பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...?

பிஎம்டபிள்யூ நிறுவனம், புதிய மாடல் எஸ்யூவி ரக காரை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்தியர்களைக் கவரவிருக்கும் இந்த புதிய மாடலின் சிறப்பம்சங்கள் குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...?

பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த மாடலான எக்ஸ்7 எஸ்யூவி காரை இந்திய வாகன சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில், இந்த கார் வருகின்ற ஜூலை மாதம் 25ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது எக்ஸ் செரீஸில் வெளிவரும் எக்ஸ்5 மேலே நிலை நிறுத்தப்படும்.

பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...?

அதேசமயம், முன்னதாக எக்ஸ்7 மாடலில் உள்ள எம்50டி வேரியண்ட்தான் முதற்கட்டமாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, எக்ஸ்7 மாடலின் மற்ற வேரியண்ட்களும் தொடர்ச்சியாக விற்பனைக்கு களமிறக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவையனைத்தையும், இந்தியாவிலேயே வைத்து கட்டமைக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...?

பிஎம்டபிள்யூவின் இந்த எக்ஸ்7 மாடல், சர்வதேச அளவில் நான்கு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன. அந்தவகையில், எக்ஸ்டிரைவ் 40ஐ, எக்ஸ்டிரைவ் 50ஐ, எக்ஸ் 30டி மற்றும் எம் 50டி ஆகிய நான்கு வேரியண்ட்கள் சர்வதேச சந்தையில் விற்பனையில் கொடிக்கட்டி பறந்து வருகின்றன. இதில், எக்ஸ்டிரைவ் 50ஐ விற்பனைக்கு வருவது சந்தேகம்தான் என கூறப்படுகிறது.

பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...?

ஆனால், மற்ற மூன்று மாடல்களின் இந்திய வருகை, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஏதேனும் மாற்றமிருந்தால் விரைவில் பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிவிக்கலாம். இந்தியாவிற்கு வருகை தர உள்ள இந்த எக்ஸ்7 செரிஸ் மடாலில் எக்ஸ் டிரைவ் 40ஐ மாடல்தான், அதன் வேரியண்ட்களிலேயே கடைநிலை மாடலாக இருக்கின்றது. இந்த மாடலில் 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 340 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...?

அதேபோன்று, அதற்கு அடுத்த இடத்தில் எக்ஸ்டிரைவ் 30டி வேரியண்ட் இருக்கின்றது. இந்த வேரியண்ட் 3.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் ஆப்ஷனில் கிடைக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 265 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த எக்ஸ்7 செரீஸின் ஹை என்ட் வேரியண்டாக எம்50டி இருக்கின்றது. இது, 3.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் ஆப்ஷனில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...?

இது, அதிகபட்சமாக 400 பிஎச்பி பவரையும், 760 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகின்றது. எக்ஸ்7 செரிஸீன் அனைத்து வேரியண்டும் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸின் மூலம் இயங்குகின்றது. அதேபோன்று, அவையனைத்தும் நான்கு வீல்கள் இயக்கம் கொண்ட மாடலாகவும் இருக்கின்றது.

பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...?

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 மாடல் அந்த நிறுவனத்தின் சிறப்பான மாடலாக பார்க்கப்படுகின்றது. இந்த பிராண்டில் விற்பனைக்கு வரும் மாடல்களிலேயே 3 வரிசை இருக்கை அமைப்பைப் பெற்ற முதல் மாடல் என்பதே அதற்கு காரணமாக இருக்கின்றது. அதேசமயம், இந்த கார் பல்வேறு சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றது. அந்தவகையில், இதன் முகப்பு பகுதி க்ரில் அமைப்பிற்கு பிரத்யேக வடிவமைப்பாக, கிட்னி வடிவிலான தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...?

அதேபோன்று, இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள ஹெட்லைட், டெயில் லைட், டிஆர்எல் மற்றும் பனி விளக்கு உள்ளிட்ட அனைத்து மின் விளக்குகளும் எல்இடி தரத்திலானவையாக இருக்கின்றது. இதேபோன்று இந்த காரின் இந்த பின்பக்க அமைப்பும், டிசைனும் தனித்துவமானதாக இருக்கின்றன. அந்தவகையில், அதன் டெயில்கேட் கேட் ஸ்பிளிட் டிசைனில் காட்சியளிக்கின்றது.

பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...?

மேலும், அதன் பூட் ஸ்பேஸ் 365 லிட்டராக இருக்கின்றது. அதுவே, காரின் மூன்றாவது மடக்கி வைத்துவிட்டால், அது 2,120 லிட்டராக அதிகரித்து விடுகின்றது. தொடர்ந்து காரின் கேபின் பகுதியைப் பற்றி பார்ப்போமேயானால், அது மிகவும் ரிச்சான லுக்கைப் பெற்றுள்ளது. அவ்வாறு, காரின் டேஸ் போர்டில் 12.4 இன்சிலான திரைகள், பனோரமிக் சன்ரூஃப், குவில்டட் லெதர் இருக்கைகள், ஐந்து வகையிலான ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல், பின்பக்க இருக்கை பொழுபோக்கு சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த காரில் இடம்பெற்றுள்ளன.

பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...?

ஆகையால், இந்த கார் நவீனத்திற்கும், சொகுசான உணர்விற்கும் சிறுதுளி குறைவான உணர்வை அதன் பயனாளிகளுக்கு ஏற்படுத்தாது என கூறப்படுகிறது. இதன் விலை மற்ற தகவல்களை அந்த நிறுவனம் கூடிய அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம், இந்த கார்மீது, சொகசு கார் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.

Most Read Articles
English summary
BMW X7 India-Launch Date Confirmed — The First-Ever 7-Seater Beemer Will Soon Be Available In India. Read In Tamil.
Story first published: Monday, June 24, 2019, 20:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X