அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவிக்கு இந்தியாவில் முன்பதிவு!

அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவிக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவிக்கு இந்தியாவில் முன்பதிவு!

இங்கிலாந்தை சேர்ந்த அஸ்டன் மார்ட்டின் நிறுவனம் உயர்வகை ஸ்போர்ட்ஸ் மற்றும் சொகுசு கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், அந்நிறுவனத்தின் 106 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக சொகுசு எஸ்யூவி மாடலை உருவாக்கியுள்ளது.

அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவிக்கு இந்தியாவில் முன்பதிவு!

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவி சொகுசு கார் பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில், ஆட்டோகார் புரோஃபஷனல் தளத்திற்கு பேட்டியளித்துள்ள அஸ்டன் மார்ட்டின் தலைவர் ஆன்டி பால்ரமர்," எஸ்யூவி கார் சந்தை கார் நிறுவனங்களுக்கு மிக முக்கியமான வர்த்தக வாய்ப்பை வழங்கி வருகிறது. எனவே, எஸ்யூவி மாடல் அவசியமானதாக கருதுகிறோம்.

அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவிக்கு இந்தியாவில் முன்பதிவு!

அடுத்த ஆண்டு ஏப்ரல்- ஜூன் இடையிலான காலக்கட்டத்தில் உலகின் பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. சீனாவில் ஹோமோலேகஷன் எனப்படும் அந்நாட்டு விதிகளுக்குப்பட்டு டிசைன் மற்றும் தொழில்நுட்ப அளவில் மாற்றங்கள் செய்வதற்கு கூடுதல் காலம் தேவைப்படும்.

அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவிக்கு இந்தியாவில் முன்பதிவு!

உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்டது முதலே, டிபிஎஸ் எஸ்யூவிக்கு இந்தியாவில் உள்ள டீலர்களிலும் முன்பதிவு ஏற்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த ஆண்டு இந்தியாவில் பல புதிய டீலர்களையும் திறக்க இருப்பதாக தெரிவித்தார்.

MOST READ: தமிழக அரசு பஸ்கள் இனி வேற லெவல்... அடித்து தூள் கிளப்பும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...

அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவிக்கு இந்தியாவில் முன்பதிவு!

இதன்மூலமாக, விற்பனை எண்ணிக்கை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான விற்பனைக்கு பிந்தைய சேவை தரத்தை மேம்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். ஆண்டுக்கு தற்போது 15 முதல் 20 கார்களை இந்தியாவில் அஸ்டன் மார்ட்டின் விற்பனை செய்கிறது.

MOST READ: 15 மனைவிகளுக்காக 19 ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் வாங்கிய மன்னர்... விலை மதிப்பை கேட்டு மயக்கம் போட்றாதீங்க

அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவிக்கு இந்தியாவில் முன்பதிவு!

புதிய அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவி கடந்த வாரம் புதன்கிழமை உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்டது.இ ந்த எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்வேளை விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

MOST READ: பிஎஸ்-6 கார்கள் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மாருதி சுஸுகி... என்னவென்று தெரியுமா?

அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவிக்கு இந்தியாவில் முன்பதிவு!

இந்த காரில் 4.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகப்டசமாக 542 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த காரில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த காருக்கு 1.58 லட்சம் பவுண்ட்டுகள் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.1.35 கோடி மதிப்புடையதாக இருக்கிறது.

Source: Autocar Pro

Most Read Articles

English summary
According to a media report, Aston Martin has opened bookings for the DBX in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X