பேயை மிரள வைத்த பிஎம்டபிள்யூ கார்: அடர்ந்த காட்டுக்குள் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் - வீடியோ...!

அடர்ந்த காட்டிற்குள் தனியாக சென்றபோது இடைமறித்த பேயை, பிஎம்டபிள்யூ கார் தலைதெறிக்க ஓட வீடும் வீடியோ காட்சியை பிஎம்டபிள்யூ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பேயை மிரள வைத்த பிஎம்டபிள்யூ கார்: அடர்ந்த காட்டுக்குள் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் - வீடியோ...!

பேயைக் கண்டு பயப்படாத நபர்கள் இந்த உலகில் இருக்கிறார்களா என்றால்...? அது நமக்கு சந்தேகத்தையே ஏற்படுத்தும். அதேபோன்று, பேய் இருக்கிறதா என்ற கேள்விக்கும் விடைதெரியாமல் தான் நாம் இருக்கின்றோம். அவ்வாறு, பேய் குறித்த கேள்விகளை அதுகுறித்து ஆய்வு செய்பவர்களிடம் கேட்டால், வெளிச்சத்திற்கு எதிர்வினையாக இருட்டு இருப்பதைப் போன்று போன்று, தெய்வத்திற்கு எதிராக பேயும் இருக்கிறது என பலர் தெரிவிக்கின்றனர். ஆனால், பலருக்கு கடவுள் இருக்கிறாரே என்பதே சந்தேகம் தான். ஏனென்றால், அவர் இருந்தால் நம்மை இவ்வளவு துயரத்திற்கு ஆளாக்குவாரா...? என கேள்வி எழுப்புகின்றனர்.

பேயை மிரள வைத்த பிஎம்டபிள்யூ கார்: அடர்ந்த காட்டுக்குள் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் - வீடியோ...!

எதுவாக இருந்தாலும், பேய் என்று கூறினாலே நம்மில் பலருக்கு பயம் ஏற்படுவது வழக்கம் தான். அதற்கு நாம் வளர்ந்து வந்த பின்னணி தான் முக்கிய காரணம். சிறு வயதில் நாம் சரியாக உணவை உட்கொள்ளவில்லை என்றால், நம் தாயார்கள் தேர்வு செய்யும் ஒரே வழி பேய் பயம் அல்லது பூச்சாண்டி பயம். இவை இரண்டைத் தவிர நமது அம்மாக்களுக்கு வேறு வழியே தெரிவதில்லை. அவ்வாறு நமக்கு பேய் பயம் காட்டி, உணவை உட்கொள்ள வைத்தது மட்டுமின்றி, நம்மை பேய் என்றால் பெரும் அச்சத்திற்கு ஆளாகும் வகையில் வளர்த்து வைத்துள்ளது உலக சினிமாக்கள். இது நாம் யாரும் தவிர்க்க முடியாத ஒன்று.

பேயை மிரள வைத்த பிஎம்டபிள்யூ கார்: அடர்ந்த காட்டுக்குள் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் - வீடியோ...!

பல பேய் படங்கள் அடர்ந்த இருட்டான காடு அல்லது பாழடைந்த மாளிகை என இதைச்சார்ந்தே உருவாக்கப்பட்டிருக்கும். ஆகையால், நம்மில் பலர் தற்போது கூட இருட்டைக் கண்டால் பயப்படுவது உண்டு. ஏன் சில இளைஞர்கள் இரவில் சிறுநீர் கழிக்க தன்னுடைய தந்தையையோ அல்லது அண்ணனையோ எழுப்புவது இன்றளவும் நீடிக்கும் ஒன்றாக இருந்து வருகிறது. இவ்வாறு, ஆறறிவுக் கொண்ட மனிதர்கள், இதுவரைக் காணாத ஓர் அமானுஷிய கதைக் கொண்டு பயந்து வரும் இந்த சூழ்நிலையில், தனக்கு எதிரில் வந்த பேயை தலைதெறிக்க ஓடவிட்டுள்ளது பிஎம்டபிள்யூவின் புத்தம் புதிய கார்.

பேயை மிரள வைத்த பிஎம்டபிள்யூ கார்: அடர்ந்த காட்டுக்குள் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் - வீடியோ...!

ஆம், சொகுசு கார்களை தயாரித்துவரும் பிஎம்டபிள்யூ நிறுவனம் அட்டானமஸ் எனப்படும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கார்களைத் தயாரித்து வருகிறது. இந்த தொழில்நுட்பம் கார்களை தானாக இயக்கும் சக்தி கொண்டவை. இன்னும், தெளிவாக கூறவேண்டுமானால், டிரைவர்கள் இன்றி இயங்கும் கார்களை பிஎம்டபிள்யூ தயாரித்து வருகிறது.

பேயை மிரள வைத்த பிஎம்டபிள்யூ கார்: அடர்ந்த காட்டுக்குள் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் - வீடியோ...!

இதுகுறித்த டீசர் வீடியோ ஒன்றைத் தான் பிஎம்டபிள்யூ நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. அந்த டீசரில், இருள் சூழ்ந்த அடர்ந்த காட்டிற்குள் தனியாக பிஎம்டபிள்யூ கார் சென்றுக் கொண்டிருக்கிறது. அந்த சாலையில் வேறெந்த வாகனமும் தென்படவில்லை. சுற்றிலும் வானுயர்ந்த மரங்கள் மட்டுமே தென்படுகிறது. அப்போது, அடர்ந்த இருட்டுக்குள் வெண்மை நிறத்தில் ஓர் பெண் தனியாக சாலையின் நடுவே நின்றுக் கொண்டிருக்கிறாள். இதனை உணர்ந்த பிஎம்டபிள்யூ கார் தன்னுடைய வேகத்தைக் கட்டுபடுத்தி நிற்கிறது.

பேயை மிரள வைத்த பிஎம்டபிள்யூ கார்: அடர்ந்த காட்டுக்குள் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் - வீடியோ...!

அப்போது, தான் தெரிந்தது நிற்பது பெண் அல்ல பேய் என்று. இதையடுத்து, காரின் அருகில் வந்த பேய், காரின் கதவைத் திறந்து, உட்புறம் செல்கிறது. ஆனால், காருக்குள் யாரும் இல்லாததைக் கண்டு, கார் எவ்வாறு தனியாக வந்தது என்பதை எண்ணி, பேய் தலைதெறிக்க ஒடுவதைப் போன்று அந்த டீசரின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த காட்சியின்படி, யாரும் எதிர்பாராத ஓர் தொழில்நுட்பத்தை, அதாவது பேயையைக்கூட மிரள வைக்கும் அளவிற்கு தங்களது கார்களை தொழில்நுட்பத்தைச் சார்ந்து தயாரித்து வருவதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் டீசரை வெளியிட்டுள்ளது.

பேயை மிரள வைத்த பிஎம்டபிள்யூ கார்: அடர்ந்த காட்டுக்குள் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் - வீடியோ...!

பிஎம்டபிள்யூ நிறுவனம், தனது புதிய 7 செரீஸ் கார்களில் மூன்றாம் நிலை அட்டானமஸ் (உயர் செயல்திறன்கொண்ட டி3 பிளாட்பாரம்) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தது. மேலும், தற்போது முன்னோட்டமாக அதன் டேட்டா பேஸில் உலகின் ஐந்து மில்லியன் அளவுகொண்ட சாலை குறித்த தகவல்களைப் பதிவேற்றம் செய்துவருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இரண்டு மில்லியன் அளவிலான சாலைகுறித்த தகவலை அந்த மென்பொருளில் பதிவேற்றம் செய்துவிட்டதாக அது கூறுகிறது.

பேயை மிரள வைத்த பிஎம்டபிள்யூ கார்: அடர்ந்த காட்டுக்குள் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் - வீடியோ...!

தற்போது, பிஎம்டபிள்யூ நிறுவனம் அமெரிக்கா, ஜெர்மன், இஸ்ரேல் மற்றும் சைனா உள்ளிட்ட நாடுகளில் இதுபோன்ற அட்டானமஸ் கார்களை சாலையில் பயணிக்க வைத்து பரிசோதித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு புதிதாக தயாரிக்கப்பட்டுவரும் பிஎம்டபிள்யூ காரில், வெவ்வேறு நிலப்பரப்புகளுக்கான கிளைமேட் கன்ட்ரோல்களை உருவாக்கும் முயற்சியில் பிஎம்டபிள்யூ நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இதுபோன்ற அட்டானமஸ் தொழில்நுட்பம் பொருந்திய 140 கார்களை 2019ம் ஆண்டிற்குள் தயாரிக்க பிஎம்டபிள்யூ நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

பேயை மிரள வைத்த பிஎம்டபிள்யூ கார்: அடர்ந்த காட்டுக்குள் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் - வீடியோ...!

பிஎம்டபிள்யூ நிறுவனம் ஏற்கனவே அட்டானமஸ் கார்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. ஆனால், இம்முறை தயாரிக்கப்பட்டு வரும் அட்டானமஸ் கார் அதைவிட அட்வான்ஸ்ட் டெக்னாலஜியைக் கொண்டதாக இருக்கும் என தெரிவித்துள்ளது. இதற்காக சமீபத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை தயாரித்து வரும் டைம்லர் நிறுவனத்துடன், பிஎம்டபிள்யூ இணைந்துள்ளது. அதன்படி, மூன்றாம் நிலை தானியங்கு தொழில்நுட்ப கார்களை இந்த இரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்து வருகின்றன. இந்த புதிய மூன்றாம் நிலை தானியங்கி கார்கள் 2025ம் ஆண்டிற்குள் சந்தைக்குள் விற்பனைக்கு வந்துவிடும் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
BMW 7-Series Scares A Ghost In New Promo Video. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X