தவறான பாதையில் வேகமாக வந்த அரசு பேருந்து... துணிச்சலாக எதிரில் நின்ற பெண்... வைரல் வீடியோ!

தவறான பாதையில் வந்த அரசு பேருந்தை இடைமறித்து இளம் பெண் ஒருவர் நிற்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

தவறான பாதையில் வேகமாக வந்த அரசு பேருந்து... துணிச்சலாக எதிரில் நின்ற பெண்... வைரல் வீடியோ!

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விபத்துகளின் எண்ணிக்கைக்கு முக்கிய காரணமாக இருப்பது போக்குவரத்து விதிமீறல்கள்தான். ஆகையால், இதனை முற்றிலுமாக ஒழித்துகட்டும் விதமான முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தவறான வழியில் வந்த அரசு பேருந்தை, இளம் பெண் ஒருவர் வழி மறைக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.

தவறான பாதையில் வேகமாக வந்த அரசு பேருந்து... துணிச்சலாக எதிரில் நின்ற பெண்... வைரல் வீடியோ!

இந்தியாவை போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத நாடாக மாற்றும் வகையில் கொண்டுவரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அரசு பேருந்து ஓட்டுநர் இவ்வாறு விதிமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவறான பாதையில் வேகமாக வந்த அரசு பேருந்து... துணிச்சலாக எதிரில் நின்ற பெண்... வைரல் வீடியோ!

இச்சம்பவம் கடவுளின் பிரதேசம் என்று கூறப்படும் கேரள மாநிலத்தில்தான் அரங்கேறியுள்ளது. ஆனால், எந்த பகுதி என்பதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தவறான பாதையில் வேகமாக வந்த அரசு பேருந்து... துணிச்சலாக எதிரில் நின்ற பெண்... வைரல் வீடியோ!

கேரள மாநிலத்தின் போக்குவரத்து கழகமான கேஎஸ்ஆர்டிசி-க்கு சொந்தமான அரசு பேருந்து ஒன்று தவறான பாதையில் வந்துள்ளது. அதுமட்டுமின்றி, அந்த பேருந்து சற்று வேகமாக பயணித்துள்ளது. தான் என்ன செய்கின்றோம் என்ற விபரீதத்தை உணராத அந்த பேருந்து ஓட்டுநர், எதிர்புறத்தில் வரும் வாகனங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் சென்றுள்ளார்.

அப்போது, அவ்வழியாக ஸ்கூட்டரில் வந்த இளம்பெண், வலது பக்கமாக ஏறி வந்த அந்த பேருந்துக்கு நேர் எதிராக நின்றார். தன் தவற்றை உணர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்தை சரியான பாதையில் இயக்கும்பொருட்டு இடதுபக்க டிராக்கில் பயணிக்க ஆரம்பிக்கின்றார்.

தவறான பாதையில் வேகமாக வந்த அரசு பேருந்து... துணிச்சலாக எதிரில் நின்ற பெண்... வைரல் வீடியோ!

இளம்பெண்ணின் இந்த துணிச்சலான செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத் தீயாய் வைரலாகி வருகின்றது.

தவறான பாதையில் வேகமாக வந்த அரசு பேருந்து... துணிச்சலாக எதிரில் நின்ற பெண்... வைரல் வீடியோ!

பொதுவாக இதுபோன்ற தவறை பெரும்பாலான வாகன ஓட்டிகள் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். தாங்கள் செல்வற்கு பாதையில்லை எனில் தவறான பாதையில் சென்றாவது பயணத்தைத் தொடர இதுபோன்று முறைகேட்டில் ஈடுபடுகின்றனர்.

தவறான பாதையில் வேகமாக வந்த அரசு பேருந்து... துணிச்சலாக எதிரில் நின்ற பெண்... வைரல் வீடியோ!

இவ்வாறு, தவறான பாதையில் சென்று போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவதன் காரணத்தால் எதிர்புறத்தில் வரும் வாகனங்கள் முன்னேறிச் செல்ல முடியாமல் தடை ஏற்படுகின்றது. இது சில சமயங்களில் மிகப்பெரிய அளவிலான போக்குவரத்து நெரிசலுக்கு வழி வகுக்கும்.

தவறான பாதையில் வேகமாக வந்த அரசு பேருந்து... துணிச்சலாக எதிரில் நின்ற பெண்... வைரல் வீடியோ!

அதிலும், உருவத்தில் பெரிய அளவில் காணப்படும் பேருந்து மற்றும் டிரக் போன்றவை இவ்வாறு தவறான பாதையில் வருவதனால், மற்ற எந்த வாகனம் முன்னேறிச் செல்ல முடியமால் பெரும் சிரமத்தைச் சந்திக்கின்றன. ஆனால், இந்த தவறை அந்த வாகன ஓட்டிகள் உணர மறுக்கின்றனர்.

எனவே இதுபோல தவறான பாதையில் பயணிப்பதற்காக சாலையில் நடுவில் கற்களைக் கொண்டு அல்லது சுவரை எழுப்பி பிரிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தவறான பாதையில் வேகமாக வந்த அரசு பேருந்து... துணிச்சலாக எதிரில் நின்ற பெண்... வைரல் வீடியோ!

இருப்பினும், ஒரு சில வாகன ஓட்டிகள் இவையெதையும் பொருட்படுத்தாமல் மிகவும் அசாதரணமாக அதைக் கடந்து செல்கின்றனர். ஒரு சிலர் அந்த கற்களை அகற்றிவிட்டு செல்வதையும் நம்மால் காண முடியும்.

இதுபோன்ற விதிமீறல்களைத் தவிர்க்கும் பொருட்டே மத்திய அரசு கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமலுக்குக் கொண்டுவந்துள்ளது.

தவறான பாதையில் வேகமாக வந்த அரசு பேருந்து... துணிச்சலாக எதிரில் நின்ற பெண்... வைரல் வீடியோ!

ஆனால், கேரளாவில் மத்திய அரசு வழிகாட்டிய போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் விதிக்கப்படுவதில்லை. மாறாக, குறைவான அளவிலேயே விதிமீறல்களுக்கான அபராதம் வசூலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவறான பாதையில் வேகமாக வந்த அரசு பேருந்து... துணிச்சலாக எதிரில் நின்ற பெண்... வைரல் வீடியோ!

ஆகையால், சாலையில் பயணிக்கும் ஒவ்வொருவரும் சக வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் போக்குவரத்து விதிகளைக் கடைபிடிப்பது அனைவரின் கடமையாக இருக்கின்றது. இது மற்ற வாகன ஓட்டிகளுக்கு மட்டுமின்றி நமக்கும் நன்மையையே பயக்கும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Brave Women Stops Bus Coming In The Wrong Lane. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X