பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியின் ஹைப்ரிட் மாடல் அறிமுகம்!

பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியின் ஹைப்ரிட் எரிபொருள் வகை மாடல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அ்றிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த உயர்வகை ஹைப்ரிட் எஸ்யூவியின் சிறப்பம்சங்களை காணலாம்.

பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியின் ஹைப்ரிட் மாடல் அறிமுகம்!

பெரும் கோடீஸ்வரர்களின் எஸ்யூவி ஆசைக்கு பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியானது இதுவரை 4.0 லிட்டர் மற்றும் 6.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின்மோட்டார் என இரண்டு ஆற்றல் மையங்களுடன் கூடிய ஹைப்ரிட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியின் ஹைப்ரிட் மாடல் அறிமுகம்!

இந்த எஸ்யூவியில் இருக்கும் வி6 பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் இணைந்து மிகச் சிறப்பான பவரை வெளிப்படுத்துவதுடன் மிக சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்கும். இந்த காரில் இருக்கும் மின் மோட்டார் அதிகபட்சமாக 126 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மொத்தமாக 700 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறனை பெற்றுள்ளது.

பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியின் ஹைப்ரிட் மாடல் அறிமுகம்!

இந்த கார் 0 -100 கிமீ வேகத்தை 5.5 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டது. மணிக்கு 254 கிமீ வேகம் வரை செல்லும். பெட்ரோல் மற்றும் மின் மோட்டார் என இரண்டு எரிபொருள் வகையையும் பயன்படுத்துவதன் மூலமாக அதிகபட்சமாக 747 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். பேட்டரியை பயன்படுத்தி மட்டும் செல்லும்போது 39 கிமீ பயண தூரத்தை வழங்கும்.

பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியின் ஹைப்ரிட் மாடல் அறிமுகம்!

இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 2.5 மணிநேரம் பிடிக்குமாம். பிரேக் ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றி பேட்டரியில் சேமிக்கும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் தொழில்நுட்பமும் உள்ளது. இதன்மூலமாக, கூடுதல் பயண தூரத்தை பெறுவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.

பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியின் ஹைப்ரிட் மாடல் அறிமுகம்!

பென்ட்லீ நிறுவனத்தின் மின் மோட்டார் பொருத்தப்பட்ட முதல் கார் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது இதன் முக்கிய அம்சம். அத்துடன், இந்த எஸ்யூவி கார் கிலோமீட்டருக்கு 79 கிராம் கார்பன் டை ஆக்சைடை மட்டும் வெளிப்படுத்தும் என்று பென்ட்லீ தெரிவிக்கிறது.

MOST READ: வெறும் ரூ.3.70 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியின் ஹைப்ரிட் மாடல் அறிமுகம்!

முதல்கட்டமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த புதிய பென்ட்லீ பென்டைகா ஹைப்ரிட் மாடல் விற்பனைக்கு செல்கிறது. அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles

மேலும்... #பென்ட்லீ #bentley
English summary
Bentley has launched Bentayga plug-in hybrid variant in UK with prices starting from a little over £133,000.
Story first published: Monday, September 30, 2019, 17:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X