ஆபத்தில் சிக்கிய பென்ஸ் இ-கிளாஸ் கார்: மீட்பதற்கு பேரம் பேசிய உள்ளூர் வாசிகள்... எவ்வளவு தெரியுமா???

கடற்கரையில் சிக்கிய காரை மீட்பதற்கு உள்ளூர் வாசிகள் பேரம் பேசிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஆபத்தில் சிக்கிய பென்ஸ் இ-கிளாஸ் கார்: மீட்பதற்கு பேரம் பேசிய உள்ளூர் வாசிகள்... எவ்வளவு தெரியுமா???

இயற்கையின் பிரம்மிக்க வைக்கும் அதிசயங்களில் ஒன்றாக கடலும், அதைச் சார்ந்த நிலப்பரப்பும் இருக்கின்றன. இது, மிகச் சிறந்த பொழுதுபோக்கு தளங்களில் முக்கிய இடத்தில் உள்ளது.

இதன்காரணமாகவே காலை, மாலை என எப்போது பார்த்தாலும் கடற்கரையில் மக்கள் கூட்டம் அலை மோதியபடி காட்சியளிக்கின்றது.

ஆபத்தில் சிக்கிய பென்ஸ் இ-கிளாஸ் கார்: மீட்பதற்கு பேரம் பேசிய உள்ளூர் வாசிகள்... எவ்வளவு தெரியுமா???

கடற்கரைக்கு வரும் ஒவ்வொருவரும் அதனை வெவ்வெறு விதமாக பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், ஒரு சில இளைஞர்கள் சினிமா திரைப்படங்களில் வருவதைப்போன்று, வீடியோக் காட்சிகளைப் படமெடுக்க கடற்கரையையும், அதன் மணல் பரப்புகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆபத்தில் சிக்கிய பென்ஸ் இ-கிளாஸ் கார்: மீட்பதற்கு பேரம் பேசிய உள்ளூர் வாசிகள்... எவ்வளவு தெரியுமா???

அவ்வாறு, இளைஞர் ஒருவர் அவரது விலையுயர்ந்த சொகுசு காரை, கடற்கரையில் வைத்து சாகச வீடியோ ஒன்றை எடுக்க முயன்றுள்ளார். ஆனால், அவரின் அந்த முயற்சி பெரும் நஷ்டத்தில் கொண்டுபோய் சேர்த்துள்ளது. இதுகுறித்த வீடியோவை கேதார் ட்ரூ டிவி என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம். இது தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகின்றது.

கடற்கரையில் சிக்கிய அந்த காரை உள்ளூர் வாசிகளுடன் இணைந்து அந்த இளைஞர் மீட்டுள்ளார். அதற்காக, அவர் பெரும் தொகையை செலவிட்டுள்ளார். இதுவே, இந்த சம்பவம் தற்போது அதிகம் வைரலாவதற்கு ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது.

பொதுவாக, ஆபத்தில் சிக்குபவர்களை சற்றும் தாமதிக்காமல் காப்பாற்ற வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

ஆபத்தில் சிக்கிய பென்ஸ் இ-கிளாஸ் கார்: மீட்பதற்கு பேரம் பேசிய உள்ளூர் வாசிகள்... எவ்வளவு தெரியுமா???

ஆனால், இங்கு கடற்கரையில் விலையுயர்ந்த கார் சிக்கியிருப்பதை உணர்ந்த ஒரு சில இளைஞர்கள், ஏற்கனவே இதுபோன்று நடைபெற்ற சம்பவங்களின் புகைப்பட தொகுப்பை காரின் உரிமையாளரிடம் காண்பித்து, அந்த காரை மீட்க பேரம் பேசியுள்ளனர்.

ஆபத்தில் சிக்கிய காரை மீட்க பேரம் பேசிய இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆபத்தில் சிக்கிய பென்ஸ் இ-கிளாஸ் கார்: மீட்பதற்கு பேரம் பேசிய உள்ளூர் வாசிகள்... எவ்வளவு தெரியுமா???

முன்னதாக நடைபெற்ற சம்பவங்களின் புகைப்படங்களைக் கண்டு அதிர்ந்துபோன, அந்த காரின் உரிமையாளர் உள்ளூர்வாசிகள் கோரிய தொகையைக் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து கார் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளது.

ஆபத்தில் சிக்கிய பென்ஸ் இ-கிளாஸ் கார்: மீட்பதற்கு பேரம் பேசிய உள்ளூர் வாசிகள்... எவ்வளவு தெரியுமா???

கடற்கரையில் சிக்கிய கார் விலையுயர்ந்த பென்ஸ் இ கிளாஸ் ரகமாகும். இது இந்தியாவில் ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனையாகி வருகின்றது. இதுவே, உள்ளூர் வாசிகள் கோரிய ரூ. 15 ஆயிரத்தை உடனடியாக கொடுக்க அந்த இளைஞர் ஒப்புக்கொள்வதற்கான காரணமாக உள்ளது.

ஆபத்தில் சிக்கிய பென்ஸ் இ-கிளாஸ் கார்: மீட்பதற்கு பேரம் பேசிய உள்ளூர் வாசிகள்... எவ்வளவு தெரியுமா???

காரை மீட்பதற்கு இந்த தொகை மிக அதிகம் என்றாலும், ஆபத்தின் விளிம்பில் இருந்த விலையுயர்ந்த காரை மீட்பதற்கு உதவிய இளைஞர்களுக்கு அது தக்க சன்மானமாகவே உள்ளது.

பொதுவாக, வாகனங்களை கடற்கரையில் வைத்து இயக்குவது என்பது பேராபத்தை விளைவிக்கும். இதில், ஆஃப் ரோடு பயணத்திற்கு சற்றும் பயனளிக்காத செடான் ரக இ-கிளாஸை இயக்கியதே அந்த இளைஞருக்கு இத்தகைய சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆபத்தில் சிக்கிய பென்ஸ் இ-கிளாஸ் கார்: மீட்பதற்கு பேரம் பேசிய உள்ளூர் வாசிகள்... எவ்வளவு தெரியுமா???

கடற்கரை என்பது பொழுதுபோக்கும் தளமே தவிர இதுபோன்று சாகசங்களைச் செய்ய உகந்த இடமல்ல என்பதை விளக்கும் வகையில், ஏற்கனவே பல சம்பவங்கள் இதற்கு முன்னதாக நிகழ்ந்துள்ளன. இருப்பினும் ஒரு சிலர் சாகசம் செய்வதாக எண்ணி, மிகப்பெரிய ஆபத்தில் சிக்கி விடுகின்றனர்.

இதனை மீண்டும் விளக்கும் வகையில் இந்த சம்பவம் அமைந்துள்ளது. ஆனால், இந்த சம்பவம் எந்த மாநிலத்தில் நடைபெற்றது என்பதுகுறித்த தகவல் வெளியாகவில்லை.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Benz E-Class Gets Stuck on A Beach. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X