பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் வெளியீடு

பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. அசத்தலான இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் பென்டைகா பற்றிய தகவல்களை காணலாம்.

பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் வெளியீடு

ஆடம்பர ரக எஸ்யூவி மார்க்கெட்டில் பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக இருக்கிறது. ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி வருகையால் பென்டைகாவுக்கு சிறிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை உணர்ந்து கொண்டு வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் ஸ்பெஷல் எடிசன் மாடலை வெளியிட்டு இருக்கிறது பென்ட்லீ.

பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் வெளியீடு

பென்ட்லீ பென்டைகா வி8 டிசைன் சீரிஸ் என்ற பெயரில் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. வெளிப்புறம் மற்றும் உட்புறத்திற்கு விசேஷ வண்ணக் கலவையுடன் இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் வந்துள்ளது.

பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் வெளியீடு

பாடி கலர் பம்பர், விசேஷ கருப்பு வண்ணத்திலான புகைப்போக்கி குழாய்கள், புதிய அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு சாதாரண வி8 மாடலில் இருந்து தனித்துவப்படுத்தப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டு மற்றும் கதவுகளில் விசேஷ கார்பன் ஃபைபர் சட்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதற்கு இணையாக விசேஷ வண்ணத்திலான கோடுகளும் அலங்கரிக்கிறது.

பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் வெளியீடு

உட்புறத்தில் தனித்து தெரியும் வகையிலான சிவப்பு, ஆரஞ்ச், வெள்ளை மற்றும் நீல வண்ண கான்ட்ராஸ்ட் கோடுகளையும் விருப்பத்தின் பேரில் வாடிக்கையாளர் தேர்வு செய்யலாம். புதிய அப்ஹோல்ஸ்ட்ரியுடன் இருக்கைகள் கொடுக்கப்படுகின்றன.

பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் வெளியீடு

மற்றபடி, வி8 மாடலின் அனைத்து அம்சங்களும் பொதுவானதாக இருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், பனோரமிக் சன்ரூஃப், எலெக்ட்ரானிக் டிஃபரன்ஷியல் லாக் சிஸ்டம், 4 விதமான டிரைவிங் மோடுகள், அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களும் இந்த மாடலில் உள்ளது.

பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் வெளியீடு

புதிய பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியின் வி8 டிசைன் சீரிஸ் மாடலில் இருக்கும் 4.0 லிட்டர் வி8 எஞ்சின் அதிகபட்சமாக 542 பிஎச்பி பவரையும், 770 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பிரம்மாண்ட எஸ்யூவி 0 -100 கிமீ வேகத்தை 4.5 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 290 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #பென்ட்லீ #bentley
English summary
Bentley has unveiled a new special edition model to the Bentayga range and is calling it the V8 Design Series.
Story first published: Saturday, April 6, 2019, 17:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X