2 புதிய எலெக்ட்ரிக் மினி வேன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது பிஒய்டி நிறுவனம்

இந்தியாவில் எலெக்ட்ரிக் எம்பிவி கார் மற்றும் எலெக்ட்ரிக் மினி வேன் வாகனங்களை பிஒய்டி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

2 புதிய எலெக்ட்ரிக் மினி வேன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது பிஒய்டி நிறுவனம்

சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் உலக அளவில் பிரபலமாக விளங்குகிறது. ஏற்கனவே இந்தியாவில் எலெக்ட்ரிக் பஸ்களை விற்பனை செய்து வருவதுடன், இந்த மார்க்கெட்டில் முன்னணி நிறுவனமாகவும் விளங்குகிறது. இந்த நிலையில், இன்று முழுக்க முழுக்க பேட்டரியில் இயங்கும் எம்பிவி கார் மற்றும் மினி வேன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

2 புதிய எலெக்ட்ரிக் மினி வேன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது பிஒய்டி நிறுவனம்

பிஒய்டி டி-3 எம்பிவி கார் மாடலானது பயணிகள் போக்குவர்த்திற்கும், பிஒய்டி டி3 மினி வேன் மாடலானது வர்த்தக பயன்பாட்டிற்கும் ஏற்ற சிறப்பம்சங்களை பெற்றிருக்கின்றன. இந்த ரகத்தில் வரும் முதல் எலெக்ட்ரிக் வாகனங்கள் இவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

2 புதிய எலெக்ட்ரிக் மினி வேன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது பிஒய்டி நிறுவனம்

இந்த வாகனங்களின் முழுமையான தொழில்நுட்ப விபரங்களை பிஒய்டி நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால், இந்த வாகனங்களில் இருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

2 புதிய எலெக்ட்ரிக் மினி வேன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது பிஒய்டி நிறுவனம்

இந்த வாகனங்களில் உள்ள பேட்டரியை 1.5 மணிநேரத்தில்டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக முழுமையாக சார்ஜ் ஏற்றும் வாய்ப்பை வழங்கும். சாதாரண ஏசி சார்ஜரும் இந்த வாகனங்களுக்கு வழங்கப்படும்.

2 புதிய எலெக்ட்ரிக் மினி வேன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது பிஒய்டி நிறுவனம்

இந்த இரண்டு எலெக்ட்ரிக் மினி வேன்களிலுமே கீ லெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட், புளூடூத் வசதியுடன் மியூசிக் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் இந்த எலெக்ட்ரிக் மினி வேன் மாடல்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

2 புதிய எலெக்ட்ரிக் மினி வேன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது பிஒய்டி நிறுவனம்

இரண்டு மாடல்களிலுமே இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கி்ங் சிஸ்டம், எலெக்ட்ரிக் பார்க்கிங் சிஸ்டம், பிரேக் ஓவர்ரைட் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இதுதவிர, வாடகை கார் நிறுவனங்கள் தங்களது வாகனங்களை கண்காணிக்கவும், தொடர்பு கொள்ளவும் ஏதுவான தொழில்நுட்ப வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

2 புதிய எலெக்ட்ரிக் மினி வேன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது பிஒய்டி நிறுவனம்

இந்த எலெக்ட்ரிக் மினி வேன்கள் முதல்கட்டமாக டாக்சி மற்றும் போக்குவரத்து நிறுவனங்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. தனி நபர் பயன்பாட்டு சந்தைக்கு இப்போதைக்கு இல்லை. எனவே, விலை அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. நேரடியாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படும்போது எண்ணிக்கையை பொறுத்து விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது.

2 புதிய எலெக்ட்ரிக் மினி வேன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது பிஒய்டி நிறுவனம்

பிஒய்டி நிறுவனத்தின் புதிய மினி வேன்கள் நகரப்புறத்தில் இயங்கும் டாக்சி நிறுவனங்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் வாய்ப்பு உள்ளது. அதேபோன்று, நகர்ப்புற சரக்கு போக்குவரத்தில் ஈடுபட்டு இருக்கும் நிறுவனங்களின் கவனத்தையும் இந்த எலெக்ட்ரிக் மினி வேன் ஈர்க்கும் என நம்பலாம்.

Most Read Articles
English summary
China-based BYD has introduced the all-electric T3 MPV car and T3 commercial wagon in India.
Story first published: Thursday, September 5, 2019, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X