உலகின் முதல் பாதுகாப்பான எலக்ட்ரிக் கார்: இதில் சென்றால் எமனால் கூட உங்களை நெருங்க முடியாது...!

ஆடி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் காரான இ-ட்ரானை, ஐரோப்பா என்சிஏபி அமைப்பு கிராஷ் டெஸ்ட் செய்திருப்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.

உலகின் முதல் பாதுகாப்பான எலக்ட்ரிக் கார்: இதில் சென்றால் எமனால் கூட உங்களை நெருங்க முடியாது - முழு விபரம்!

ஆடி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் காரான இ-ட்ரானை, சர்வதேச என்சிஏபி அமைப்பு கிராஷ் டெய்ஸ்ட் பரிசோதனை செய்தது. ஐரோப்பாவில் நடைபெற்ற இந்த பரிசோதனையில் இ-ட்ரான் கார் ஐந்துக்கு 5 ஸ்டார்களைப் பெற்று பாதுகாப்பு மிகுந்த கார் என்ற புகழைச் சூடியுள்ளது.

உலகின் முதல் பாதுகாப்பான எலக்ட்ரிக் கார்: இதில் சென்றால் எமனால் கூட உங்களை நெருங்க முடியாது - முழு விபரம்!

ஜெர்மன் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஆடி நிறுவனம், இ-ட்ரான் காரை கடந்த மார்ச் மாதம் பாங்காக்கில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்திருந்தது. எஸ்யூவி ரகத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த எலக்ட்ரிக் கார், தொழில்நுட்பம், சொகசு, பாதுகாப்பு என அனைத்திலும் பிரம்மிக்க வைக்கும் அளவில் தயாராகி இருக்கின்றது.

உலகின் முதல் பாதுகாப்பான எலக்ட்ரிக் கார்: இதில் சென்றால் எமனால் கூட உங்களை நெருங்க முடியாது - முழு விபரம்!

அந்தவகையில், இந்த இ-ட்ரான் காரின் பாதுகாப்பு அம்சத்தை உறுதி செய்யும் வகையில் தற்போது நடைபெற்றுள்ள க்ராஷ் டெஸ்ட் பரிசோதனையின் ரிசல்ட் வெளி வந்துள்ளது. இந்த கார் பெரியவர்களின் பாதுகாப்பிற்கு 91 சதவீதத்தையும், குழந்தைகளுக்கு 85 சதவீத பாதுகாப்பையும் விபத்தின்போது வழங்கும் என்பது உறுதியாகியுள்ளது. கூடுதலாக, 76 சதவிகிதம் பாதுகாப்பு உதவி வழங்குவதிலும், 71 சதவிகிதம் பாதிக்கப்பட்ட சாலை பயனர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த இ-ட்ரான் இருக்கின்றது.

உலகின் முதல் பாதுகாப்பான எலக்ட்ரிக் கார்: இதில் சென்றால் எமனால் கூட உங்களை நெருங்க முடியாது - முழு விபரம்!

பரிசோதனையில், இ-ட்ரான் காரின் முன் பகுதியில் அமர்ந்து செல்லும் இரு பயணிகளின் மூட்டுப் பகுதிக்கும் நல்ல பாதுகாப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, பயணிகளின் தலைக்கு பாதிக்கு ஏற்படாத வண்ணம் காரின் மேற்கூரை மற்றும் ஏர் பேக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பயணிகளின் மார்பக பகுதி பாதிப்புக்குள்ளாவதைத் தடுக்க குறைவான வழிமுறைகளே உள்ளது. இது சற்று ஏமாற்றமாக இருக்கின்றது.

உலகின் முதல் பாதுகாப்பான எலக்ட்ரிக் கார்: இதில் சென்றால் எமனால் கூட உங்களை நெருங்க முடியாது - முழு விபரம்!

மேலும், இந்த கார் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தொழில்நுட்பத்தைப் பெற்றுள்ளது. இ-ட்ரான் காரின் பேட்டரிகள், காரின் ஆக்ஸில்களுக்கு இடையில், கீழ் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையினால், காரின் இடவசதி குறைவது தடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த காரின் கிராவிட்டி அமைப்பு செடான் ரக காரில் இருப்பதைப் போன்று அமைக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் பாதுகாப்பான எலக்ட்ரிக் கார்: இதில் சென்றால் எமனால் கூட உங்களை நெருங்க முடியாது - முழு விபரம்!

அந்தவகையில், இதன் ஆக்ஸில்கள் 50:50 ரேசியோ என்ற பகிர்வில் கட்டுப்பாட்டை காரின் அனைத்து பகுதிகளுக்கும் கடத்துகிறது. இதனால், கார் எளிதில் கவிழ்ந்து விடும் என்ற அச்சமான சூழல் தவிர்க்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் பாதுகாப்பான எலக்ட்ரிக் கார்: இதில் சென்றால் எமனால் கூட உங்களை நெருங்க முடியாது - முழு விபரம்!

ஆடி நிறுவனத்தின் இந்த பிரத்யேகமான எலக்ட்ரிக் காரில், சுற்றுப்புறச்சூழலுக்கு துளியும் பாதிப்பு ஏற்படுத்தாத பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. அந்தவகையில், இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார் 300kW மற்றும் 664 என்எம்டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

இதன் அதிகபட்ச டாரக் திறனானது, மிக மிக குறைவான, அதாவது ஒரு செகண்டிற்குள்ளாகவே வெளிப்படுத்தும் தன்மையைப் பெற்றிருக்கின்றது. அவ்வாறு, இந்த கார் வெறும் 5.7 செகண்டுகளிலேயே 100 கிமீ வேகத்தை எளிதில் தொட்டுவிடும். அதேசமயம், இந்த இ-ட்ரான் மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்லும் திறனுடையதாக இருக்கின்றது. மேலும், இதில் வழங்கப்பட்டுள்ள எஃபிசியன்ஸி அசிஸ்ட் மோட், காரை எக்கனாமிக்கல் ஸ்டைலில் இயக்க உதவுகிறது.

உலகின் முதல் பாதுகாப்பான எலக்ட்ரிக் கார்: இதில் சென்றால் எமனால் கூட உங்களை நெருங்க முடியாது - முழு விபரம்!

இத்துடன் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் நவீன வசதிகளாக நேவிகேஷன் எல்டிஇ கன்னெக்டிவிட்டியுடன் கூடிய எம்எம்ஐ மீடியா சென்டர் மற்றும் வைபை ஹாட்ஸ்பாட் தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், விர்ட்சுவல் எக்ஸ்டீரியர் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. கண்ணாடி அமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள இந்த கேமிராக்கள், பக்கவாட்டில் வரும் வாகனங்கள் குறித்த தகவலை காரின் கதவுகளில் பொருத்தப்பட்டிருக்கும் பேட் மூலம் காட்சியாக வழங்கும்.

உலகின் முதல் பாதுகாப்பான எலக்ட்ரிக் கார்: இதில் சென்றால் எமனால் கூட உங்களை நெருங்க முடியாது - முழு விபரம்!

ஆடி இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்திய வருகை குறித்த தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், பல்வேறு சர்வதேச வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதன் எலக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்வதில் முனைப்பு காட்டி வருகின்றன. அந்தவகையில், இ-ட்ரான் காருக்கு இணையான வாகனம் கூடிய விரைவில் இந்திய எலக்ட்ரிக் கார்கள் சந்தையில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
Audi e-tron Scores Five Stars At Euro NCAP. Read In tamil.
Story first published: Saturday, May 25, 2019, 11:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X