எம்ஜி ஹெக்டர் காரை வாங்கிய பழம் பெரும் நடிகை... யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் களமிறங்கி புக்கிங்கில் தற்போது இமாலய அளவில் வெற்றி நடைப் போட்டுக்கொண்டிருக்கும் எம்ஜி ஹெக்டர் கார், பிரபல பழம்பெரும் நடிகைக்கு டெலிவரி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

எம்ஜி ஹெக்டர் காரை வாங்கிய பிரபல பழம் பெரும் நடிகை... யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எம்ஜி நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதிக்கும் விதமாக, அதன் ஹெக்டர் என்ற நடுத்தர அளவுடைய எஸ்யூவி ரக காரை கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்நிறுவனம், இந்தியாவில் அறிமுகம் செய்த முதல் கார் இதுவே ஆகும்.

ரூ. 12.18 லட்சம் என்ற ஆரம்ப விலையில் களமிறங்கிய இந்த கார் பல்வேறு நவீன மற்றும் சொகுசு வசதிகளை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.

எம்ஜி ஹெக்டர் காரை வாங்கிய பிரபல பழம் பெரும் நடிகை... யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதனால், எம்ஜி மோட்டார் நிறுவனம் எதிர்பாராத இமலாய அளவிலான வரவேற்பினை அது இந்தியாவில் பெற்று வருகின்றது. தொடர்ந்து, அந்நிறுவனமே திக்குமுக்காடி போகின்ற வகையில் புக்கிங் குவிந்த வண்ணம் இருந்தது. இதனால், தற்காலிகமாக ஹெக்டர் காருக்கான புக்கிங்கை அந்நிறுவனம் நிறுத்தி வைத்தது.

எம்ஜி ஹெக்டர் காரை வாங்கிய பிரபல பழம் பெரும் நடிகை... யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

தொடர்ந்து, முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணியில் தீவிரம் காட்டப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், பிரபல பாலிவுட் திரைப்பட நடிகையும், தற்போதைய உத்தரபிரதேச மாநிலம், மதுரா தொகுதியின் பாஜக எம்பியுமான ஹேம மாலினிக்கு, எம்ஜி ஹெக்டர் கார் டெலிவரி செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எம்ஜி ஹெக்டர் காரை வாங்கிய பிரபல பழம் பெரும் நடிகை... யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஹேம மாலினி 70's மற்றும் 80's காலகட்டத்தில் இந்திய இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர். இவர் எம்ஜி ஹெக்டர் காரை வாங்கியிருப்பது அந்நிறுவனத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

ஏற்கனவே, எம்ஜி ஹெக்டர் நிறுவனத்திற்கு இமாலய அளவில் வரவேற்பு கிடைத்து வருகின்றது. இதன்காரணமாக, போட்டி நிறுவனங்கள் வாயடைத்து நின்றிருக்கின்றன.

எம்ஜி ஹெக்டர் காரை வாங்கிய பிரபல பழம் பெரும் நடிகை... யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்நிலையில், எம்ஜி நிறுவனம் ஹெக்டர் காருக்கான இரண்டாம் கட்ட முன் பதிவை அண்மையில் தொடங்கியது. மேலும், புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக கார்களை டெலிவரி செய்யும் விதமாக உற்பத்தியளவையும் அதிகரித்துள்ளது.

எம்ஜி ஹெக்டர் காரை வாங்கிய பிரபல பழம் பெரும் நடிகை... யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

எம்ஜி ஹெக்டர் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை மாதம் ஒன்றிற்கு 1,500 யூனிட்டுகளை மட்டுமே தயார் செய்யும் கொள்ளளவைக் கொண்டதாக இருந்தது. இதன்காரணமாகவே, புக்கிங் ஏராளாமாக குவிந்தபோது, திடீரென புக்கிங்கை தற்காலிகமாக நிறுத்தியது.

தொடர்ந்து, உற்பத்தியை மாதம் ஒன்றிற்கு 3 ஆயிரமாக உயர்த்த அந்நிறுவனம் முடிவு செய்தது. இதையடுத்தே கடந்த செப்டம்பர் மாதம் 29ம் தேதி இரண்டாம் கட்ட புக்கிங் மீண்டும் தொடங்கியது. இம்முறை புக்கிங்கிற்காக ரூ. 50 ஆயிரம் வசூலிக்கப்படுகின்றது.

MOST READ: உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பிரதமர் மோடிக்கு புதிய விமானம்... இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

எம்ஜி ஹெக்டர் காரை வாங்கிய பிரபல பழம் பெரும் நடிகை... யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஆனால், இம்முறை வாடிக்கையாளர்களை கூடுதல் அதிர்ச்சி செய்தியை ஒன்றையும் வெளியிட்டது. அந்தவகையில், அதன் ரசிகர்களை உறைய வைக்கும் வகையில் ஹெக்டர் காரின் விலையை 2.5 சதவீதம் உயர்த்தியது. இதனால், சுமார் 42 ஆயிரம் ரூபாய் வரை அந்த காரின் விலை அதிகரித்துள்ளது.

MOST READ: மலிவு விலையில் லெக்ட்ரோ இ-சைக்கிள் அறிமுகம்: முழுமையான சார்ஜில் எத்தனை கிமீ பயணிக்கலாம் தெரியுமா?

எம்ஜி ஹெக்டர் காரை வாங்கிய பிரபல பழம் பெரும் நடிகை... யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

போட்டி நிறுவனங்கள் தங்கள் கார்களுக்கு மிகப்பெரிய தள்ளுபடிகளை வழங்கி கொண்டிருக்கும் நேரத்தில், எம்ஜி ஹெக்டர் காரின் இந்த விலை உயர்வு அதன் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MOST READ: திடீரென குறுக்கே வந்த கார்: டிவைடரின்மீது மோதி 10 அடி உயரத்திற்கு பறந்த டொயெட்டா இன்னோவா.. வீடியோ!

எம்ஜி ஹெக்டர் காரை வாங்கிய பிரபல பழம் பெரும் நடிகை... யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

எம்ஜி ஹெக்டர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட 22 நாட்களிலியே 28 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங் நிறவடைந்தது குறிப்பிடத்தகுந்து. இந்த காரணத்தினாலயே இந்த துணிச்சலான நடவடிக்கையில் அது இறங்கியுள்ளது.

எம்ஜி ஹெக்டர் காரை வாங்கிய பிரபல பழம் பெரும் நடிகை... யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

எம்ஜி ஹெக்டருக்கு போட்டியாக இந்தியாவில் டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட கார்கள் இருக்கின்றன.

இருப்பினும், போட்டி கார்களுக்கு அதிகளவு டஃப் கொடுக்கும் வகையில் தொழில்நுட்பம் மற்றும் சிறப்பம்சங்களில் வல்லவனாக ஹெக்டர் காட்சியளிக்கின்றது.

எம்ஜி ஹெக்டர் காரை வாங்கிய பிரபல பழம் பெரும் நடிகை... யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

அந்தவகையில், ஹெக்டர் எஸ்யூவி ரக காரில் 10.4 இன்சிலான இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. இதில், இ-சிம் கார்டைப் பொருத்தி இன்டர்நெட் சேவையை நேரடியாகப் பெற்றுக் கொள்ள முடியும். இதனால், ஹெக்டருடன் எப்போதும் இணைப்பில் இருக்க முடிகின்றது.

எம்ஜி ஹெக்டர் காரை வாங்கிய பிரபல பழம் பெரும் நடிகை... யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

அதுமட்டுமின்றி, கூடுதல் சொகுசு மற்றும் சிறப்பு வசதியாக பனோரமிக் சன்ரூஃப், ஹீடட் ஓஆர்விஎம்கள், மழை பெய்தால் தானாக இயங்கும் வைப்பர்கள், எலக்ட்ரானிக்க முறையில் அடைக்கக்கூடிய டெயில்கேட், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, 8 நிறங்கள் கொண்ட ஆம்பிசியன்ட் லைட் மற்றும் ரெக்லிங் வசதி கொண்ட பின்னிருக்கை உள்ளிட்ட பல்வேறு பரிமியம் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

எம்ஜி ஹெக்டர் காரை வாங்கிய பிரபல பழம் பெரும் நடிகை... யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

மேலும், பாதுகாப்பு வசதியாக இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், சோர்வு நினைவூட்டல், எலக்ட்ரானிக் ஸ்டேபிளிட்டி கன்ட்ரோல், டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் ஹில் ஹோல்ட் கன்ட்ரோல் ஆகிய வசதிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இத்துடன் ஆறு ஏர் பேக்குகளும் வழங்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bollywood Actress Hema Malini Gets MG Hector. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X