1.6 லிட்டர் என்ஜினுடன் புதிய மாருதி எஸ்-கிராஸ் சோதனை ஓட்டம்...

இந்திய அரசாங்கத்தின் ஆணையின்படி அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட கார்களுக்கு மாறி வருகின்றன. அந்த வகையில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகியும் தனது பிரபலமான மாடல்களுள் ஒன்றான எஸ்-கிராஸ் காரை பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தி சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தி உள்ளது.

1.6 லிட்டர் என்ஜினுடன் புதிய மாருதி எஸ்-கிராஸ் சோதனை ஓட்டம்...

பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்டது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக 1.6 லிட்டர் டீசல் என்ஜினையும் அந்நிறுவனம் இந்த காரில் பொருத்தியுள்ளது. இதுதவிர இந்த அப்டேட் செய்யப்பட்ட எஸ்-கிராஸ் காரை இரு குறியீடுகள் மூலம் எளிதாக அடையாளம் காணலாம்.

1.6 லிட்டர் என்ஜினுடன் புதிய மாருதி எஸ்-கிராஸ் சோதனை ஓட்டம்...

அதாவது, 1.6 லிட்டர் டிடிஐஎஸ் 320 டீசல் என்ஜின் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை வெளிகாட்டும் விதமாக 1.6 என்ற பேட்ஜ் பின்புற கதவில் பின்புற ஹெட்லைட்டிற்கு கீழேயும், டிடிஐஎஸ் பேட்ஜ் காரின் முன்புற பக்கவாட்டிலும் பொருத்தப்பட்டுள்ளது. 1.6 லிட்டருக்கு கொள்ளளவு மாற்றப்பட்டாலும் 2015ல் அறிமுகமான எஸ்-கிராஸ் காரில் பொருத்தப்பட்ட என்ஜின் தான் இந்த காரிலும் உள்ளது.

1.6 லிட்டர் என்ஜினுடன் புதிய மாருதி எஸ்-கிராஸ் சோதனை ஓட்டம்...

1.6 லிட்டருக்கு என்ஜின் அப்டேட் செய்யப்பட்டுள்ளதால், தற்போதைய பிஎஸ்4 என்ஜின் வெளியிடும் அதிகபட்ச ஆற்றலை விட அதிகமாக 120 பிஎச்பி ஆற்றலையும் 320 என்எம் டார்க் திறனையும் இந்த எஸ்-கிராஸ் கார் வெளியிடும். இந்த என்ஜினுடன் 6 வேக நிலைகளை வழங்கக்கூடிய மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

1.6 லிட்டர் என்ஜினுடன் புதிய மாருதி எஸ்-கிராஸ் சோதனை ஓட்டம்...

வெளியாகியுள்ள சோதனை ஓட்ட புகைப்படங்களில் மாசு உமிழ்வு சோதனைக்காக டெஸ்ட்டிங் கிட் பொருத்தப்பட்டுள்ளதால் இந்த 1.6 லிட்டர் எஸ்-கிராஸ் கார் பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.

1.6 லிட்டர் என்ஜினுடன் புதிய மாருதி எஸ்-கிராஸ் சோதனை ஓட்டம்...

இந்த அப்டேட் செய்யப்பட்ட எஸ்-கிராஸ் காரை விலையுயர்ந்ததாக வெளிகாட்டவே இந்த காரில் மாருதி சுசுகி நிறுவனம் தனது வழக்கமான 1.5 லிட்டர் டீசல் என்ஜினை உபயோகிக்காமல் 1.6 லிட்டர் கொள்ளளவு உள்ள என்ஜினை பொருத்தியுள்ளது என்பதும் தெளிவாக புலப்படுகிறது.

1.6 லிட்டர் என்ஜினுடன் புதிய மாருதி எஸ்-கிராஸ் சோதனை ஓட்டம்...

இந்த எஸ்-கிராஸ் காரை தொடர்ந்து இதன் ஃபேஸ்லிப்ட் மாடலிலும் இந்த 1.6 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டால் அதன் விற்பனை கண்டிப்பாக பெரியளவில் வீழ்ச்சியை சந்திக்கும். இதனால் மாருதி சுசுகி நிறுவனம் எஸ்-கிராஸ் காரின் ஃபேஸ்லிப்ட் மாடலில் இத்தகைய 1.6 லிட்டர் என்ஜினை பொருத்தாது என எதிர்பார்க்கப்படுகிறது.

1.6 லிட்டர் என்ஜினுடன் புதிய மாருதி எஸ்-கிராஸ் சோதனை ஓட்டம்...

தற்சமயம் 90 பிஎச்பி மற்றும் 220 என்எம் டார்க் திறன் என்கிற வெளியிடும் ஆற்றல் அளவுகளுடன் பிஎஸ்4 என்ஜினை கொண்ட மாருதி எஸ்-கிராஸ் விற்பனையாகி வருகிறது. இந்த காரின் தயாரிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரலில் அமலாக இருக்கும் பிஎஸ்6 விதிக்கு முன்பாகவே முற்றிலும் நிறுத்தப்பட்டுவிடும்.

1.6 லிட்டர் என்ஜினுடன் புதிய மாருதி எஸ்-கிராஸ் சோதனை ஓட்டம்...

மேலும் மாருதி சுசுகி நிறுவனம் சியாஸ், எர்டிகா கார்களை போன்று எஸ்-கிராஸ் மாடலிலும் பெட்ரோல் வேரியண்ட்டை தயாரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கிடையில் விற்பனையாகவுள்ள இந்த 1.6 லிட்டர் டீசல் என்ஜினை கொண்ட எஸ்-கிராஸ் கார் விற்பனையில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தவுள்ளது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Most Read Articles
English summary
Maruti S-Cross 1.6L Diesel BS6 Spied Testing For The First Time
Story first published: Tuesday, November 5, 2019, 16:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X