200 கிமீ வேகத்தில் கார் ஓட்டிய பார்வையற்ற மெக்கானிக்... பின்னணியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் இதுதான்

கண் பார்வையற்ற மெக்கானிக் ஒருவர் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் கார் ஓட்டியுள்ளார். இதன் பின்னணியில் நடைபெற்ற மனதை உருக்கும் சம்பவங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

200 கிமீ வேகத்தில் கார் ஓட்டிய பார்வையற்ற மெக்கானிக்... பின்னணியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் இதுதான்

பார்ட்ஸ் ஆட்டோமோட்டிவ் மற்றும் டோவிங் (Bart's Automotive And Towing) என்ற நிறுவனத்தின் உரிமையாளர் பார்ட் ஹிக்கி. அடிப்படையில் பார்ட் ஹிக்கி ஒரு மெக்கானிக். குழந்தை பருவத்தில் இருந்தே கார்கள் மீது இவருக்கு அளவு கடந்த காதல் இருந்து வருகிறது.

வெறி என்று சொல்லும் அளவிற்கான காதல் இது. பார்ட் ஹிக்கி கார்களுடன்தான் வளர்ந்தார். தற்போது 24x7 என்ற அடிப்படையில், கார்களுடன்தான் வேலை செய்து வருகிறார். ஆனால் அவர் ஒரு முறை கூட காரை ஓட்டியதில்லை. காரணம் பார்ட் ஹிக்கிக்கு கண் பார்வை கிடையாது.

200 கிமீ வேகத்தில் கார் ஓட்டிய பார்வையற்ற மெக்கானிக்... பின்னணியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் இதுதான்

பார்ட் ஹிக்கி கார்களை சுற்றி ஒரு மெக்கானிக்காக வேலை செய்வதை இது தடுத்து விடவில்லை. என்றாலும் கார்களை ஓட்ட வேண்டும் என்ற பார்ட் ஹிக்கியின் கனவிற்கு இது தடை போட்டது. நாட்கள் உருண்டோடி கொண்டே இருந்தன.

கார்களை தொட்டு பார்த்து அவற்றின் மகத்துவத்தை உணர முடிந்ததே தவிர, கார் ஓட்டும் மகிழ்ச்சியான அனுபவம் மட்டும் பார்ட் ஹிக்கிக்கு கிடைக்கவே இல்லை. பார்ட் ஹிக்கியின் மகன் பிரண்டன் ஹிக்கி. அப்பாவிற்கு தப்பாமல் பிறந்த பிள்ளை இவர்.

ஆம், பிரண்டன் ஹிக்கியும் கார் ஆர்வலர்தான். தந்தையை போலவே பிரண்டன் ஹிக்கியும் கார்கள் மீது அளவற்ற காதல் கொண்டவர். ஆனால் அவருக்கு ஒரு ஏக்கம் இருந்தது. வாழ்க்கை முழுவதையும் கார்களுடனே செலவிட்டு வரும் தன் தந்தையால் கார்களை ஓட்ட முடியவில்லையே என்பதுதான் அது.

கார்களுக்காகவே தன்னை அர்ப்பணித்து கொண்ட தன் தந்தையால், கார்களை ஓட்ட முடியாமல் இருக்கும் சூழல், பிரண்டன் ஹிக்கியின் மனதை வாட்டி வதைத்து கொண்டிருந்தது. வாழ்நாளில் ஒரு முறையாவது தன் தந்தை கார் ஓட்டி விடமாட்டாரா? என ஏங்கி கொண்டிருந்தார் பிரண்டன் ஹிக்கி.

200 கிமீ வேகத்தில் கார் ஓட்டிய பார்வையற்ற மெக்கானிக்... பின்னணியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் இதுதான்

இந்த ஏக்கம் நாளாக நாளாக லட்சியமாகவே மாறி விட்டிருந்தது. கார் ஓட்டும் அனுபவத்தை தன் தந்தைக்கு ஒரு முறையேனும் வழங்க வேண்டும் என சபதமெடுத்து கொண்டார் பிரண்டன் ஹிக்கி. பிரண்டன் ஹிக்கியின் இந்த கனவை மெர்சிடிஸ் பென்ஸ் நிறைவேற்றியுள்ளது.

கண் பார்வையற்ற மெக்கானிக்கான பார்ட் ஹிக்கியை கார் ஓட்ட மட்டும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அனுமதிக்கவில்லை. உண்மையில் ஒரு சூப்பர் காரை ஓட்டும் வாய்ப்பை அவருக்கு வழங்கியுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர்தான் (Mercedes-Benz AMG GT R) அந்த சூப்பர் கார்.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பெருந்தன்மையான செயல்பாடு இது. கார் ஓட்ட வேண்டும் என்ற பார்ட் ஹிக்கியின் கனவை மெர்சிடிஸ் பென்ஸ் நிஜமாக்கியுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், சீனியர் ஹிக்கிக்கு, ஏஎம்ஜி ஜிடி ஆர் சூப்பர் காரை ஓட்டும் வாய்ப்புடன் சேர்த்து, கடிதம் ஒன்றையும் அனுப்பியது.

பிரெய்லி முறையில் எழுதப்பட்ட கடிதம் இது. அந்த கடிதத்தை படிக்கும் போது பார்ட் ஹிக்கி எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார் என்பதை மெர்சிடிஸ் பென்ஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் பார்க்க முடிகிறது. மனதை உருக்கும் இந்த வீடியோவை உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.

200 கிமீ வேகத்தில் கார் ஓட்டிய பார்வையற்ற மெக்கானிக்... பின்னணியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் இதுதான்

எனவே பார்ட் ஹிக்கி தனக்கு விருப்பமான வேகத்தில் காரை செலுத்த அந்த இடம் அவரை அனுமதித்தது. பார்ட் ஹிக்கி அங்கு மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டினார். எனினும் தொழில்முறையிலான கண்காணிப்பின் கீழ்தான் அவர் கார் ஓட்டினார்.

இது தொடர்பாக மெர்சிடிஸ் பென்ஸ் வெளியிட்டுள்ள வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் பற்றி யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஜெர்மனியை சேர்ந்த லக்ஸரி கார் நிறுவனம் இது. இந்நிறுவனத்தின் கார்களை வாங்க வேண்டும், குறைந்தபட்சம் ஒரு முறை ஓட்டியாவது பார்க்க வேண்டும் என்ற கனவு பலருக்கும் இருக்கும்.

இப்படிப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் சூப்பர் கார்களில் ஒன்றுதான் ஏஎம்ஜி ஜிடி ஆர். இதில், 4 லிட்டர், ட்வின் டர்போ வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 577 எச்பி பவர் மற்றும் 700 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தி சீறிப்பாய்ந்து செல்லும் சக்தி வாய்ந்தது.

இந்திய மார்க்கெட்டில் இந்த சூப்பர் காரின் விலை 2.23 கோடி ரூபாய். இது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Blind Mechanic Drove AMG GT R At 200 Kmph: Mercedes-Benz Fulfilled His Dream-Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X