பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...? தகவல் உள்ளே!

பைக் விலையில் கிடைக்கும் க்யூட் குவாட்ரி சைக்கிளின் எல்பிஜி வேரியண்ட் எப்போது விற்பனைக்கு கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...? தகவல் உள்ளே!

பஜாஜ் நிறுவனம் பைக் விலையில் க்யூட் என்ற குவாட்ரி சைக்கிளை சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியண்டில் கிடைக்கும் இந்த குவாட்ரி சைக்கிளின் எல்பிஜி வேரியண்டை மட்டும் அந்த நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யாமல் இருந்தது.

பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...? தகவல் உள்ளே!

இந்நிலையில், க்யூட் குவாட்ரி சைக்கிளின் எல்பிஜி வெரியண்டின் வெளியீடு குறித்த தகவலை பஜாஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகத்திடம் இருந்து, 'நான்-டிரான்ஸ்போர்டபில்' கேடகரியில் மைக்ரோ காருக்கு கிடைத்த ஒப்புதலையடுத்து இந்த நடவடிக்கையில் பஜாஜ் இறங்கியுள்ளது.

பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...? தகவல் உள்ளே!

அவ்வாறு, க்யூட் குவாட்ரி சைக்கிளின் எல்பிஜி வேரியண்டை வருகின்ற மே மாதம் இறுதிக்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...? தகவல் உள்ளே!

பஜாஜின் இந்த புத்தம் புதிய குவாட்ரி சைக்கிள் நாட்டில் உள்ள ஆறு மாநிலங்களில் மட்டும் தான் தற்போது விற்பனையாகி வருகிறது. இதனை விரவாக்கம் செய்யும் விதமாக, நாட்டில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்திலும் ஒப்புதல் பெறும் முயற்சியில் பஜாஜ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...? தகவல் உள்ளே!

இந்த க்யூட் குவாட்ரி சைக்கிளில், 216 சிசி கொண்ட சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு-கூல்ட் டிடிஎஸ்ஐ எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 13.1 பிஎச்பி பவரை 5,500 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். மேலும், 18.9 என்எம் டார்க்கை 4,000 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...? தகவல் உள்ளே!

இதேபோன்று, சிஎன்ஜி வேரியண்டானது 10.9 பிஎச்பி பவரை 5,500 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். மேலும், 16.1 என்எம் டார்க்கை 4,000 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். இந்த இரண்டு வேரியண்ட்களின் எஞ்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஸனில் இயங்கும். இதன் டாப் ஸ்பீடு 70 கிமீ வேகம்.

பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...? தகவல் உள்ளே!

பஜாஜ் க்யூட் பெட்ரோல் வேரியண்ட் எக்ஸ்-ஷோரூமில் ரூ. 2.63 லட்சம் என்ற விலையிலும், சிஎன்ஜி வேரியண்ட் ரூ. 2.83 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூமில் விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், எல்பிஜி வேரியண்டின் விலை குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த குவாட்ரி சைக்கிள் வெள்ளை, மஞ்சள், பச்சை, சிவப்பு மற்றும் நீளம் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
Bajaj Qute LPG Variant To Be Unveiled In May. Read In Tamil.
Story first published: Monday, April 22, 2019, 20:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X