புல்லட் புரூஃப் காரை ஒதுக்கி வைத்து விட்டு சாதாரண காரை பயன்படுத்தும் அமிர்கான்... ஓ அப்படியா விஷயம்!

பிரபல நடிகரான அமிர்கான் புல்லட் புரூஃப் காரை ஒதுக்கி வைத்து விட்டு சாதாரண மஹிந்திரா காரை பயன்படுத்துகிறார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புல்லட் புரூஃப் காரை ஒதுக்கி வைத்து விட்டு சாதாரண காரை பயன்படுத்தும் அமிர்கான்... ஓ அப்படியா விஷயம்!

இந்தியாவில் உள்ள சினிமா நடிகர், நடிகைகள் பெரும்பாலானோர், விலை உயர்ந்த சொகுசு கார்களின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர். ரோல்ஸ் ராய்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற நிறுவனங்களின் லக்ஸரி கார்களை வாங்குவது என்பதெல்லாம் திரையுலக நட்சத்திரங்களை பொறுத்தவரை சர்வ சாதாரணம்.

புல்லட் புரூஃப் காரை ஒதுக்கி வைத்து விட்டு சாதாரண காரை பயன்படுத்தும் அமிர்கான்... ஓ அப்படியா விஷயம்!

திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் ஈட்டும் வருமானம் காரணமாக அவர்களால் லக்ஸரி கார்களை எளிதாக வாங்க முடிகிறது. திரையுலக நட்சத்திரங்கள் லக்ஸரி கார்களில் வலம் வருவதை நம்மால் அடிக்கடி பார்க்க முடியும். சினிமா பிரபலங்கள் பயன்படுத்தும் சொகுசு கார்களை சாதாரண நபர்களால் அவ்வளவு எளிதாக வாங்கி விட முடியாது.

புல்லட் புரூஃப் காரை ஒதுக்கி வைத்து விட்டு சாதாரண காரை பயன்படுத்தும் அமிர்கான்... ஓ அப்படியா விஷயம்!

ஆனால் இதற்கு விதிவிலக்காக ஒரு சில சினிமா நடிகர், நடிகைகள் இன்னமும் கூட மிகவும் சாதாரணமான கார்களை பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் பயன்படுத்தும் இந்த எளிமையான கார்களை சாதாரண நபர்களாலும் கூட வாங்க முடியும். அவ்வாறு மிக சாதாரணமான மற்றும் விலை குறைவான கார்களை பயன்படுத்தும் பாலிவுட் பிரபலங்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

புல்லட் புரூஃப் காரை ஒதுக்கி வைத்து விட்டு சாதாரண காரை பயன்படுத்தும் அமிர்கான்... ஓ அப்படியா விஷயம்!

அத்துடன் அவர்களின் எளிமையான கார்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். இதில், அமிர் கான் போன்ற உச்ச நட்சத்திரங்கள் சாதாரண கார்களை பயன்படுத்துவதற்கான காரணம் உங்களுக்கு வியப்பை கொடுக்கலாம்.

புல்லட் புரூஃப் காரை ஒதுக்கி வைத்து விட்டு சாதாரண காரை பயன்படுத்தும் அமிர்கான்... ஓ அப்படியா விஷயம்!

ஜாக்கி ஷெரூப் - டொயோட்டா இன்னோவா

மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான ஜாக்கி ஷெரூப் பென்ட்லீ போன்ற விலை உயர்ந்த கார்களை வைத்துள்ளார். எனினும் அவரது ரெகுலர் கார் டொயோட்டா இன்னோவாதான். இந்த சாதாரண கார்தான் அவரை வேலைக்கு கூட்டி செல்கிறது. இத்தனைக்கும் டொயோட்டா இன்னோவா காரை ஜாக்கி ஷெரூப் பெரும்பாலும் அவரேதான் ஓட்டி செல்வார்.

புல்லட் புரூஃப் காரை ஒதுக்கி வைத்து விட்டு சாதாரண காரை பயன்படுத்தும் அமிர்கான்... ஓ அப்படியா விஷயம்!

ஜாக்கி ஷெரூப் தனது டொயோட்டா இன்னோவா காரை ஓட்டி வருவதை பல முறை பார்க்க முடிந்துள்ளது. ஒரு சில சமயங்களில் அவரது ஓட்டுனர் இந்த காரை ஓட்டி வருவார். அவ்வாறு ஓட்டுனர் ஸ்டியரிங் வீலில் இருக்கும் சமயங்களில், ஜாக்கி ஷெரூப் கோ-டிரைவர் இருக்கையில் அமர்ந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ: போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமான அதிர்ச்சி... வைரல் வீடியோ...!

புல்லட் புரூஃப் காரை ஒதுக்கி வைத்து விட்டு சாதாரண காரை பயன்படுத்தும் அமிர்கான்... ஓ அப்படியா விஷயம்!

ஜான் ஆபிரகாம் - மாருதி சுஸுகி ஜிப்ஸி

பாலிவுட் திரையுலகில் மிகவும் அட்டகாசமான கார் மற்றும் பைக்குகளை வைத்திருப்பவர்களில் நடிகர் ஜான் ஆபிரகாமும் ஒருவர். நிஸான் ஜிடி-ஆர் முதல் சுஸுகி ஹயபுஸா வரை அவர் ஏராளமான வாகனங்களை வைத்துள்ளார். ஜான் ஆபிரகாமிடம் உள்ள விலை உயர்ந்த கார்களுக்கு மத்தியில் அவரது கராஜில் சாதாரணமான மாருதி சுஸுகி ஜிப்ஸி ஒன்றும் நிற்கிறது.

MOST READ: டீ பாய் வேலை செய்தவர் இன்று பெரும் செல்வந்தர்... சொகுசு கார்களுடன் செம வாழ்க்கை... எப்படி தெரியுமா?

புல்லட் புரூஃப் காரை ஒதுக்கி வைத்து விட்டு சாதாரண காரை பயன்படுத்தும் அமிர்கான்... ஓ அப்படியா விஷயம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கார்களில் மாருதி சுஸுகி ஜிப்ஸியும் ஒன்று. இந்த காரை ஜான் ஆபிரகாம் ஓட்டி வருவதை பல முறை பார்க்க முடிந்துள்ளது. ஆனால் தனது மாருதி சுஸுகி ஜிப்ஸி காரில், ஜான் ஆபிரகாம் மெக்கானிக்கலாக ஏதாவது மாற்றங்களை செய்துள்ளாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.

MOST READ: சான்ஸே இல்ல... இந்தியாவில் ஹூண்டாய் செய்த மாஸான சம்பவம்... என்னவென்று தெரியுமா?

புல்லட் புரூஃப் காரை ஒதுக்கி வைத்து விட்டு சாதாரண காரை பயன்படுத்தும் அமிர்கான்... ஓ அப்படியா விஷயம்!

பிபாஸா பாசு - டொயோட்டா பார்ச்சூனர்

டொயோட்டா பார்ச்சூனர் தனது ரகத்தில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக உள்ளது. எவ்விதமான பிரச்னையும் இல்லாமல் நீண்ட காலம் தனது உரிமையாளருக்கு சேவை செய்ய கூடிய கார் என்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் டொயோட்டா பார்ச்சூனர் மிகவும் புகழ்பெற்ற மாடல்களில் ஒன்றாக திகழ்கிறது.

புல்லட் புரூஃப் காரை ஒதுக்கி வைத்து விட்டு சாதாரண காரை பயன்படுத்தும் அமிர்கான்... ஓ அப்படியா விஷயம்!

பிரபல நடிகைகளில் ஒருவரான பிபாஸா பாசு இந்த டொயோட்டா பார்ச்சூனர் காரை வைத்துள்ளார். பழைய தலைமுறை டொயோட்டா பார்ச்சூனர் கார் அவரிடம் இருக்கிறது. இந்த வெள்ளை நிற காரில் பிபாஸா பாசு பலமுறை வலம் வந்துள்ளார். பிபாஸா பாசுவிடம் இருப்பது 3.0 லிட்டர் டீசல் வெர்ஷன் ஆகும். இது முழு நேர ஆல் வீல் டிரைவ் சிஸ்டமை பெற்றுள்ளது.

புல்லட் புரூஃப் காரை ஒதுக்கி வைத்து விட்டு சாதாரண காரை பயன்படுத்தும் அமிர்கான்... ஓ அப்படியா விஷயம்!

அமிர் கான் - மஹிந்திரா எக்ஸ்யூவி500

பாலிவுட் திரையுலகில் அனேகமாக புல்லட் புரூஃப் மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரை வைத்துள்ள ஒரே நடிகர் அமிர் கானாகதான் இருக்க கூடும். அதேநேரத்தில் சாதாரண மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரிலும் அமிர் கான் பல சந்தர்ப்பங்களில் வலம் வந்துள்ளார். பத்திரிக்கையாளர்கள் பின் தொடர்வரை தவிர்ப்பதற்காகவே சாதாரண மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரை அமிர் கான் தேர்வு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புல்லட் புரூஃப் காரை ஒதுக்கி வைத்து விட்டு சாதாரண காரை பயன்படுத்தும் அமிர்கான்... ஓ அப்படியா விஷயம்!

இதுதவிர டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய சாதாரண கார்களும் அவரிடம் உள்ளன. கோடிகளில் சம்பளம் வாங்கும் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான திரையுலக நட்சத்திரங்கள் இதுபோன்ற சாதாரண கார்களை பயன்படுத்துவது என்பது உண்மையில் ஆச்சரியமான விஷயம்தான்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bollywood’s Humble Cars: Amir Khan's Mahindra XUV500 To Jackie Shroff's Toyota Innova. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X