சுஸுகி டிசையர் கார்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள இந்த கார்களை டாக்ஸிகளாக இயக்கி, அவர்கள் வருமானம் ஈட்ட முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பிராமண இளைஞர்களுக்கு மட்டும் கார்கள்... அரசின் திடீர் சலுகைக்கு காரணம் இதுதான்...

இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியின்படி, மாருதி சுஸுகி டிசையர் கார்களை தவிர, இளைஞர்களுக்கு 1.40 கோடி ஸ்மார்ட் போன்கள் வழங்கும் திட்டத்தையும் ஆந்திர பிரதேச அரசு அறிவித்துள்ளது. ஸ்மார்ட் போன்கள் வாழ்க்கையை எளிதாக்கும் என அம்மாநில அரசு கூறியுள்ளது.

பிராமண இளைஞர்களுக்கு மட்டும் கார்கள்... அரசின் திடீர் சலுகைக்கு காரணம் இதுதான்...

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. இதன் பதவிக்காலம் வெகு விரைவில் முடிவடைய உள்ளது. எனவே இன்னும் ஒரு சில மாதங்களில் நாடாளுமன்றத்திற்கு பொது தேர்தல் நடக்கவுள்ளது.

பிராமண இளைஞர்களுக்கு மட்டும் கார்கள்... அரசின் திடீர் சலுகைக்கு காரணம் இதுதான்...

இந்த பொது தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் மிக தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆனால் ஆந்திர பிரதேச மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி நாடாளுமன்ற பொது தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகி கொண்டுள்ளது.

பிராமண இளைஞர்களுக்கு மட்டும் கார்கள்... அரசின் திடீர் சலுகைக்கு காரணம் இதுதான்...

ஆம், அங்கு இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது. இதன் காரணமாகதான் மாருதி சுஸுகி டிசையர் கார் மற்றும் ஸ்மார்ட் போன்கள் போன்ற பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளை ஆந்திர பிரதேச அரசு வழங்கி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

பிராமண இளைஞர்களுக்கு மட்டும் கார்கள்... அரசின் திடீர் சலுகைக்கு காரணம் இதுதான்...

குறிப்பாக பாஜகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என கங்கணம் கட்டி கொண்டது போல் சந்திரபாபு நாயுடு செயல்பட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக வெளியாகி வரும் கார், ஸ்மார்ட் போன் போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளால், பாஜக அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இதுதவிர பாஜகவிற்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளையும் சந்திரபாபு நாயுடு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிராமண இளைஞர்களுக்கு மட்டும் கார்கள்... அரசின் திடீர் சலுகைக்கு காரணம் இதுதான்...

இதனிடையே ஆல் நியூ மாருதி சுஸுகி டிசையர் கார் கடந்த 2018ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வாடிக்கையாளர்கள் வழங்கிய அமோக வரவேற்பின் காரணமாக, டிசையர் காரின் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியது.

பிராமண இளைஞர்களுக்கு மட்டும் கார்கள்... அரசின் திடீர் சலுகைக்கு காரணம் இதுதான்...

இதன்மூலம் மிகவும் புகழ்பெற்ற மாருதி சுஸுகி ஆல்டோவையே பின்னுக்கு தள்ளி விட்டு, மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் காராக டிசையர் உருவெடுத்தது. ஆல் நியூ டிசையர் கார், புதிய ஹார்ட்டெக்ட் (HEARTECT) பிளாட்பார்மை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

பிராமண இளைஞர்களுக்கு மட்டும் கார்கள்... அரசின் திடீர் சலுகைக்கு காரணம் இதுதான்...

1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் மாருதி சுஸுகி டிசையர் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் டிசையர் டீசல் கார்களின் உற்பத்தியை மட்டும் நிறுத்தி விட மாருதி சுஸுகி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது.

பிராமண இளைஞர்களுக்கு மட்டும் கார்கள்... அரசின் திடீர் சலுகைக்கு காரணம் இதுதான்...

அனேகமாக 2020ம் ஆண்டு முதல், அதாவது அடுத்த ஆண்டு முதல், டிசையர் டீசல் கார்களின் உற்பத்தியை மாருதி சுஸுகி நிறுவனம் கைவிடலாம் என கூறப்படுகிறது. மாருதி சுஸுகி டிசையர் காரானது செடான் வகையை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Andhra Pradesh CM Chandrababu Naidu Distributed Maruti Suzuki Dzire Cars To Unemployed Brahmin Youth
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X