நினைத்து பார்க்க முடியாத வேகத்தை தொட்டு அசத்திய புகாட்டி சிரோன் கார்!

நினைத்து பார்க்க முடியாத வேகத்தை தொட்டு புகாட்டி சிரோன் கார் புதிய உலக சாதனையை படைத்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

நினைத்து பார்க்க முடியாத வேகத்தை தொட்டு அசத்திய புகாட்டி சிரோன் கார்!

உலகின் அதிவேக சூப்பர் கார்களை தயாரித்து அசத்தி வருகிறது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புகாட்டி நிறுவனம். அந்நிறுவனத்தின் வேரான் கார் ஏற்கனவே உலகின் அதிவேக தயாரிப்பு நிலை மாடல் என்ற பெருமையை பெற்றிருந்தது. இந்த நிலையில், அதன் வழித்தோன்றலாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய சிரோன் கார் நினைத்து பார்க்க முடியாத வேகத்தை தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது.

நினைத்து பார்க்க முடியாத வேகத்தை தொட்டு அசத்திய புகாட்டி சிரோன் கார்!

கடந்த ஆகஸ்ட் 2ந் தேதி ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் தலைமையகம் அமைந்துள்ள வோல்ஸ்பர்க் அருகிலுள்ள அந்நிறுவனத்திற்கு சொந்தமான எஹ்ரா லெசியன் சோதனை ஓட்ட களத்தில் வைத்து புதிய புகாட்டி சிரோன் காரின் அதிவேக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

நினைத்து பார்க்க முடியாத வேகத்தை தொட்டு அசத்திய புகாட்டி சிரோன் கார்!

இந்த அதிவேக சாதனையின்போது புகாட்டி சிரோன் கார் மணிக்கு 490.484 கிமீ வேகத்தை தொட்டு புதிய சாதனை படைத்தது. இந்த சாதனையை ஜெர்மனி நாட்டின் நம்பகத்தன்மைக்கு பெயர் பெற்ற சான்று அளிக்கும் நிறுவனமான ஜெர்மன் டியூவி அமைப்பு அங்கீகரித்துள்ளது.

நினைத்து பார்க்க முடியாத வேகத்தை தொட்டு அசத்திய புகாட்டி சிரோன் கார்!

புகாட்டி நிறுவனத்தின் டெஸ்ட் டிரைவர் ஆன்டி வாலஸ் புகாட்டி சிரோன் காரை அதிவேகத்தில் ஓட்டி இந்த சாதனை படைத்தார். இந்த அதிவேக சாதனையை படைப்பதற்காக புகாட்டி நிறுவனம் மிச்செலின் மற்றும் டல்லாரா ஆகிய நிறுவனங்களுடன் கடந்த 6 மாதங்களாக இணைந்து பணியாற்றி, காரில் சில மாற்றங்களை செய்துள்ளது.

நினைத்து பார்க்க முடியாத வேகத்தை தொட்டு அசத்திய புகாட்டி சிரோன் கார்!

சாதாரண புகாட்டி சிரோன் கார் மணிக்கு 261 மைல் வேகத்தில் செல்லும் வகையில் எலெட்ரானிக் ஸ்பீடு லிமிட்டர் மூலமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது ஆனால், ஸ்பீடோமீட்டர் 310 மைல் வேகம் வரை காட்டும் வகையில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், முதல்முறையாக 300 மைல் வேகத்தை கடந்து, இந்த வேகத்தை கடந்த உலகின் முதல் தயாரிப்பு நிலை கார் என்ற பெருமையை பெற்றுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு கோனிக்செக் அகெரா ஆர்எஸ் கார் 284.55 கிமீ வேகத்தை தொட்டு புதிய உலக சாதனையை படைத்தது. இருவழி முறையில் சராசரியாக 277.87 மைல் வேகத்தை பதிவு செய்தது. இந்த நிலையில், சிரோன் கார் அதையெல்லாம் கடந்து மணிக்கு 304.773 மைல் (490.484 கிமீ) என்ற அசாத்திய வேகத்தை தொட்டு திரும்பி பார்க்க வைத்துள்ளது.

MOST READ: வசமாக சிக்கிய டிஎஸ்பி... ஸ்பாட்டிலேயே சூப்பரான தண்டனை கிடைத்தது... என்னவென்று தெரியுமா?

நினைத்து பார்க்க முடியாத வேகத்தை தொட்டு அசத்திய புகாட்டி சிரோன் கார்!

சாதாரண புகாட்டி சிரோன் காரைவிட இந்த அதிவேக சாதனைக்காக உருவாக்கப்பட்ட புகாட்டி சிரோன் கார் 9.84 அங்குலம் கூடுதல் நீளம் கொண்டது. பின்புறத்தில் விங் அமைப்பும், ஏர் பிரேக்கும் நீக்கப்பட்டு, புதிய அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், டிராக் எனப்படும் பின்னோக்கு இழுவிசை குறைக்கும் நோக்கோடு மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

MOST READ: ஆரம்பித்து வைத்த மம்தா பானர்ஜி... குஜராத்தே எதிராக திரும்பியது... மோடி அரசுக்கு பெரும் தலை வலி...

நினைத்து பார்க்க முடியாத வேகத்தை தொட்டு அசத்திய புகாட்டி சிரோன் கார்!

புகாட்டி சிரோன் காரில் க்வாட் டர்போசார்ஜர்கள் கொண்ட 8.0 லிட்டர் டபிள்யூ-16 சிலிண்டர் அமைப்புடைய எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 1,479 முதல் 1,578 எச்பி பவரையிலான பவரை வாரி இறைக்கும் திறன் படைத்தது.

MOST READ: புதிய ஸ்கூட்டரில் அடிக்கடி பிரச்னை... ஹோண்டா சர்வீஸ் சென்டருக்கு பாடம் புகட்டிய பெண்...

நினைத்து பார்க்க முடியாத வேகத்தை தொட்டு அசத்திய புகாட்டி சிரோன் கார்!

முன்புறத்தில் ஓட்டுனருக்கு அருகிலான பயணி இருக்கையில் கணக்கிடும் வகையிலான கம்ப்யூட்டர்கள் மற்றும் ஓட்டுனருக்கு பாதுகாப்பை வழங்கும் ரோல்கேஜ் உள்ளிட்டவற்ற பாதுகாப்பு அம்சங்களுடன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், அதிவேகத்தில் கார் செல்லும்போது நிலைத்தன்மையை தக்கவைப்பதற்காகவும் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

நினைத்து பார்க்க முடியாத வேகத்தை தொட்டு அசத்திய புகாட்டி சிரோன் கார்!

உலகின் அதிவேக தயாரிப்பு நிலை காரை தயாரிக்கும் நிறுவனம் என்ற பெருமையை தக்கவைப்பதற்காக புகாட்டி தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டது. அதற்கு இப்போது பலன் கிட்டியுள்ளது. மேலும், இந்த சாதனை மிக அசாத்தியமானதாகவே கருதப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #புகாட்டி #bugatti
English summary
Bugatti Chiron Sport has acheived a top speed of 490 km/h, making it the fastest out there right now.
Story first published: Wednesday, September 4, 2019, 12:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X