பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்?

பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்?

மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் நிறுவனம், கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம், இக்னிஸ் காரை அப்டேட் செய்தது. அப்போது எண்ட்ரி-லெவல் சிக்மா வேரியண்ட்டின் விலை 4.79 லட்ச ரூபாயாகவும், டாப் எண்ட் ஆல்பா ஏஎம்டி மாடலின் விலை 7.14 லட்ச ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. இவை புது டெல்லி, எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்?

அதாவது முந்தைய வெர்ஷனை காட்டிலும், அதன் விலை ரூ.9,000-13,000 அதிகரிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே முன் பகுதியில் 2 ஏர் பேக்குகள், டிரைவர் சீட்பெல்ட் ரிமைண்டர், இபிடி உடனான ஏபிஎஸ் ஆகிய பாதுகாப்பு வசதிகள் இருந்த நிலையில், இந்த கூடுதல் விலைக்கு புதிதாக ஹை-ஸ்பீடு வார்னிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கியது.

பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்?

மேலும் புதிய தலைமுறை வேகன் ஆர் மற்றும் பலேனோ ஆகிய கார்களில் உள்ள ஸ்மார்ட் ஸ்டூடியோ இன்போடெயின்டெண்ட் சிஸ்டம், ஆல்பா வேரியண்ட்டில் வழங்கப்பட்டது. அத்துடன் ஆல்பா வேரியண்ட்டில் ரூஃப் ரெயில்ஸ் மற்றும் டிஆர்எல்கள் உடன் புரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் ஆகியவையும் சேர்க்கப்பட்டன.

பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்?

இந்த சூழலில் இக்னிஸ் கார் 1 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை எட்டியதாக கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்தது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகளில் இக்னிஸ் இந்த புதிய மைல்கல்லை எட்டியது.

பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்?

முன்னதாக பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணையான ஆல்டோ 800 மற்றும் பலேனோ கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த வரிசையில் இக்னிஸ் காரும் வெகு விரைவில், பிஎஸ்-6 இன்ஜினை பெறவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்?

அத்துடன் காஸ்மெடிக் அப்டேட்களும் செய்யப்பட்டு ஃபேஸ்லிஃப்ட் மாடலாக புதிய இக்னிஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்?

இதன்படி விட்டாரா பிரெஸ்ஸா காரில் இருப்பதை போன்று யு-வடிவ ரிங் டிசைனை சேர்ப்பதன் மூலம் க்ரில் அமைப்பை மாற்றியமைக்க மாருதி சுஸுகி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுதவிர லோயர் பம்பர் சில்வர் ஸ்கிட் பிளேட்டை பெறவுள்ளதாகவும் தெரிகிறது. அதே சமயம் பின் பகுதியிலும் நுட்பமான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்?

தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி இக்னிஸ் காரில், 1.2 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 82 பிஎச்பி பவரையும், 4,200 ஆர்பிஎம்மில் 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

Most Read Articles
English summary
BSVI Compliant Maruti Ignis Facelift In The Works. Read in Tamil
Story first published: Saturday, June 15, 2019, 20:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X