அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் முதல் சொகுசு எஸ்யூவி அறிமுகம்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் சொகுசு ரக எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் சிறப்பம்சங்கள், படங்கள் உள்ளிட்ட முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் முதல் சொகுசு எஸ்யூவி அறிமுகம்!

அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவியானது ஃபாஸ்ட்பேக் என்று குறிப்பிடப்படும் டிசைன் மொழியில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அஸ்டன் மார்ட்டின் 106 ஆண்டு கால வரலாற்றில் முதல் எஸ்யூவி மாடலாக குறிப்பிடப்படுகிறது. அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் தனித்துவமான டிசைன் தாத்பரியங்கள் இந்த புதிய எஸ்யூவியில் காண முடிகிறது. எனினும், மிகவும் தனித்துவமான சொகுசு எஸ்யூவி ரக மாடலாக வந்துள்ளது.

அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் முதல் சொகுசு எஸ்யூவி அறிமுகம்!

அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் புதிய தலைமுறை கார்களுக்கான கட்டமைப்பில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழுவதும் உறுதிமிக்க அலுமினிய கலவை பாகங்கள் கொண்டு கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால், மிகவும் உறுதியான, இலகுவான கட்டமைப்பை பெற்றிருக்கிறது.

அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் முதல் சொகுசு எஸ்யூவி அறிமுகம்!

புதிய அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவி 2,245 கிலோ எடை கொண்டது. இந்த கார் விசேஷமான ஏர் சஸ்பென்ஷன் அமைப்பை பெற்றிருக்கிறது. இந்த கார் 5 பேர் பயணிப்பதற்கான இருக்கை வசதியுடன் மிக சொகுசான எஸ்யூவி மாடலாக வந்துள்ளது.

அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் முதல் சொகுசு எஸ்யூவி அறிமுகம்!

முன்புறத்தில் அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் பாரம்பரிய க்ரில் அமைப்பு, போர்ஷே கார்கள் போன்ற சாயலில் அழகிய ஹெட்லைட்டுகள், வலிமையான அலாய் வீல்கள், பின்புறத்தில் ஸ்போர்ட்ஸ் கார்கள் போன்ற சாயல் ஆகியவை இந்த காரை மிகவும் தனித்துவமாக காட்டுகிறது.

அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் முதல் சொகுசு எஸ்யூவி அறிமுகம்!

இந்த காரில் 48 வோல்ட் எலெக்ட்ரிக் மோட்டார் துணையுடன் இயங்கும் ஆன்ட்டி கன்ட்ரோல் சிஸ்டமும் உள்ளது. இந்த சிஸ்டத்தின் மூலமாக காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் எனப்படும் தரை இடைவெளியை 45 மிமீ அதிகரிக்கவும், 50 மிமீ வரை குறைக்கவும் முடியும். குறிப்பாக, ஆஃப்ரோடு பயன்பாட்டின்போது இது மிகவும் உதவிகரமாக இருக்கும்.

அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் முதல் சொகுசு எஸ்யூவி அறிமுகம்!

அஸ்டன் மார்ட்டின் வாண்டேஜ் மற்றும் டிபி11 கார்களில் பயன்படுத்தப்படும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்சின்தான் இந்த காரிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 550 பிஎஸ் பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் முதல் சொகுசு எஸ்யூவி அறிமுகம்!

இந்த காரில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 0 - 100 கிமீ வேகத்தை 4.5 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 219 கிமீ வேகம் வரை செல்வதற்கான திறனையும் வழங்குகிறது. இந்த காரில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது. ஆக்டிவ் சென்டர் டிஃபரன்ஷியல் மற்றும் எலெக்ட்ரானிக் லிமிடேட் ரியர் டிஃபரன்ஷியல் ஆகியவையும் இருப்பது ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு சிறந்ததாக இருக்கும்.

அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் முதல் சொகுசு எஸ்யூவி அறிமுகம்!

புதிய அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவி இந்திய மதிப்பில் ரூ.1.50 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு மத்தியில் சர்வதேச அளவில் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்தியாவிலும் இந்த புதிய சொகுசு ரக எஸ்யூவியை எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
British luxury car maker, Aston Martin has launched their first ever SUV named as DBX.
Story first published: Thursday, November 21, 2019, 11:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X