துணை முதல்வர் வந்த கார் பத்திதான் இன்னைக்கு ஊரே பேசுது... ஏன் தெரியுமா?

துணை முதல்வர் வந்த கார் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

துணை முதல்வர் வந்த கார் பத்திதான் இன்னைக்கு ஊரே பேசுது... ஏன் தெரியுமா?

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை பிரபலப்படுத்தும் பணிகள் மிகவும் தீவிரமாக நடந்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த விஷயத்தில் முனைப்புடன் பணியாற்றி வருகிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதால்தான், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

துணை முதல்வர் வந்த கார் பத்திதான் இன்னைக்கு ஊரே பேசுது... ஏன் தெரியுமா?

பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களால், சுற்றுச்சூழல் மிக கடுமையாக பாதிக்கப்படுகிறது. தற்போது இந்தியாவின் பல்வேறு பெரு நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னையில் சிக்கி திணறி வருகின்றன. இந்த பிரச்னையை சரி செய்ய எலெக்ட்ரிக் வாகனங்கள் உதவும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது என்பது எலெக்ட்ரிக் வாகனங்களின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

துணை முதல்வர் வந்த கார் பத்திதான் இன்னைக்கு ஊரே பேசுது... ஏன் தெரியுமா?

எனவே மக்கள் அதிகளவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு சலுகைகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. மின்சார வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் மானியம் ஆகியவற்றை இதற்கு ஓர் உதாரணமாக சொல்லலாம். மத்திய அரசு மட்டுமல்லாது மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலப்படுத்தி வருகின்றன.

துணை முதல்வர் வந்த கார் பத்திதான் இன்னைக்கு ஊரே பேசுது... ஏன் தெரியுமா?

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் பீகார் உள்ளிட்ட மாநில அரசுகளை இதற்கு ஓர் உதாரணமாக சொல்லலாம். இதில், பீகார் மாநில சட்டமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. அம்மாநிலத்தின் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் எலெக்ட்ரிக் காரில் வந்து இந்த கூட்ட தொடரில் கலந்து கொண்டார்.

துணை முதல்வர் வந்த கார் பத்திதான் இன்னைக்கு ஊரே பேசுது... ஏன் தெரியுமா?

பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக அவர் எலெக்ட்ரிக் காரில் வந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'இந்த காரில் பயணம் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் கிட்டத்தட்ட சத்தமே வரவில்லை. இந்த காருக்கு உள்ளே அமர்ந்திருக்கும்போது, அதன் டிசைன் மிகவும் சௌகரியமாக இருக்கிறது' என்றார்.

துணை முதல்வர் வந்த கார் பத்திதான் இன்னைக்கு ஊரே பேசுது... ஏன் தெரியுமா?

இந்த சூழலில் பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமாரை தொடர்ந்து, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியும் தற்போது எலெக்ட்ரிக் காரில் வந்துள்ளார். பீகார் மாநில அரசின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகவே, டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி வந்தார்.

துணை முதல்வர் வந்த கார் பத்திதான் இன்னைக்கு ஊரே பேசுது... ஏன் தெரியுமா?

இந்த நிகழ்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி வசம்தான் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனம் ஆகிய துறைகள் உள்ளன. பீகார் மாநில தலைநகர் பாட்னாவில், சுஷில் குமார் மோடி இனி மின்சார வாகனத்தில்தான் பயணம் செய்வார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

துணை முதல்வர் வந்த கார் பத்திதான் இன்னைக்கு ஊரே பேசுது... ஏன் தெரியுமா?

இஇஎஸ்எல் எனப்படும் எனர்ஜி எஃபிசியன்ஸி சர்வீஸஸ் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து (EESL - Energy Efficiency Services Ltd), பீகார் மாநில அரசு 9 எலெக்ட்ரிக் கார்களை ஐந்து ஆண்டுகளுக்கு லீசுக்கு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சபாநாயகர், தலைமை செயலாளர் ஆகியோரால் இந்த கார்கள் பயன்படுத்தப்படும்.

துணை முதல்வர் வந்த கார் பத்திதான் இன்னைக்கு ஊரே பேசுது... ஏன் தெரியுமா?

சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதில் எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி வாகனங்களை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காகவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலமாக பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என பீகார் மாநில அரசு நம்புகிறது.

துணை முதல்வர் வந்த கார் பத்திதான் இன்னைக்கு ஊரே பேசுது... ஏன் தெரியுமா?

ஏனெனில் பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் சட்டமன்றத்திற்கு எலெக்ட்ரிக் காரில் வந்த சமயத்தில் அந்த செய்தி பலரையும் சென்றடைந்தது. தற்போது பீகார் மாநிலத்தின் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியும் எலெக்ட்ரிக் காரை பயன்படுத்த தொடங்கியிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பாக பலரும் பேச தொடங்கியுள்ளனர்.

Most Read Articles
English summary
Bihar Deputy Chief Minister Arrives In Tata Tigor EV In A Bid to Promote Electric Vehicles. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X