ஆடி க்யூ8 எஸ்யூவி மாடலின் இந்திய அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக வெளியானது...

ஜெர்மன் நாட்டை சேர்ந்த விலையுயர்ந்த கார்களை தயாரிக்கும் நிறுவனமான ஆடி அதன் புதிய தனித்துவமான க்யூ8 எஸ்யூவி காரை 2020 ஜனவரி 15ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த மாடல் காரை 2025ஆம் ஆண்டு வரை இந்திய மார்கெட்டில் வலுப்படுத்தவுள்ளதாகவும் ஆடி நிறுவனம் கூறியுள்ளது.

ஆடி க்யூ8 எஸ்யூவி மாடலின் இந்திய அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக வெளியானது...

இந்த க்யூ8 எஸ்யூவியின் அறிமுகம் குறித்து ஆடி நிறுவனத்தின் இந்திய நாட்டிற்கான முதன்மை அதிகாரி பால்பிர் சிங் தில்லோன் கூறுகையில், 2025 ஆம் ஆண்டு வரையில் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த சி மற்றும் டி வகை கார்கள் ஒரு வகையில் உதவிகரமாக இருக்கும். எங்களது நிறுவனம் மற்றொரு தயாரிப்பை அறிமுகப்படுத்தும் வரை டி வகையில் உள்ள ஆடி க்யூ8 மாடல் கார் மிகுந்த ஒத்துழைப்பை தரும் என நம்புகிறோம் என கூறினார்.

ஆடி க்யூ8 எஸ்யூவி மாடலின் இந்திய அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக வெளியானது...

மேலும் புதிய க்யூ8 எஸ்யூவி கார் அடுத்த ஆண்டு ஜனவரி 15ல் அறிமுகமாகும் என்பதையும் தில்லோன் உறுதி செய்துள்ளார். க்யூ8 மாடலுக்கான முன்பதிவுகளை கடந்த வாரத்தில் இருந்து ஆடி ஏற்று கொண்டு வருவதாக செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் நாங்கள் இன்னும் எந்த முன்பதிவையும் ஏற்று கொள்ளவில்லை, இது பொய்யான செய்தி என புனே, மும்பை மற்றும் டெல்லியில் உள்ள டீலர்கள் கூறுகின்றனர்.

ஆடி க்யூ8 எஸ்யூவி மாடலின் இந்திய அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக வெளியானது...

இந்த க்யூ8 எஸ்யூவி மாடல் கார் ஆடி நிறுவனத்தின் இரண்டாவது பிஎஸ்6-க்கு இணக்கமான என்ஜின் பொருத்தப்பட்ட காராகும். முதல் காராக சமீபத்தில் தான் ஏ6 மாடல் வெளியானது. இந்த க்யூ8 கார் முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்து விற்பனையாகவும் உள்ளது.

ஆடி க்யூ8 எஸ்யூவி மாடலின் இந்திய அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக வெளியானது...

வாடிக்கையாளர்கள் மையம் தான் ஆடி நிறுவனம் 2025ஆம் ஆண்டு வரையில் தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கு காரணம். க்யூ8 காரின் டிசைனையும் தனித்துவத்தையும் விரும்புகின்ற வாடிக்கையாளர்களை தான் நாங்கள் குறி வைத்துள்ளோம். அதனால் க்யூ7 காரின் வாடிக்கையாளர்களிடம் தனிப்பட்ட அனுபவங்களை கேட்கவுள்ளோம். இது வாடிக்கையாளர்களின் கருத்திற்கு ஏற்ப காரின் டிசைனை மாற்ற உதவும் எனவும் பால்பிர் சிங் தில்லோன் கூறியுள்ளார்.

ஆடி க்யூ8 எஸ்யூவி மாடலின் இந்திய அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக வெளியானது...

ஆடி நிறுவனம் நான்கு கதவுகளை கொண்ட லக்சரி பட்ஜெட் காரை தயாரிக்க விரும்பியதன் மூலம் உருவானது தான் இந்த க்யூ8 மாடல் கார். என்ன இந்த காரின் நீளம் அதிகமாக, பெரிய எஸ்யூவி மாடலை போல் உள்ளது. இருப்பினும் கவலைப்பட தேவையில்லை, ஏனெனில் வாடிக்கையாளர்கள் க்யூ8 காரை கஸ்டம்ஸ் நிறுவனங்கள் மூலம் தங்களது விருப்பத்திற்கு ஏற்றாற்போல் மாற்றியமைத்து கொள்ளலாம்.

ஆடி க்யூ8 எஸ்யூவி மாடலின் இந்திய அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக வெளியானது...

ஆடி க்யூ8 எஸ்யூவி கார் 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு வி6 என்ஜினுடன் இண்டர்நேஷ்னல் மார்கெட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த என்ஜின் 335 பிஎச்பி பவரையும் 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதன் என்ஜினுடன் எட்டு வேக நிலைகளை வழங்கக்கூடிய டிப்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஆடி நிறுவனத்திற்கே உரிய குவாட்ரோ ஆல்-வீல் ட்ரைவ் அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆடி க்யூ8 எஸ்யூவி மாடலின் இந்திய அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக வெளியானது...

மூன்று விதமான கிளைமேட் கண்ட்ரோல், தானாக ஒளிமங்கும் காரின் உட்புறத்தில் உள்ள பின்புறத்தை பார்க்கும் கண்ணாடி, டிஜிட்டல் காம்பஸ், பவர் ஷேட்களுடன் கூடிய சன்ரூப், எட்டு விதமாக அட்ஜெட்ஸ்ட் செய்யக்கூடிய முன்புற இருக்கைகள், ஹை-பீம் உடன் கூடிய முழுமையான எல்இடி ஹெட்லைட்ஸ் மற்றும் 12.3 இன்ச்சில் கிளாசிக் மற்றும் இன்போடெயின்மெண்ட் மோட்களின் செயல்பாடுகளுடன் கூடிய எல்சிடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை இந்த க்யூ8 எஸ்யூவி காரில் உட்புறத்தில் உள்ள சிறப்பம்சங்களாக உள்ளன.

ஆடி க்யூ8 எஸ்யூவி மாடலின் இந்திய அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக வெளியானது...

பாதுகாப்பு உபகரணங்களாக, ஆறு-காற்றுப்பைகள், நிலைத்தன்மைக்கான எலக்ட்ரானிக் கண்ட்ரோல், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் ப்ரேக்கிங் அமைப்பு, டயரின் அழுத்தத்தை அளவிடும் வசதி, எலக்ட்ரோமேக்னிடிக் பார்க்கிங் ப்ரேக் மற்றும் LATCH (லோயர் ஆங்கர்ஸ் மற்றும் டெதர்ஸ் ஃபார் சில்ட்ரன்) போன்றவை இந்த க்யூ8 மாடலில் அடங்கியுள்ளன.

ஆடி க்யூ8 எஸ்யூவி மாடலின் இந்திய அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக வெளியானது...

மேற்க்கூறப்பட்டுள்ள தொழிற்நுட்பங்கள் இந்திய அறிமுகத்தின்போது மாற்றமடையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நமக்கு தெரிந்த வரை ஆடி நிறுவனம் இந்த காரின் உட்புறங்களில் எந்த மாறுதல்களையும் ஏற்படுத்தாமல் இண்டர்நேஷ்னல் காரில் உள்ளதை போன்றே வழங்கும். ஆனால் காரின் என்ஜினில் தான் சிறிய மாறுதல்கள் இருக்கும் என தெரிகிறது.

ஆடி க்யூ8 எஸ்யூவி மாடலின் இந்திய அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக வெளியானது...

ஆடியின் இந்த க்யூ8 மாடல் கார் அமெரிக்காவில் 68,200 டாலர்கள் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் இந்திய மதிப்பு ரூ.48.66 லட்சம் ஆகும். ஆடி நிறுவனம் க்யூ8 காரின் இந்திய விலை பற்றிய எந்தவொரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. இந்த கார் இந்திய ஷோரூம்களில் ரூ.90 லட்சம் வரையில் விற்பனையாகலாம் என கூறப்படுகிற்து.

ஆடி க்யூ8 எஸ்யூவி மாடலின் இந்திய அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக வெளியானது...

ஆடி நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு க்யூ பிரிவு வாகனத்தை வெளியிடுகிறது. மேலும் மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ நிறுவனங்களை விட அதிகப்படியான தொழிற்நுட்பங்களை இந்த காரில் புகுத்தியுள்ளது. இதனால் ஆடியின் இந்த எஸ்யூவி மாடல் எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே விற்பனையாகும் என தெரிகிறது.

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
Audi Q8 India Launch Confirmed For 15 January 2020: Details And Expected Price
Story first published: Tuesday, November 12, 2019, 11:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X