ரூ.1.80 கோடி மதிப்புள்ள புத்தகம் வெளியீடு: லக்சூரி வீட்டைவிட அதிக விலை கொண்டதாக அறிமுகம்...!

உலகின் அதிக விலைக் கொண்ட முதல் புத்தகத்தை, சொகுசு கார் தயாரித்து வரும் பென்ட்லீ நிறுவனம் வெளியிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புத்தகம் குறித்த சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

ரூ.1.80 கோடி மதிப்புள்ள புத்தகம் விற்பனைக்கு வெளியீடு: லக்சூரி வீட்டைவிட அதிக விலை கொண்டதாக அறிமுகம்... எதுக்குயா இவ்ளோ விலை...!

ஒரு வடிவமே இல்லாத கல்லை, சிற்பி எவ்வாறு செதுக்கி அதை சிலையாக மாற்றுவாரோ, அதைப்போன்றதுதான் இலக்கே இல்லாத ஒரு மனிதனை இலக்கை நோக்கி இட்டுச் செல்கிறது வாசிப்பு பழக்கம். ஆனால், இன்றைய தளைமுறைியினரிடம் இந்த வாசிப்பு பழக்கம் என்பதே இல்லாமல் போய்விட்டது. அந்த வகையில், கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது வாசிப்பு பழக்கம் குறைந்துவிட்டது என்றே கூறலாம்.

ரூ.1.80 கோடி மதிப்புள்ள புத்தகம் விற்பனைக்கு வெளியீடு: லக்சூரி வீட்டைவிட அதிக விலை கொண்டதாக அறிமுகம்... எதுக்குயா இவ்ளோ விலை...!

இதற்கு தொழில் வளர்ச்சியும், விஞ்ஞான வளர்ச்சியுமே முதல் காரணாமக இருக்கின்றது. இக்காலத்து மனிதர்கள் அவர்களின் குடும்ப நலனுக்காக ஓடோடி பாடுபட்டு வருவதால், அவர்களால் படிப்பதற்காக நேரம் ஒதுக்க முடிவதில்லை. அதேபோன்று, நவீன கால வளர்ச்சியாக பார்க்கப்படும் ஸ்மார்ட்போன், டிவி உள்ளிட்டவையும் அவர்களின் வாசிப்பு எண்ணத்தை குறைத்து, அதனுள் மூழ்க வைத்துக் கொண்டுள்ளன.

ரூ.1.80 கோடி மதிப்புள்ள புத்தகம் விற்பனைக்கு வெளியீடு: லக்சூரி வீட்டைவிட அதிக விலை கொண்டதாக அறிமுகம்... எதுக்குயா இவ்ளோ விலை...!

அதேசமயம், இந்த ஸ்மார்ட்போன், கணினி உள்ளிட்டவைகளிலும் வாசிப்பதற்கான வழிமுறைகள் இருந்தும் அதன் தற்போதைய இளைஞர்கள் பயன்படுத்தாமல், அதில் இருக்கும் மற்ற பொழுதுபோக்கிலேயே கவனத்தைச் செலுத்தி வாழ்க்கையை வீணடித்து வருகின்றனர்.

ரூ.1.80 கோடி மதிப்புள்ள புத்தகம் விற்பனைக்கு வெளியீடு: லக்சூரி வீட்டைவிட அதிக விலை கொண்டதாக அறிமுகம்... எதுக்குயா இவ்ளோ விலை...!

ஒரு மனிதன் தன்னை மட்டுமின்றி, தன்னுடைய சமூகத்தைப் பற்றி எப்பொழுது சிந்திக்க தொடங்குகின்றானோ, அப்பொழுதுதான் அவன் வரலாறுகளில் பதியப்படும் நபராக மாறுகிறான். அப்படி, ஒரு மனிதனை உருவாக்குவதில் முக்கிய பங்கினை வாசிப்பு பழக்கம் செய்து வருகின்றது. எவன் ஒருவன் வாசிப்பதில் முக்கியத்துவம் செலுத்துகிறானோ, அவன் வரலாற்றில் இடம்பெற முயற்சிக்கின்றான் என்றே பொருள்.

ரூ.1.80 கோடி மதிப்புள்ள புத்தகம் விற்பனைக்கு வெளியீடு: லக்சூரி வீட்டைவிட அதிக விலை கொண்டதாக அறிமுகம்... எதுக்குயா இவ்ளோ விலை...!

இவ்வாறு புத்தகங்களுக்கான சிறப்பை நாள் முழுவதும் விளக்கிக் கொண்டே போகலாம். அதேசமயம், புத்தகத்தின்மீது ஆர்வமுள்ளவர்கள், சிறந்த புத்தகத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த ஒட்டுமொத்த தொகையையும் கூட செலுத்த தயங்க மாட்டார்கள். அதுபோன்று ஓர் சூழ்நியையத்தாதன் சொகுசு கார் தயாரித்து வரும் பென்ட்லீ நிறுவனம் தற்போது ஏற்படுத்தியுள்ளது.

ரூ.1.80 கோடி மதிப்புள்ள புத்தகம் விற்பனைக்கு வெளியீடு: லக்சூரி வீட்டைவிட அதிக விலை கொண்டதாக அறிமுகம்... எதுக்குயா இவ்ளோ விலை...!

இந்த செயலால் பென்ட்லீ, வாகன உலகில் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. மேலும், இந்த புத்தகத்தை அந்த நிறுவனம் மூன்று விதமான எடிசன்களில் உருவாக்கியுள்ளது. அந்த வகையில், முதல் எடிசனை 100 கேரட் தங்கத்தினால் உருவாக்கியுள்ளது. இது, இந்திய மதிப்பில், ரூ. 1.80 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் முகப்பு பக்க அட்டைப் பகுதியில் 100 கேரட் வைர கற்களால் அலங்கரிக்கப்பட்ட பென்ட்லீ பொருத்தப்பட்டுள்ளது.

ரூ.1.80 கோடி மதிப்புள்ள புத்தகம் விற்பனைக்கு வெளியீடு: லக்சூரி வீட்டைவிட அதிக விலை கொண்டதாக அறிமுகம்... எதுக்குயா இவ்ளோ விலை...!

அதேசமயம், இந்த புத்தகமானது இருவிதமான ஆப்ஷன்களில் கிடைக்கின்றது. அந்தவகையில், அது கோல்ட் பிளேடட் அல்லது பிளாட்டினம் பிளேட்டட் வடிவில் கிடைக்கிறது. இதுபோன்று, ஒட்டுமொத்தமாக 7 புத்தகங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டிருப்பதா கூறப்படுகிறது.

ரூ.1.80 கோடி மதிப்புள்ள புத்தகம் விற்பனைக்கு வெளியீடு: லக்சூரி வீட்டைவிட அதிக விலை கொண்டதாக அறிமுகம்... எதுக்குயா இவ்ளோ விலை...!

இரண்டாம் எடிசனாக, முல்லினர் எடிசன் இருக்கின்றது. இது சற்று விலை குறைவாக இந்திய மதிப்பில் ரூ. 11.27 லட்சம் என்ற விலையில் கிடைக்கின்றது. இதைத்தொடர்ந்து, மூன்றாவது எடிசனாக இருக்கும் சென்ட்சூனரி புத்தகத்திற்கு ரூ. 2.70 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை, ஒவ்வொன்றும் சுமார் 500 பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன.

ரூ.1.80 கோடி மதிப்புள்ள புத்தகம் விற்பனைக்கு வெளியீடு: லக்சூரி வீட்டைவிட அதிக விலை கொண்டதாக அறிமுகம்... எதுக்குயா இவ்ளோ விலை...!

புத்தகத்தின் தரம் மற்றும் டிசைன் வெவ்வேறாக இருந்தாலும், அவற்றில் இருக்கும் பொருள் ஒரே மாதிரியானதாக இருக்கின்றது. அந்தவகையில், இந்த புத்தகத்தில் பென்ட்லீ நிறுவனத்தின் ஆரம்ப காலம் முதல் தற்போது வரை நடைபெற்ற முக்கிய வரலாறுகள் மற்றும் எழுச்சி சம்பவங்கள் குறித்த தகவல் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்த நிறுவனத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளும் தொகுக்கப்பட்டுள்ளன.

ரூ.1.80 கோடி மதிப்புள்ள புத்தகம் விற்பனைக்கு வெளியீடு: லக்சூரி வீட்டைவிட அதிக விலை கொண்டதாக அறிமுகம்... எதுக்குயா இவ்ளோ விலை...!

இத்துடன், அந்த நிறுவனத்தின் சில முக்கிய வாடிக்கையாளர்கள் குறித்த தகவலும் இடம்பெற்றுள்ளது. மேலும், அந்த நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகள் மற்றும் பணிகள் குறித்த தகவலும் உள்ளடக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த புத்தகத்தின் முகவுரை பக்கத்தில் அந்த நிறுவனத்தின் இயக்குனரான ரால்ப் லாரன், அவர் குறித்தும், நிறுவனம் விளக்கி எழுதியுள்ளார்.

ரூ.1.80 கோடி மதிப்புள்ள புத்தகம் விற்பனைக்கு வெளியீடு: லக்சூரி வீட்டைவிட அதிக விலை கொண்டதாக அறிமுகம்... எதுக்குயா இவ்ளோ விலை...!

அதேபோன்று, பென்ட்லீ நிறுவனத்தின் சிஇஓ-ஆன அட்ரியன் ஹால்மார்க், எதிர்கால தயாரிப்பு குறித்த தகவலை பதிவிட்டுள்ளார். மொத்தம் 800 பக்கங்களை உள்ளடக்கிய இந்த புத்தகத்தை அந்த நிறுவனம் 'மாஸ்டர் பைன்டர்ஸ்' எனப்படும் இங்கிலாந்து நிறுவனத்தைக் கொண்டு வடிவமைத்துள்ளனர்.

Most Read Articles
மேலும்... #பென்ட்லீ #bentley
English summary
Bentley Book Costs More Than A Luxury House — Rs 1.80 Crore For A Book! Read In Tamil.
Story first published: Monday, May 20, 2019, 12:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X