அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் சூப்பர் கார் அறிமுகம்!

அஸ்டன் மார்ட்டின் முதல் எலெக்ட்ரிக் சூப்பர் கார் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் சூப்பர் கார் அறிமுகம்!

இங்கிலாந்தை சேர்ந்த அஸ்டன் மார்ட்டின் நிறுவனம் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. மேலும், ஜேம்ஸ்பாண்ட் படங்களின் ஆஸ்தான கார் மாடல்களாகவும் விளங்குகின்றன. இந்த நிலையில், எதிர்கால வர்த்தகத்தை மனதில் வைத்து எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.

அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் சூப்பர் கார் அறிமுகம்!

அதன்படி உருவாக்கப்பட்ட முதல் எலெக்ட்ரிக் சூப்பர் கார் மாடலை ஷாங்காய் மோட்டார் ஷோவில் அஸ்டன் மார்ட்டின் காட்சிக்கு வைத்திருக்கிறது. அஸ்டன் மார்ட்டின் ரேபிட் இ என்ற பெயரிலான இந்த மாடல் விரைவில் உற்பத்திக்கு கொண்டு செல்வதற்கான தகுதிகளை பெற்றிருக்கிறது.

அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் சூப்பர் கார் அறிமுகம்!

இந்த கார் மிகச் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் தத்துவத்தில் வடிவமைக்கப்பட்டு இருப்பதால் சிறப்பான மின் சேமிப்பு திறனை வழங்கும். இந்த காரில் இருக்கும் 10 அங்குல டிஜிட்டல் திரை மூலமாக ஓட்டுனர் பல்வேறு தகவல்களை பெற முடியும்.

அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் சூப்பர் கார் அறிமுகம்!

பேட்டரியில் சார்ஜ் அளவு, மின் மோட்டார் வெளிப்படுத்தும் திறன் அளவு, நிகழ்நேர மின் உபயோக அளவு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும். சார்ஜ் ஏறுவதை மொபைல்போன் அப்ளிகேஷன் மூலமாகவே தெரிந்துகொள்ள முடியும்.

அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் சூப்பர் கார் அறிமுகம்!

வழக்கமாக அஸ்டன் மார்ட்டின் ரேபிட் காரில் உயிர்கொடுக்கும் வி12 எஞ்சினுக்கு இணையான செயல்திறனை வழங்கும் 65kWh திறன் கொண்ட 800V பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் மின் மோட்டார் 950 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் சூப்பர் கார் அறிமுகம்!

அஸ்டன் ரேபிட் இ காரின் பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் வரை பயணிக்கும். மணிக்கு 249 கிமீ வேகம் வரை பயணிக்கும். 0 - 97 கிமீ வேகத்தை வெறும் 4 வினாடிகளில் எட்டிவிடும் திறன் படைத்ததாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் சூப்பர் கார் அறிமுகம்!

அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படத்தில் இந்த ரேபிட் இ கார் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், ஆன்லைன் மூலமாக முன்பதிவும் ஏற்றுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், விலை விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

Most Read Articles
English summary
Aston Martin's First Electric Supercar Debuts at Shanghai Auto Show
Story first published: Thursday, April 18, 2019, 10:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X