பிஎஸ்6 தரத்தில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி சோதனை ஓட்டம்... புதிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?

7 இருக்கைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள எம்ஜி ஹெக்டர் பிஎஸ்6 கார், இந்திய சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள இதன் புகைப்படங்களின் மூலம் இந்த எஸ்யூவி வதோதராவில் உள்ள எம்ஜி இந்தியா தொழிற்சாலைக்கு அருகே சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது தெரிய வருகிறது.

பிஎஸ்6 தரத்தில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி சோதனை ஓட்டம்... புதிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?

முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த காரின் வெளிப்புற தோற்ற்ம் எம்ஜி ஹெக்டர் காரை விட சிறிது வித்தியாசமாக உள்ளது. இதனால் டாடா ஹெரியரின் 7 இருக்கை வெர்சனுக்கு க்ராவிட்டாஸ் என பெயர் சூட்டப்பட்டது போல, ஹெக்டரின் இந்த 7 இருக்கை வெர்சனும் புதிய பெயருடன் அறிமுகமாகலாம்.

பிஎஸ்6 தரத்தில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி சோதனை ஓட்டம்... புதிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?

வெளிப்புறத்தை போல் பின்புற பம்பரின் டிசைனும் மாற்றப்பட்டுள்ளதால் முன்புற பம்பரின் டிசைனிலும் மாற்றத்தை எதிர்பார்க்கலாம். இரட்டை-எக்ஸாஸ்ட் அமைப்பை இந்த பிஎஸ்6 காரில் எம்ஜி நிறுவனம் பொருத்தியுள்ளது. இந்த புதிய எக்ஸாஸ்ட் சிஸ்டம் மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களில் இருப்பது போல் காட்சியளிக்கிறது.

பிஎஸ்6 தரத்தில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி சோதனை ஓட்டம்... புதிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?

அதேபோல் முன்புறத்திலும் புதிய எல்இடி ஹெட்லைட் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. காரின் பின் இருக்கைக்கும் ஹெட்ரெஸ்ட் கொடுக்கப்பட்டிருப்பது இந்த சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலம் தெரிய வருகிறது. இவை தவிர ஹெக்டர் எஸ்யூவியின் இந்த வெர்சனின் வெளிப்புறத்தில் மிக பெரிய அளவில் எந்த மாற்றங்களையும் இந்நிறுவனம் கொண்டுவரவில்லை. அலாய் சக்கரங்களின் அளவுகளும் முந்தைய மாடலில் இருந்து அப்படியே தொடர்ந்துள்ளன.

பிஎஸ்6 தரத்தில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி சோதனை ஓட்டம்... புதிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?

ஜீப் காம்பஸ் மற்றும் டாடா ஹெரியர் மாடல்கள் கொண்டுள்ள 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் அமைப்பு இந்த ஹெக்டர் பிஎஸ்6 காருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த டீசல் என்ஜின் 168 பிஎச்பி பவரையும் 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

பிஎஸ்6 தரத்தில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி சோதனை ஓட்டம்... புதிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?

இதனுடன் 1.5 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்ட ஹையர் பெட்ரோல் மில்ட்-ஹைப்ரீட் வேரியண்ட்டும் வழங்கப்படுகிறது. இதில் 1.5 லிட்டர் டர்போ-சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் 141 பிஎச்பி பவரையும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

பிஎஸ்6 தரத்தில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி சோதனை ஓட்டம்... புதிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?

இந்த என்ஜின் தேர்வுகள் முந்தைய மாடலில் இருந்து கொடுப்பட்டிருந்தாலும், இந்த என்ஜின்களில் இருந்து வெளியிடப்படும் ஆற்றலானது கண்டிப்பாக சிறிது வேறுபாட்டுடனே இருக்கும். இந்த பிஎஸ்6 காருக்கு ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாகவும், பெட்ரோல் வேரியண்ட்டிற்கு மட்டும் கூடுதலாக 6-ஸ்பீடு டிசிடி யூனிட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்6 தரத்தில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி சோதனை ஓட்டம்... புதிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?

தனது பிரிவில் உள்ள டாடா க்ராவிட்டாஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா போன்ற மாடல்களுடன் விற்பனையில் மல்லுக்கட்டி வரும் எம்ஜி ஹெக்டர் கார், போஜுன் 350, வுலிங் அல்மாஸ் (7 இருக்கைகளை கொண்டது) மற்றும் செவ்ரோலெட் கேப்டிவா என மூன்று விதமான தோற்றங்களில் விற்பனையாகி வருகிறது.

பிஎஸ்6 தரத்தில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி சோதனை ஓட்டம்... புதிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?

2019 ஜீன் மாதத்தில் 5-இருக்கைகளை கொண்ட ஹெக்டர் எஸ்யூவியின் மூலம் இந்தியாவில் கால் பதித்த எம்ஜி மோட்டார் நிறுவனம், ஹெக்டரின் இந்த 7 இருக்கை வெர்சன் காரிற்காக அதிகளவில் பணத்தை செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எம்ஜி நிறுவனம் இவ்வாறு அதிகளவில் செலவு செய்துள்ளதற்கு ஹெக்டரின் விற்பனை லாபமும் ஒரு காரணம் தான்.

Most Read Articles
English summary
MG Hector BS6 Spied with captain seats, new bumper
Story first published: Saturday, November 30, 2019, 13:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X