2020 ரெனால்ட் டஸ்டர் சோதனை ஓட்டம்... என்ஜின் குறித்த விபரங்கள் வெளியீடு

புதிய மாசு உமிழ்வு விதிக்கு இந்திய அரசாங்கம் நிர்ணயித்துள்ள காலக்கெடு நெருங்கி வருவதால், அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பிஎஸ்6 என்ஜினிற்கு அப்டேட்டாகி வருகின்றன. அந்த வகையில் ரெனால்ட் நிறுவனம் பிஎஸ்6-க்கு இணக்கமாக விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள 2020 டஸ்டர் எஸ்யூவி மாடலை சோதனை ஓட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

2020 ரெனால்ட் டஸ்டர் சோதனை ஓட்டம்... என்ஜின் குறித்த விபரங்கள் வெளியீடு

புனே- மும்பை நெடுஞ்சாலையில் நடத்தப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்டத்தில் பிஎஸ்6 சான்றிதழை வழங்கும் ஏஆர்ஏஐ அமைப்பும் ஈடுப்பட்டுள்ளது. முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் டஸ்டர் கார் இந்த சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தாலும் முன்புறத்தின் பம்பர் உள்ளிட்ட சில பாகங்கள் வெளிப்படையாகவே தெரிகின்றன.

2020 ரெனால்ட் டஸ்டர் சோதனை ஓட்டம்... என்ஜின் குறித்த விபரங்கள் வெளியீடு

சமீபத்தில் அறிமுகமான டஸ்டரின் தோற்றத்தில் இருக்கும் இந்த 2020 டஸ்டர் கார், டஸ்டர் மாடலின் இரண்டாவது தலைமுறை காராக விளங்காது. ஏனெனில் இதற்கிடையில் டஸ்டரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் இந்திய சந்தையில் அறிமுகமாகிவிட்டது.

2020 ரெனால்ட் டஸ்டர் சோதனை ஓட்டம்... என்ஜின் குறித்த விபரங்கள் வெளியீடு

பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான ஒரே ஒரு பெட்ரோல் என்ஜின் தேர்வை மட்டும் தான் இந்த 2020 டஸ்டர் காரில் ரெனால்ட் நிறுவனம் வழங்கியுள்ளது. இருப்பினும் இந்த ஒரே ஒரு என்ஜினில் மட்டும் தனது முழு கவனத்தையும் இந்நிறுவனம் செலுத்தியுள்ளதால், இந்த பெட்ரோல் என்ஜினின் வெளிப்படுத்தும் ஆற்றல் அளவானது அதிகமாக இருக்கும்.

2020 ரெனால்ட் டஸ்டர் சோதனை ஓட்டம்... என்ஜின் குறித்த விபரங்கள் வெளியீடு

முன்னதாக, டீசல் பிஎஸ்6 என்ஜின்களை அறிமுகப்படுத்த போவதில்லை என ரெனால்ட் நிறுவனம் கூறியிருந்தது. இதனால் தான் 2020 ரெனால்ட் டஸ்டரில் இந்நிறுவனம் பெட்ரோல் வேரியண்ட்டை மட்டும் வழங்கியுள்ளது. ஆனால் இந்த பெட்ரோல் வேரியண்ட்டில் பல என்ஜின் தேர்வுகள் உள்ளன என்று தெரிவித்துள்ளது.

2020 ரெனால்ட் டஸ்டர் சோதனை ஓட்டம்... என்ஜின் குறித்த விபரங்கள் வெளியீடு

தற்போதைய ரெனால்ட் டஸ்டர் கார் பிஎஸ்4 தரத்தில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களுடன் விற்பனையாகி வருகிறது. ஆனால் 2020 டஸ்டரில் இவ்விரு என்ஜின்களுக்கு பதிலாக 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் போன்ற என்ஜின் தேர்வுகளை ரெனால்ட் நிறுவனம் வழங்கவுள்ளது. இந்த இரு புதிய என்ஜின்களும் ஏற்கனவே ஐரோப்பா சந்தையில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.

2020 ரெனால்ட் டஸ்டர் சோதனை ஓட்டம்... என்ஜின் குறித்த விபரங்கள் வெளியீடு

ஐரோப்பாவில், மூன்று சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 100 பிஎச்பி பவர் மற்றும் 160 என்எம் டார்க் திறனையும், 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் 115- 160 பிஎச்பி பவர் மற்றும் 270 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகின்றன. மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக கொடுக்கப்படவுள்ளன.

2020 ரெனால்ட் டஸ்டர் சோதனை ஓட்டம்... என்ஜின் குறித்த விபரங்கள் வெளியீடு

பிஎஸ்4 என்ஜினை கொண்ட ரெனால்ட் டஸ்டர் காரின் ஆரம்ப நிலை ஆர்xஇ பெட்ரோல் வேரியண்ட் ரூ.7.99 லட்சத்திற்கும், ஆர்xஎஸ் பெட்ரோல் சிவிடி வேரியண்ட் ரூ.10 லட்சம் வரையிலும் விற்கப்பட்டு வருகின்றன. டீசல் வேரியண்ட்கள் ரூ.9.34 லட்சத்தில் இருந்து ரூ.12.54 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றன. பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான பெட்ரோல் என்ஜினை கொண்ட இந்த ரெனால்ட் டஸ்ட்ர் 2020 பிப்ரவரியில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Spy Pics: Renault Duster BS-VI Spotted Testing On Pune Mumbai Highway
Story first published: Wednesday, November 20, 2019, 18:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X