டிக் டாக் மோகத்தால் நடந்த விபரீதம்.. வேலையையிழந்து பரிதவிக்கும் ஓட்டுநர்...

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டிக் டாக் மோகத்தினால் பேருந்து ஓட்டுநர்கள் சிலர் வேலையையிழந்து பரிதவித்து வருகின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

டிக் டாக் மோகத்தால் நடந்த விபரீதம்.. வேலையையிழந்து பரிதவிக்கும் ஓட்டுநர்...

இந்தியாவில் நாளுக்கு நாள் இணையத்தின்மீதான மோகம் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. இதன் வெளிப்பாடாகவே, இளைஞர்களை குறி வைக்கின்ற வகையில் நாள்தோறும் புதிய புதிய செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

அவ்வாறு, தற்போதைய இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஓர் செயலியாக டிக் டாக் காணப்படுகின்றது.

டிக் டாக் மோகத்தால் நடந்த விபரீதம்.. வேலையையிழந்து பரிதவிக்கும் ஓட்டுநர்...

இந்த செயலியை நாடு முழுவதும் பயன்பாட்டில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்காக பாராளுமன்றம் வரை குரல் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், உச்சநீதிமன்றத்தை நாடி அந்த செயலி மீண்டும் பொது பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

இதன் மீது தடை விதிக்க வேண்டும் என்று போராடுகின்ற வகையில் பல்வேறு அறுவறுக்கத்தக்க வீடியோக்களை அதன் பயனர்கள் சிலர் செயலில் பதிவிட்டு வந்தனர்.

டிக் டாக் மோகத்தால் நடந்த விபரீதம்.. வேலையையிழந்து பரிதவிக்கும் ஓட்டுநர்...

இதன்காரணமாகவே, அந்த செயலியை உடனடியாக பயன்பாட்டில் இருந்து நீக்க வேண்டும் என புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர்கள் சிலர் டிக் டாக் செயலி மீதிருந்த மோகத்தினால் தற்போது அவர்களது பணியை இழந்து பரிதவித்து வருகின்றனர்.

டிக் டாக் மோகத்தால் நடந்த விபரீதம்.. வேலையையிழந்து பரிதவிக்கும் ஓட்டுநர்...

சமூக வலைதளங்களில் தங்களைப் பிரபலப்படுத்திக் கொள்ள நினைக்கும் இளைஞர்கள் சிலர், டிக் டாக் போன்ற செயலியைப் பயன்படுத்தி ஸ்டண்ட் செய்வது, நடனம் ஆடுவது உள்ளிட்ட பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அவ்வாறு வெளியிடப்படும் பெரும்பாலான வீடியோக்கள் அவர்களுக்கே சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடுகின்றன.

டிக் டாக் மோகத்தால் நடந்த விபரீதம்.. வேலையையிழந்து பரிதவிக்கும் ஓட்டுநர்...

அந்தவகையில், சர்ச்சையை ஏற்படுத்தும்வகையில் வீடியோக்களை வெளியிடும் நபர்களை குறிப்பாக மோட்டார் வாகனம் சார்ந்து வீடியோக்களை பதிவிடும் இளைஞர்களை குறிவைத்து கேரள மாநில மோட்டார் வாகனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து துவங்கியுள்ளனர்.

இதன்படி, அவர்கள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் தற்போது மூன்று பேருந்து ஓட்டுநர்கள் வேலையையிழந்து, செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.

டிக் டாக் மோகத்தால் நடந்த விபரீதம்.. வேலையையிழந்து பரிதவிக்கும் ஓட்டுநர்...

தற்போது தண்டனைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் மூன்று பேருந்து ஓட்டுநர்களும் ஆபத்து விளைவிக்கின்ற வகையில் பேருந்தை இயக்கி டிக் டாக் வீடியோ பதிவிட்டதன் காரணத்தினாலேயே இத்தகைய சூழலை அடைந்திருப்பதாக போக்குவரத்துத்துறை அதிகாரி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மேலும், இதுகுறித்த இரண்டு வீடியோக்களை பஸ் பிரேமிக்கள், கேரளா டூரிஸ்ட் பஸ் பேன்ஸ் ஆகிய யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.

டிக் டாக் மோகத்தால் நடந்த விபரீதம்.. வேலையையிழந்து பரிதவிக்கும் ஓட்டுநர்...

முதல் வீடியோவில், ஓட்டுநர் ஒருவர் பேருந்தை சிறிது வேகத்தில் செல்லுமாறு இயக்கிய பின்னர் கீழே இறங்குகின்றார். மேலும், அவர் ஒரு யானையை தன் பின்னால் நடக்கவிட்டு அழகு பார்ப்பதைப் போல் பேருந்தை தடவியவாறு அதன் முன் பக்கம் நடக்கின்றார். பின்னர், பேருந்தில் ஏறி அதனை நிறுத்துகின்றார்.

இந்த நிகழ்வினை அவர் ஓர் ஆள்வரமற்ற மைதானத்தில் நிகழ்த்தியிருந்தாலும், போக்குவரத்து வாகன சட்டத்தின் குற்றமாகும். ஒரு வேலை அப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்திருந்தால் அது மிகமோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதே நிதர்சனமான உண்மை.

ஆகையால், தனக்கு மட்டுமின்ற சுற்றத்தார்க்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துக் கொண்ட அப்பேருந்தின் ஓட்டுநருக்கு தண்டனையளிக்கும் விதமாக ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

டிக் டாக் மோகத்தால் நடந்த விபரீதம்.. வேலையையிழந்து பரிதவிக்கும் ஓட்டுநர்...

முதல் வீடியோவைப் போலவே இரண்டாவது வீடியோவிலும் ஒரு சில காட்சிகள் முரண்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இந்த வீடியோவில் காணப்படும் மூன்று ஓட்டுநர்களும் பேருந்து ஓடிக் கொண்டிருக்கும் போதே ஆட்டம் போடுவது, கையை விட்டு பேருந்தை இயக்குவது மற்றும் செல்ஃபி வீடியோ எடுப்பது என ஆபத்தை உணராமல் விபரீத செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வீடியோக்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகியதை அடுத்து கேரள மாநில போக்குவரத்து அதிகாரிகள் கண்களிலும் பட்டுள்ளது. இதையடுத்தே முரண்பட்ட செயல்களில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுநர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் ஓட்டுநர் உரிமம் ரத்து மற்றும் பணியை விட்டு நீக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

டிக் டாக் மோகத்தால் நடந்த விபரீதம்.. வேலையையிழந்து பரிதவிக்கும் ஓட்டுநர்...

தொடர்ந்து, ஓட்டுநர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைப் போன்றே பேருந்துகள் மீதும் ஒரு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், பேருந்தில் தடை செய்யப்பட்ட மின் விளக்குகள் மற்றும் ஒலி பெருக்கிகள் உள்ளிட்டவை பேருந்துகளில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறி நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bus Drivers Suspended For Using TikTok While Driving. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X