ரூ. 50 லட்சம் மதிப்புள்ள ஆடி காரை டிராக்டராக மாற்றிய விவசாயி... வீடியோ...!

ரூ. 50 லட்சம் மதிப்புள்ள ஆடி காரை இந்திய விவசாயி ஒருவர், டிராக்டராக பயன்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ரூ. 50 லட்சம் மதிப்புள்ள ஆடி காரை டிராக்டராக மாற்றிய விவசாயி... வீடியோ...!

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சொகுசு கார்களில் ஆடி நிறுவனத்தின் தயாரிப்புகளும் முன்னணி இடத்தை பிடித்துள்ளது. அந்தவகையில், இந்தியாவில் உள்ள பல திரைப்பட நட்சத்திரங்களின் மிகவும் பிடித்தமான காராக அந்நிறுவனத்தின் க்யூ5 மாடல் இருக்கின்றது.

ரூ. 50 லட்சம் மதிப்புள்ள ஆடி காரை டிராக்டராக மாற்றிய விவசாயி... வீடியோ...!

இது, அந்நிறுவனத்தின்மூலம் வெளிவரும் மிட் சைஸ் எஸ்யூவி ரக காராகும். அதேசமயம், இந்த கார், இந்திய திரை நட்சத்திரங்கள் மட்டுமின்றி பல முன்னணி தொழிலதிபர்களின் விருப்பம் நிறைந்த காராகவும் இருக்கின்றது.

இவ்வாறு, பலதரப்பட்டவர்களின் விருப்ப காராக ஆடி க்யூ5 திகழ, அந்த காரில் இடம்பெற்றிருக்கும் நவீன சொகுசு வசதி மற்றும் லக்சூரியஸ் வசதிகளே முக்கிய காரணமாக இருக்கின்றது.

ரூ. 50 லட்சம் மதிப்புள்ள ஆடி காரை டிராக்டராக மாற்றிய விவசாயி... வீடியோ...!

இந்த கார், இந்தியாவில் ரூ. 50 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகின்றது.

இது போன்ற சில காரணங்களால், பெரும்பாலனோர் இந்த காரை மிகவும் நேர்த்தியாக, பார்த்து பார்த்து பயன்படுத்தி வருகின்றனர். மேலும், அதனை அதிக பொருட்செலவில் பராமரித்தும் வருகின்றனர்.

ரூ. 50 லட்சம் மதிப்புள்ள ஆடி காரை டிராக்டராக மாற்றிய விவசாயி... வீடியோ...!

ஆனால், இதற்கு மாற்றாக ஆடி க்யூ 5 காரை, இந்திய விவசாயி ஒருவர் டிராக்டராக மாற்றி பயன்படுத்தியுள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த வீடியோவில், ஆடி காரின் உரிமையாளர் ஒருவர், காரின் பின்பகுதியில் நிலத்தை உழுவதற்கு பயன்படுத்தப்படும் டிராக்டர் களப்பையை, டோவ் செய்ய பயன்படுத்தப்படும் ஹூக்கில் பொருத்தி, நிலத்தை உழுதுள்ளார்.

ரூ. 50 லட்சம் மதிப்புள்ள ஆடி காரை டிராக்டராக மாற்றிய விவசாயி... வீடியோ...!

தண்ணீர் நிறைந்த அந்த நிலம், ஆடி கார் மேலே செல்லுவதற்கு இடையூறாக இருக்கின்றது. இருப்பினும், அதன் டிரைவர், அதனை விட்டுக்கொடுக்காமல், அதிகளவில் ரேஸ் செய்து காரை இயக்கிக்கொண்டே இருக்கின்றார்.

இதுகுறித்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்...

இதுபோன்ற, காரணங்களாலேயே மிகப்பெரிய அளவில் சக்கரம் அல்லது இரும்பு வீல்களைக் கொண்ட டிராக்டர்கள் நிலத்தை உழ பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ரூ. 50 லட்சம் மதிப்புள்ள ஆடி காரை டிராக்டராக மாற்றிய விவசாயி... வீடியோ...!

ஆனால், இந்த விதியை மாற்றியமைக்கும் விதமாக விவசாயி ஒருவர் க்யூ5 மாடலை மிகவும் வேடிக்கையாக பயன்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் நிகழ்ந்த இடம் மற்றும் அந்த விவசாயி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், அந்த காரின் வீடியோக் காட்சிகள் மட்டும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரகின்றது.

ரூ. 50 லட்சம் மதிப்புள்ள ஆடி காரை டிராக்டராக மாற்றிய விவசாயி... வீடியோ...!

ஆடி நிறுவனம், இந்த க்யூ5 மடாலை கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அப்போது டீசல் வேரியண்ட் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆகையால், இதன் பெட்ரோல் வேரியண்ட் சற்று கால தாமதாக கடந்த ஜூன் மாதமே இந்தியாவில் அறிமுகம் செய்தது.

ரூ. 50 லட்சம் மதிப்புள்ள ஆடி காரை டிராக்டராக மாற்றிய விவசாயி... வீடியோ...!

இந்த காரில், ஆடி க்யூ7 மாடலில் பயன்படுத்தப்படும், அதே 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின்தான் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இது, அதிகபட்சமாக 250 பிஎச்பி பவரையும், 370 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

மேலும், இந்த காரில் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு உள்ளது. இத்துடன், ஆடி நிறுவனத்தின் பிரபலமான க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரூ. 50 லட்சம் மதிப்புள்ள ஆடி காரை டிராக்டராக மாற்றிய விவசாயி... வீடியோ...!

இத்துடன் இந்த காரில் நவீன வசதியாக 8.3 அங்குல திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது, கூகுள் எர்த் மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காரில் 12.3 அங்குல திரையுடன் கூடிய விர்ச்சுவல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் இணைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் அளவு, ஸ்பீடோ மீட்டர், செல்லும் தூரம், வேகம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வழங்கும்.

ரூ. 50 லட்சம் மதிப்புள்ள ஆடி காரை டிராக்டராக மாற்றிய விவசாயி... வீடியோ...!

அதேபோன்று, இந்த காரில் பேங்க் அண்ட் ஒலுப்சென் 3டி சவுண்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், 10 ஜிபி ஸ்டோரேஜ், ஸ்மார்ட்போன் இணைப்பு, வாய்ஸ் கன்ட்ரோல், ஒயர்லெஸ் சார்ஜ், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே உள்ளிட்ட ஏராளமான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

ரூ. 50 லட்சம் மதிப்புள்ள ஆடி காரை டிராக்டராக மாற்றிய விவசாயி... வீடியோ...!

இத்துடன், ஆபத்தை உணர்ந்து செயல்படும் மோதல் தவிர்ப்பு தொழில்நுட்பம், ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த காரில் இடம்பெற்றுள்ளன.

இத்தகைய சிறப்பு வசதிகளைப் பெற்ற இந்த ஆடி க்யூ5 எஸ்யூவி கார் இந்தியாவில் ரூ.55.27 - ரூ.59.79 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Audi Q5 Luxury SUV Working As A Tractor In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X