விற்பனையில் பிஎஸ்6 கார்களை மிஞ்சும் பிஎஸ்4 கார்கள்... காரணம் இதுதான்

சில மாதங்களுக்கு முன்பு மாசு உமிழ்வு மிக குறைவான வாகனங்களை தான் கார் தயாரிப்பு நிறுவனங்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் ஒன்று முதல் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இறக்குமதி செய்ய வேண்டும் என்று அரசாங்கம் ஆணை ஒன்றை பிறப்பித்தது. இதனால் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் தங்களது அடுத்த தயாரிப்பு வாகனங்களை பிஎஸ்6 தரத்தில் வெளியிட முயற்சித்து வருகின்றன.

விற்பனையில் பிஎஸ்6 கார்களை மிஞ்சும் பிஎஸ்4 கார்கள்... காரணம் இதுதான்

ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பிஎஸ்4 கார்களை பெரும்பாலும் தீபாவளி உள்ளிட்ட விழாகாலங்களில் விற்று தீர்க்க திட்டமிட்டு அதிரடி சலுகைகள் பலவற்றை அறிவித்து வருகின்றன. கார்ப்பிரேட் தள்ளுபடிகள் மற்றும் இலவச பரிசு பொருட்கள் என அறிவித்துவரும் இந்நிறுவனங்களில் சில ரூ.1.75 லட்சம் வரை சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

விற்பனையில் பிஎஸ்6 கார்களை மிஞ்சும் பிஎஸ்4 கார்கள்... காரணம் இதுதான்

அந்த வகையில் ஆயுதப்பூஜைக்கு அறிவிக்கப்பட்ட இந்த அதிகப்படியான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளால் அறிவித்த நிறுவனங்களின் விற்பனை வேகமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக மாருதி சுசுகி நிறுவனம் இந்த பிஎஸ்4 மாடல் கார்களின் விற்பனையில் மட்டும் சுமார் 5லிருந்து 7 சதவீத விற்பனை வளர்ச்சியை இந்த மாதத்தின் முதல் 10 நாட்களில் அடைந்துள்ளது.

விற்பனையில் பிஎஸ்6 கார்களை மிஞ்சும் பிஎஸ்4 கார்கள்... காரணம் இதுதான்

இதுகுறித்து மாருதி சுசுகி நிறுவனத்தின் சேர்மன் ஆர்சி பார்கவா கூறுகையில், எங்களது பிஎஸ்6 மாடல்கள் இந்த விழாகாலத்தில் விற்பனையாகவில்லை. ஆனால் எங்களிடம் தற்போது எந்த பிஎஸ்4 கார்களும் இல்லை. அதேநேரம் பிஎஸ்6 தயாரிப்புகளை அரசாங்கம் நிர்ணயித்துள்ள காலக்கெடுவுக்குள் அறிமுகப்படுத்திவிடுவோம் என கூறினார்.

விற்பனையில் பிஎஸ்6 கார்களை மிஞ்சும் பிஎஸ்4 கார்கள்... காரணம் இதுதான்

மாருதி சுசுகி நிறுவனத்தின் பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட பெட்ரோல் வேரியண்ட் கார்கள் பெருமளவில் விற்பனையாகி வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்நிறுவனத்தின் முதல் பிஎஸ்6 மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலிருந்து தற்போது வரை சுமார் 2 லட்ச யூனிட் பிஎஸ்6 கார்கள் மாருதி சுசுகி நிறுவனத்தில் இருந்து விற்பனையாகியுள்ளன.

விற்பனையில் பிஎஸ்6 கார்களை மிஞ்சும் பிஎஸ்4 கார்கள்... காரணம் இதுதான்

பிஎஸ்6 கார்களை தயாரித்து வந்தாலும் இந்த கார்களை விட பிஎஸ்4 கார்கள் தான் அதிகம் விற்பனையாகுவதாக ஹூண்டாய் நிறுவனமும் நினைக்கிறது. சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் மூலமே தங்களது விற்பனை அதிகரித்துள்ளதாக கூறும் இந்நிறுவனம், விலை வேறுபாட்டால் சில வாடிக்கையாளர்களே பிஎஸ்6 காரை தேர்ந்தெடுப்பதாகவும் கூறுகிறது.

விற்பனையில் பிஎஸ்6 கார்களை மிஞ்சும் பிஎஸ்4 கார்கள்... காரணம் இதுதான்

டீலர்களும் பிஎஸ்4 மற்றும் பிஎஸ்6 என இரு மாடல் கார்களுக்கு சலுகைகளை அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி கொண்டு தான் இருக்கின்றனர். வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்6 கார்களை விற்க அதன் வெளியிடும் ஆற்றலை மட்டும் தான் கூற வேண்டியதாக இருக்கிறது, சலுகைகள் எதையும் கூற முடியவில்லை என புலம்பி வருகின்றனர்.

விற்பனையில் பிஎஸ்6 கார்களை மிஞ்சும் பிஎஸ்4 கார்கள்... காரணம் இதுதான்

எதிர்காலத்தில் பிஎஸ்4 கார்களின் மறு விற்பனை தான் சூடுப்பிடிக்கும் என தெரிகிறது. ஏனெனில் டீலர்ஷிப்களால் பிஎஸ்6 கார்களின் பராமரிப்பிற்கு ஆகும் செலவை கூட சரியாக கூற முடியவில்லை. இதைவிட முக்கிய காரணம், உபயோகிக்கப்பட்ட காரை விற்கும் டீலர்கள் பிஎஸ்6 கார்கள் இந்தியா முழுவதும் பரவும் சமயத்தில் பிஎஸ்4 கார்களை விற்க தயாராக உள்ளனர். இந்த பிஎஸ்4 கார்கள் விரைவில் அதிகம் தேவைப்படும் காராக மாறும் என்பதால் இத்தகைய டீலர்கள் அதிகளவில் சம்பாதிப்பார்கள் என்பது உறுதி.

விற்பனையில் பிஎஸ்6 கார்களை மிஞ்சும் பிஎஸ்4 கார்கள்... காரணம் இதுதான்

பிஎஸ்6 தரத்தில் டீசல் என்ஜினை கொண்ட கார்களின் தயாரிப்பு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. குறிப்பாக மஹிந்திரா நிறுவனம் பிஎஸ்6 டீசல் என்ஜினை கொண்ட கார்களை தயாரிக்கவே ஆரம்பிக்கவில்லை. இதுவரை ஒரு பிஎஸ்6 டீசல் என்ஜின் கார் கூட சந்தையில் விற்பனைக்கு வரவில்லை. மேலும் இத்தகைய கார்களின் விலை பெட்ரோல் வேரியண்ட்டை விட அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விற்பனையில் பிஎஸ்6 கார்களை மிஞ்சும் பிஎஸ்4 கார்கள்... காரணம் இதுதான்

சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளால் பிஎஸ்4 கார்களின் விற்பனை பிஎஸ்6 கார்களை விட அதிகமாக நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கும் பல சலுகைகள் பிஎஸ்4 கார்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், விற்பனை இன்னும் உயரும். இதனால் பல முன்னணி நிறுவனங்கள் பிஎஸ்4 காருக்கு அறிவித்துள்ள இந்த அதிரடி சலுகைகளை அடுத்த ஆண்டு மார் 31ஆம் தேதி வரை தொடரும் என்றே தெரிகிறது.

Most Read Articles
மேலும்... #sales
English summary
BS-IV Models Outselling BS-VI Models This Festive Season: Heavy Discounts Being Offered
Story first published: Wednesday, October 23, 2019, 13:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X