பிரதமர் வீடு முன்பு வீண் பந்தா காமித்து போலீஸிடம் வசமாக சிக்கிய பாஜக அமைச்சரின் நெருங்கிய சொந்தம்...

பிரதமர் இல்லம் முன்பு சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இவர், ஹரியானா மாநிலத்தின் பிஜேபி தலைவருடைய நெருங்கிய சொந்தம் என கூறப்படுகின்றது. இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோ மற்றும் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பிரமதர் வீடு முன்பு வீண் பந்தா காமித்து போலீஸிடம் வசமாக சிக்கிய பாஜக அமைச்சரின் நெருங்கிய சொந்தம்...

புது டெல்லி, நாட்டின் தலை நகராக மட்டுமில்லாமல் பல முக்கிய கட்சியின் தலைவர்கள் வசிக்கும் கோட்டையாகவும் இருந்து வருகின்றது. இதன்காரணமாகவே, இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும், அங்கு எப்போதும் போலீஸாரின் கண்கானிப்பு இருந்து வருகின்றது. அதுமட்டுமின்றி, சில பத்திரிக்கை நிரூபர்களும் எப்போதும் அந்நகரத்தை உலா வந்தவாறு இருக்கின்றனர்.

பிரமதர் வீடு முன்பு வீண் பந்தா காமித்து போலீஸிடம் வசமாக சிக்கிய பாஜக அமைச்சரின் நெருங்கிய சொந்தம்...

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று விடியற்காலை சுமார் 4.30 மணியளவில் சொகுசு கார் ஒன்று, பிரதமர் இல்லத்திற்கு அருகே சாகசத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியது. அந்த கார், அதிக சத்தத்துடன் அந்த சாலையில் இரண்டு முறைக்கும் மேலாக வட்டமடித்து சாகசத்தில் ஈடுபட்டது.

பிரமதர் வீடு முன்பு வீண் பந்தா காமித்து போலீஸிடம் வசமாக சிக்கிய பாஜக அமைச்சரின் நெருங்கிய சொந்தம்...

அந்த கார், பிரதமர் மோடியின் இல்லத்திற்கு மிக அருகில், அதாவது ராஜ்பாத் எனப்படும் இடத்தில் சாகதத்தில் ஈடுபட்டது. அந்த கார் அதிக சத்தத்தை எழுப்பியதால், அந்த சாலையில் இருந்த நாய்கள் காரை விரட்டிச் செல்ல ஆரம்பித்தன.

மேலும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் காரை நோக்கி வந்ததால், அந்த கார் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், அந்த சொகுசு கார்குறித்த தேடுதல் வேட்டையை ஆரம்பித்தனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமிராக்கள்மூலம் கிடைத்த காட்சிகளை வைத்து அவர்கள் விசாரணையில் ஈடுபட்டனர். அவ்வாறு, ஆய்வு மேற்கொண்டதில், அந்த கார் நிசான் நிறுவனத்தின் விலையுயர்ந்த மாடலான ஜிடிஆர் என்பது தெரியவந்தது.

பிரமதர் வீடு முன்பு வீண் பந்தா காமித்து போலீஸிடம் வசமாக சிக்கிய பாஜக அமைச்சரின் நெருங்கிய சொந்தம்...

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

அத்துடன், அந்த காரை சர்வேஷ் சந்து என்பவர் பயன்படுத்தி வந்தததும் தெரியவந்தது. இவர், ஹரியானா மாநிலத்தின் பிஜேபி தலைவராகவும், நிதித்துறை அமைச்சராகவும் இருக்கும் கேப்டன் அபிமன்யூவின் நெருங்கிய சொந்தம் என கூறப்படுகின்றது.

பிரமதர் வீடு முன்பு வீண் பந்தா காமித்து போலீஸிடம் வசமாக சிக்கிய பாஜக அமைச்சரின் நெருங்கிய சொந்தம்...

பின்னர், அவரைக் கைது செய்த போலீஸார், அந்த காரையும் பறிமுதல் செய்துள்ளனர். இவர் செய்த சாகசம் குறித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலானதை அடுத்து போலீஸார் இந்த தேடுதல் வேட்டையை நடத்தி அவரைக் கைது செய்துள்ளனர்.

பிரமதர் வீடு முன்பு வீண் பந்தா காமித்து போலீஸிடம் வசமாக சிக்கிய பாஜக அமைச்சரின் நெருங்கிய சொந்தம்...

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பத்திரிக்கையாளர் சிலர் இதுகுறித்து கூறுகையில், "காதை கிழிக்கின்ற அளவிற்கு அதிக சத்தத்துடன் வந்த, அந்த சொகுசு கார், இரண்டிற்கும் மேற்பட்ட முறை அந்த இடத்தில் டிரிஃப்ட் செய்து வட்டமிட்டது. இதைக் கண்ட, அங்கிருந்த நாய்கள் காரின் பின்னாடியே விரட்டிச்சென்றன. ஆனாலும், அந்த கார், அதனைக் கண்டுக்கொள்ளாமல் பலமுறை டிரிஃப்ட்டில் ஈடுபட்டது. அப்போது, காரின் அடிப்பகுதியில் இருந்து தீப்பிழம்புகள் வெளிவந்தது" என்றனர்.

பிரமதர் வீடு முன்பு வீண் பந்தா காமித்து போலீஸிடம் வசமாக சிக்கிய பாஜக அமைச்சரின் நெருங்கிய சொந்தம்...

மேலும், இதுகுறித்து தற்போது கைதாகியுள்ள சர்வேஷ் கூறியதாவது, "சம்பவத்தன்று அந்த சாலை மிகவும் காலியாக இருந்ததன் காரணமாகவே இவ்வாறு செய்ததாக அவர் தெரிவித்தார். இவர், என்னதான் காரணம் தெரிவித்தாலும், இவ்வாறு பொதுவெளியில் சாகசம் செய்வது குற்றமாகும். இது, இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதிலும் இதே நடைமுறைத்தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பிரமதர் வீடு முன்பு வீண் பந்தா காமித்து போலீஸிடம் வசமாக சிக்கிய பாஜக அமைச்சரின் நெருங்கிய சொந்தம்...

சம்பவம் நடைபெற்ற இடமானது, சுற்றுலாத் தளமாக இருக்கின்றது. அதுமட்டுமின்றி, ராஷ்ட்ரபதி பவன் மற்றும் இந்திய நாடாளுமன்றமும் அந்த பகுதிக்கு மிக அருகாமையிலேயே இருக்கின்றது. அதேசமயம், அந்த சாலையில்தான், குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தின்போது, ராணுவ அணிவகுப்புகள் நடைபெறும். ஆகையால், அந்த சாலை மிக முக்கியமான சாலையாக இருக்கின்றது. மேலும், எப்போதும் அங்கு போலீஸார் மற்றும் பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரமதர் வீடு முன்பு வீண் பந்தா காமித்து போலீஸிடம் வசமாக சிக்கிய பாஜக அமைச்சரின் நெருங்கிய சொந்தம்...

சர்வேஷ் இயக்கிய வந்த நிசான் ஜிடிஆர் கார் ஸ்போர்ட்ஸ் ரக காராகும். அதேசமயம், இந்த காரில் பல்வேறு சொகுசு வசதிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த கார் 800 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த கார் குறித்த வீடியோக்கள் பல யுடியூபில் இருக்கின்றன. அவையனைத்தும் கார் ரேஸில் ஈடுபடுவதைப் போன்றும், அப்போது தீப்பிழம்புகளை வெளிப்படுத்தும் காட்சிகள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன.

Source: ACI, TOI, Times Now,

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
BJP Leader’s Nephew Arrested For Stunt Near PM’s House. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X