Just In
- 2 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 9 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 10 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- 12 hrs ago
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
Don't Miss!
- News
தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு.. 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அட்டகாசமான ஆடி க்யூ-8 எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது!
ஆடி க்யூ-8 சொகுசு வகை எஸ்யூவி கார் பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

ஆடி கார் நிறுவனம் தனது சொகுசு வகை எஸ்யூவி கார்களை க்யூ வரிசையில் விற்பனை செய்து வருகிறது. மேலும், ஆடி எஸ்யூவி ரக கார்களுக்கு பணக்காரர்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பு இருந்து வருகிறது.

ஆடி நிறுவனத்தின் க்யூ வரிசையில் மிக உயர்வகை மாடலாக க்யூ-7 எஸ்யூவி இருந்து வருகிறது. இந்த நிலையில், இதனைவிட கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட க்யூ-8 எஸ்யூவியை ஆடி கார் நிறுவனம் உருவாக்கியது. மேலும், இந்த புதிய மாடல் ஆடி நிறுவனத்தின் முதல் கூபே ரக எஸ்யூவி மாடலாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆடி க்யூ-7 காரைவிட க்யூ-8 கார் 53 மிமீ குறைவான நீளத்துடனும், 30 மிமீ குறைவான உயரத்துடனும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், 43 மிமீ கூடுதல் அகலத்தை பெற்றிருக்கிறது. இதனால், க்யூ-7 காரைவிட உட்புறத்தில் சிறப்பான இடவசதியை அளிக்கிறது.

ஆடி க்யூ-8 எஸ்யூவியில் புத்தம் புதிய எண்கோண வடிவ க்ரில் அமைப்பு பிரதானமாக முகப்பை அலங்கரிக்கிறது. எச்டி மேட்ரிக்ஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய எல்இடி ஹெட்லைட்டுகள், முப்பரிமாண பிரதிபலிப்பை வழங்கும் பகல்வேளை விளக்குகள், வலிமையான பம்பர் அமைப்பு ஆகியவை மிக கம்பீரமான தோற்றத்தை தருகிறது.

நாம் முன்பே கூறியது போல, இது கூபே ரக எஸ்யூவி மாடலாக இருப்பதால், பின்புறத்தில் கூரை அமைப்பு தாழ்ந்து முடிகிறது. அதிலேயே ரூஃப் ஸ்பாய்லர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் வீல் ஆர்ச்சுகள் மிக வலிமையாக இருப்பதுடன், அதற்கு இணையாக பிரம்மாண்ட சக்கரங்கள் காரின் கம்பீரத்தை உயர்த்துகின்றன.

பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகள், இரண்டு டெயில் லைட் க்ளஸ்ட்டர்களை இணைக்கும் லைட் பார் அமைப்பு, இரட்டை சைலென்சர்கள், அடர் க்ரோம் பூச்சுடன் கூடிய ஸ்கிட் பிளேட் ஆகியவை மிகச் சிறப்பான தோற்றத்தை தருகிறது.

ஆடி க்யூ-8 எஸ்யூவியில் 3.0 லிட்டர் வி6 டிடிஐ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 286 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஆடியின் பிரத்யேகமா க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது.

இதுதவிர்த்து, 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் மற்றும் 3.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் தேர்வுகளும் எதிர்காலத்தில் வழங்கப்பட இருக்கின்றன. இது ஆடி க்யூ-8 எஸ்யூவியின் குறைவான விலை தேர்வாக அமையும்.

பென்ட்லீ பென்டைகா, லம்போர்கினி உரஸ் ஆகிய கார்கள் உருவாக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய ஆடி க்யூ-8 எஸ்யூவியும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆடி க்யூ-7 எஸ்யூவிக்கு மாற்றாக இந்த புதிய மாடல் விற்பனைக்கு நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

ஆடி க்யூ-8 எஸ்யூவி தீபாவளிக்கு முன்னதாக விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதை ஆடி கார் நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதேவேளை, இதற்கு முன்னதாக புதிய தலைமுறை ஆடி ஏ6 காரும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.