போயிங் - போர்ஷே கூட்டணியில் உருவாகும் புதிய பறக்கும் கார்!

பேட்டரியில் இயங்கும் பறக்கும் காரை உருவாக்கும் முயற்சியாக போயிங் விமான நிறுவனமும், போர்ஷே கார் நிறுவனமும் கைகோர்த்துள்ளன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

போயிங் - போர்ஷே கூட்டணியில் உருவாகும் புதிய பறக்கும் கார்!

அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனம் விமானத் தயாரிப்பில் தலைசிறந்த நிறுவனமாக விளங்குகிறது. அதேபோன்று, செயல்திறன் மிக்க சொகுசு வகை கார்களை தயாரிப்பதில் போர்ஷே நிறுவனம் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில், எதிர்கால போக்குவரத்து துறைக்கு ஏற்ப புதிய பறக்கும் காரை உருவாக்கும் விதமாக இரண்டு நிறுவனங்களும் கூட்டணியாக செயல்பட இருக்கின்றன.

போயிங் - போர்ஷே கூட்டணியில் உருவாகும் புதிய பறக்கும் கார்!

நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ப குறைந்த தூர பயன்பாட்டிற்கான பேட்டரியல் இயங்கும் புதிய பறக்கும் காரை உருவாக்க இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளது. அதாவது, தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற பறக்கும் கார் மாடலாக உருவாக்கப்பட இருக்கிறது.

போயிங் - போர்ஷே கூட்டணியில் உருவாகும் புதிய பறக்கும் கார்!

இந்த புதிய பறக்கும் கார் மாடலானது செங்குத்தாக மேலே எழும்பும் திறனையும், அதேபோன்று செங்குத்தாக தரை இறங்கும் திறனையும் பெற்றிருக்கும். எனவே, ஓடுபாதை தேவையிருக்காது. வீட்டு மாடியில் அல்லது குறிப்பிட்ட பகுதியில் இருந்து எளிதாக இயக்க முடியும்.

போயிங் - போர்ஷே கூட்டணியில் உருவாகும் புதிய பறக்கும் கார்!

புதிய பறக்கும் கார்களை உருவாக்கும் நிறுவனங்கள் டாக்சி மார்க்கெட்டை குறிவைத்துத்தான் தங்களது எதிர்கால திட்டங்களை வகுத்துள்ளன. ஆனால், போயிங்- போர்ஷே நிறுவனங்களின் புதிய மின்சார பறக்கும் கார் மாடலானது பெரும் கோடீஸ்வரர்களுக்கான தனி நபர் பயன்பாட்டு வாகனமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

போயிங் - போர்ஷே கூட்டணியில் உருவாகும் புதிய பறக்கும் கார்!

இந்த புதிய எலெக்ட்ரிக் பறக்கும் கார் திட்டத்தில் போர்ஷே, போயிங் நிறுவனங்களும், போயிங் நிறுவனத்தின் அரோரா ப்ளையிட் சயின்சஸ் நிறுவனமும் இணைந்து செயல்பட உள்ளன. இந்த ஆண்டு துவக்கத்தில் அரோரா ஃப்ளையிட் சயின்சஸ் நிறுவனம் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் பறக்கும் காரின் புரோட்டோடைப் மாடலை சில வினாடிகள் பறக்க விட்டு சோதனை செய்தது.

போயிங் - போர்ஷே கூட்டணியில் உருவாகும் புதிய பறக்கும் கார்!

இந்த புரோட்டோடைப் மாடலை நடைமுறை பயன்பாட்டுக்கு தக்கவாறு மேம்படுத்தும் முயற்சிகளில் இந்த புதிய கூட்டணி ஈடுபடும் என்று தெரிகிறது. போர்ஷே நிறுவனம் தனது கார் தொழில்நுட்ப விஷயங்களையும், போயிங் மற்றும் அரோரா நிறுவனங்கள் விமான தொழில்நுட்பங்களையும் பகிர்ந்துகொண்டு இந்த புதிய மின்சார பறக்கும் காரை சிறந்த தயாரிப்பாக சந்தைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளன.

போயிங் - போர்ஷே கூட்டணியில் உருவாகும் புதிய பறக்கும் கார்!

ஏற்கனவே, ஏர்பஸ் நிறுவனமும் இதே மாதிரியிலான பறக்கும் கார் மாடலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஏர்பஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் டாக்சி மார்க்கெட்டை குறிவைத்து இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளன. ஆனால், போயிங் - போர்ஷே கூட்டணி சற்று வித்தியாசமாக பெரும் கோடீஸ்வரர்களை குறிவைத்து புதிய பறக்கும் கார் திட்டத்தை கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #போர்ஷே #porsche
English summary
American plane maker Boeing is working with Porsche car company to develop a concept electric flying vehicle capable of transporting people in urban areas.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X