லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட் வசதியுடன் ஆன்ட்ராய்டு ஆட்டோவை வழங்கும் பிஎம்டபிள்யூ

பிஎம்டபிள்யூ சொகுசு கார்களில் விரைவில் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதி அளிக்கப்பட இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட் வசதியுடன் ஆன்ட்ராய்டு ஆட்டோவை வழங்கும் பிஎம்டபிள்யூ

கடந்த 2014ம் ஆண்டு கார்களுக்கான பிரத்யேக ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை முதல்முதலாக ஹூண்டாய் நிறுவனம் தனது கார்களில் அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, அனைத்து கார் நிறுவனங்களும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதியை வழங்கத் துவங்கின.

லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட் வசதியுடன் ஆன்ட்ராய்டு ஆட்டோவை வழங்கும் பிஎம்டபிள்யூ

இன்று சாதாரண பட்ஜெட் கார் முதல் பிரிமீயம் கார் வரை ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலியை சப்போர்ட் செய்யாத கார்களே இல்லை எனும் அளவுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களும் இந்த செயலியை சப்போர்ட் செய்யும் கார் மாடல்களையே தேர்வு செய்கின்றனர்.

லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட் வசதியுடன் ஆன்ட்ராய்டு ஆட்டோவை வழங்கும் பிஎம்டபிள்யூ

இந்த நிலையில், உலகின் முன்னணி சொகுசு கார் நிறுவனமாக விளங்கும் பிஎம்டபிள்யூ இதுவரை ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதியை தனது கார்களில் அறிமுகப்படுத்தவில்லை. அந்நிறுவனத்தின் சொந்த செயலியை பயன்படுத்தியே இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் செயல்படுகிறது.

லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட் வசதியுடன் ஆன்ட்ராய்டு ஆட்டோவை வழங்கும் பிஎம்டபிள்யூ

இந்தநிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலியை சப்போர்ட் செய்யும் வசதியை தனது கார்களின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் அளிப்பதற்கு பிஎம்டபிள்யூ முடிவு செய்துள்ளது.

லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட் வசதியுடன் ஆன்ட்ராய்டு ஆட்டோவை வழங்கும் பிஎம்டபிள்யூ

அத்துடன், கார் உரிமையாளர்களின் ஸ்மார்ட்ஃபோனுடன் வயர்லெஸ் முறையில் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலியை இணைத்துக் கொள்ளும் வசதியும் அளிக்கப்பட இருக்கிறது. வரும் ஆண்டு ஜூலை மாதம் முதல் புதிய பிஎம்டபிள்யூ கார்களில் இந்த வசதி அளிக்கப்பட இருக்கிறது.

லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட் வசதியுடன் ஆன்ட்ராய்டு ஆட்டோவை வழங்கும் பிஎம்டபிள்யூ

ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதியை வயர்லெஸ் முறையில் இணைப்பதற்கான வசதியை கூகுள் நிறுவனத்தின் பிக்ஸெல், பிக்ஸெல் எக்ஸ்எல், பிக்ஸெல் 2, பிக்ஸெல் 2 எக்ஸ்எல், பிக்ஸெல் 3, பிக்ஸெல் 3 எக்ஸ்எல், நெக்சஸ் 5எக்ஸ் மற்றும் நெக்சஸ் 6பி ஆகிய ஸ்மார்ட்ஃபோன்களில் கிடைக்கிறது.

லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட் வசதியுடன் ஆன்ட்ராய்டு ஆட்டோவை வழங்கும் பிஎம்டபிள்யூ

அதேபோன்று, சாம்சங் கேலக்ஸி எஸ்8, எஸ்8 ப்ளஸ், எஸ்9, எஸ்9 ப்ளஸ், எஸ்10, எஸ்10 ப்ளஸ், சாம்சங் நோட் 8, சாம்சங் நோட் 9 மற்றும் சாம்சங் நோட் 10 ஆகிய ஸ்மார்ட்ஃபோன்களில் வழங்கப்படுகிறது. கூகுள் போன்கள் ஆன்ட்ராய்டு 8.0 மற்றும் அதற்கு மேற்பட்ட வெர்ஷன்களிலும், சாம்சங் போன்களில் ஆன்ட்ராய்டு 9.0 அல்லது அதற்கு மேற்பட்ட வெர்ஷன்களை கொண்டதாக இருக்க வேண்டும்.

லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட் வசதியுடன் ஆன்ட்ராய்டு ஆட்டோவை வழங்கும் பிஎம்டபிள்யூ

மேலும், பிஎம்டபிள்யூ கார்களில் வழங்கப்பட இருக்கும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலியானது வெறும் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் மட்டுமின்றி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ஹெட் அப் டிஸ்ப்ளே ஆகியவற்றுடன் இணைத்துக் கொள்ளும் வசதியையும் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாக கூறலாம்.

லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட் வசதியுடன் ஆன்ட்ராய்டு ஆட்டோவை வழங்கும் பிஎம்டபிள்யூ

ஆன்ட்ராய்டு ஆட்டோ மூலமாக கவனச்சிதறல் ஓட்டுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று எங்களது வாடிக்கையாளர்கள் அதன் அவசியத்தை எடுத்துரைத்தனர். இதனால், அதிக வசதிகளுடன் கூடிய ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலியை எங்களது கார்களில் வரும் 2020ம் ஆண்டு ஜூலை முதல் வழங்க இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட் வசதியுடன் ஆன்ட்ராய்டு ஆட்டோவை வழங்கும் பிஎம்டபிள்யூ

பிஎம்டபிள்யூ கார்களில் வழங்கப்பட இருக்கும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலின் சிறப்பம்சங்கள் குறித்து வரும் ஜனவரியில் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடக்க இருக்கும் கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
German luxury car maker, BMW has announced that it will offer Android Auto in its cars from July 2020.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X