பிஎஸ்6 கார்களின் தயாரிப்பில் மற்றொரு அதிரடி முடிவை எடுத்த பிஎம்டபிள்யூ...

தனது பெட்ரோல் மாடல்கள் அனைத்தும் பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்படவுள்ளதாக பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் உள்ள இந்நிறுவனத்தின் தயாரிப்பு ப்ராண்ட்டான போர்ட்ஃபோலியோவில் இருந்து பிஎஸ்6-க்கு மாற்றப்பட்ட பெட்ரோல் என்ஜின் கார்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.

பிஎஸ்6 கார்களின் தயாரிப்பில் மற்றொரு அதிரடி முடிவை எடுத்த பிஎம்டபிள்யூ...

மேலும் டீசல் வேரியண்ட் கார்களையும் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றும் பணியிலும் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் இறங்கியுள்ளது. இதற்கான வேலைகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்படவுள்ள டீசல் வேரியண்ட்களில் ஜிடி 5 சீரிஸ் மற்றும் 6 சீரிஸ் கார்களும் அடங்கும்.

பிஎஸ்6 கார்களின் தயாரிப்பில் மற்றொரு அதிரடி முடிவை எடுத்த பிஎம்டபிள்யூ...

பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்படவுள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மூன்றாவது டீசல் வேரியண்ட்டான எக்ஸ்1 மாடல் மிக விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து பிஎம்டபிள்யூ இந்தியா க்ரூப்பின் சிஇஓ ருத்ராதேஜ் சிங் கூறுகையில், இந்த 2019ல் எங்களது புதிய தயாரிப்பு நிறுவனமான போர்ட்ஃபோலியோவில் இருந்து அறிமுகமான அனைத்து லக்சரி கார்களும் குறிப்பிடத்தகுந்த அளவில் விற்பனையை பதிவு செய்துள்ளன.

பிஎஸ்6 கார்களின் தயாரிப்பில் மற்றொரு அதிரடி முடிவை எடுத்த பிஎம்டபிள்யூ...

பிஎஸ்6 தயாரிப்பு வாகனங்களுக்கான தேவைகள் இப்பொழுதே ஆரம்பமாகிவிட்டதால், இதற்கான பணிகளில் முன்னதாகவே இறங்கிவிட்டோம். இன்று, பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் போர்ட்ஃபோலியோவில் உள்ள பிஎஸ்6 கார்களை தங்களது விருப்பப்படி தேர்வு செய்ய முடியும். தற்போது உள்ள பிஎம்டபிள்யூ பிஎஸ்4 கார்களும் மிகவும் கண்கவரும் விதத்தில் உள்ளன. இதற்கு காரணம், இந்த காரில் உள்ள தொழிற்நுட்பங்களும் கவர்ச்சியான ஓனர்ஷிப் பேக்கேஜ்களும் தான் என கூறினார்.

பிஎஸ்6 கார்களின் தயாரிப்பில் மற்றொரு அதிரடி முடிவை எடுத்த பிஎம்டபிள்யூ...

பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது புதிய அறிமுகங்களை பிஎஸ்4 மற்றும் பிஎஸ்6 என இரு வேரியண்ட்களிலும் அறிமுகப்படுத்தி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் காரை வாங்கும்போதே இரண்டில் ஒன்றை தேர்வு செய்து வாங்க முடியும். பிஎஸ்4 கார்களுக்கு சலுகைகளும் தள்ளுபடிகளும் வழங்கப்பட்டு வரும் இதே நேரத்தில் பிஎஸ்6 கார்களின் விலையை 6 சதவீதம் உயர்த்தும் பணியிலும் இந்நிறுவனம் ஏற்கனவே களமிறங்கிவிட்டது.

பிஎஸ்6 கார்களின் தயாரிப்பில் மற்றொரு அதிரடி முடிவை எடுத்த பிஎம்டபிள்யூ...

பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் இருந்து கடைசியாக இந்திய மார்க்கெட்டில் அறிமுகமான கார், 2019 3 சீரிஸ். இதன் ஆரம்ப விலையாக எக்ஸ்ஷோரூமில் ரூ.41.40 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த 3 சீரிஸ் காரில் மூன்று வேரியண்ட் மற்றும் இரு என்ஜின் தேர்வுகளும் வழங்கப்படுகிறது. இந்த கார் குறித்த விரிவான தகவல்களை பெற இங்கே க்ளிக் செய்யவும்.

பிஎஸ்6 கார்களின் தயாரிப்பில் மற்றொரு அதிரடி முடிவை எடுத்த பிஎம்டபிள்யூ...

இந்த கார் மட்டுமன்றி இந்நிறுவனம் 1.54 கோடி ரூபாய் விலையில் எம்5 காம்படிஷன் மாடலையும் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. எம்5 மாடலை விட அதிகளவிலான நவீன தொழிற்நுட்பங்களில் தயாரிக்கப்பட்டிருந்த இந்த செடான் மாடல் காரின் விரிவான தகவல்களை பெற இங்கே க்ளிக் செய்யவும்.

பிஎஸ்6 கார்களின் தயாரிப்பில் மற்றொரு அதிரடி முடிவை எடுத்த பிஎம்டபிள்யூ...

இந்திய சந்தையில் முன்னணி லக்சரி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக பிஎம்டபிள்யூ நிறுவனம் விளங்குகிறது. இதன் பிரிவில் பிஎஸ்6 கார்களை அறிமுகப்படுத்தும் முதல் ப்ராண்ட் நிறுவனமாகவும் இது உள்ளது. இந்நிறுவனம், கடந்த சில மாதங்களாகவே புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த தீவிரமாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
BMW Updates Portfolio With BS6-Compliant Models In India: Production Of Updated Models Begin
Story first published: Thursday, November 21, 2019, 15:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X