ஒருவழியாக விற்பனைக்கு வந்தது புதிய பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனம்!

பல்வேறு தடைகளை கடந்து பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் ரக வாகனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஒருவழியாக விற்பனைக்கு வந்தது புதிய பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனம்!

ஆட்டோரிக்ஷா தயாரிப்பில் சிறந்து விளங்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், நகர்ப்புறத்தில் பயணிப்பதற்கு பாதுகாப்பான புதிய வகை நான்கு சக்கர வாகனத்தை உருவாக்கியது. ஆட்டோரிக்ஷா மற்றும் காருக்கு இடையிலான குவாட்ரிசைக்கிள் என்று குறிப்பிடப்படும் ரகத்தில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டது.

ஒருவழியாக விற்பனைக்கு வந்தது புதிய பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனம்!

எனினும், இந்த வாகனம் பாதுகாப்பானதாக இல்லை என்று வழக்கு தொடரப்பட்டதால், சந்தைக்கு கொண்டு வருவதிலும் அனுமதி பெறுவதிலும் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், பல்வேறு தடைகளை கடந்து ஒருவழியாக விற்பனைக்கு வந்துள்ளது பஜாஜ் க்யூட் வாகனம்.

ஒருவழியாக விற்பனைக்கு வந்தது புதிய பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனம்!

இந்த வாகனம் வர்த்தக துறைக்கான வாகனமாக மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால், தற்போது தனிநபர் பயன்பாடு மற்றும் வர்த்தக வாகனங்கள் என இரண்டு தரப்பு சந்தையிலும் விற்பனை செய்யப்பட இருப்பதுதான் ஹைலைட்டான விஷயம்.

ஒருவழியாக விற்பனைக்கு வந்தது புதிய பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனம்!

இந்த வாகனம் 452 கிலோ எடை கொண்டது. 4 பேர் பயணம் செய்ய முடியும். இந்த வாகனத்தில் 216 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 13.1 எச்பி பவரையும், 18.9 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

ஒருவழியாக விற்பனைக்கு வந்தது புதிய பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனம்!

இதே எஞ்சின் சிஎன்ஜி எரிவாயுவில் இயங்கும் மாடலிலும் கிடைக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 10.9 எச்பி பவரையும், 16.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ஒருவழியாக விற்பனைக்கு வந்தது புதிய பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனம்!

புதிய பஜாஜ் க்யூட் வாகனத்தில் அனைத்து சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. உலோகத்தாலான கதவுகள் இல்லை. ஃபைபரிலான கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. மிகவும் எளிமையான இன்டீரியர் அமைப்பு உள்ளது. ஏசி இல்லை.

ஒருவழியாக விற்பனைக்கு வந்தது புதிய பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனம்!

இந்த வாகனத்தின் பெட்ரோல் மாடலை இயக்குவதற்கு கிலோமீட்டருக்கு 2.06 ரூபாயும், சிஎன்ஜி மாடலை செலுத்துவதற்கு கிலோமீட்டருக்கு 1.53 ரூபாயும் செலவாகும் என்று பஜாஜ் ஆட்டோ தெரிவிக்கிறது. கணக்கீடுகளின்படி, பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 35 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி மாடல் கிலோவுக்கு 43 கிமீ மைலேஜையும் வழங்குமாம்.

ஒருவழியாக விற்பனைக்கு வந்தது புதிய பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனம்!

புதிய பஜாஜ் க்யூட் வாகனத்தின் பெட்ரோல் மாடல் ரூ.2.63 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், சிஎன்ஜி மாடல் ரூ.2.83 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். இப்போதைக்கு நேரடி போட்டி வாகனங்கள் இல்லை.

Most Read Articles
English summary
Bajaj Qute launched in India.
Story first published: Tuesday, March 19, 2019, 11:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X