இன்னும் 45 நாட்கள்தான்.. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு சங்கு.. அதிரடியாக முடிவுரை எழுதும் மோடி அரசு

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மோடி அரசு அதிரடியாக முடிவுரை எழுதவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இன்னும் 45 நாட்கள்தான்.. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு சங்கு.. அதிரடியாக முடிவுரை எழுதும் மோடி அரசு

இந்தியாவை எலெக்ட்ரிக் வாகனங்களின் தேசமாக மாற்றியே தீருவது என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கங்கணம் கட்டி கொண்டு செயல்பட்டு வருகிறது. இதற்காக பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிராக ஒரு மிகப்பெரிய போரையே மத்திய அரசு தொடுத்துள்ளது. இந்த போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இன்னும் 45 நாட்கள்தான்.. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு சங்கு.. அதிரடியாக முடிவுரை எழுதும் மோடி அரசு

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களால் இந்தியா ஏகப்பட்ட பிரச்னைகளை சந்தித்து கொண்டுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பால் பொருளாதார சீர்குலைவு, காற்று மாசுபாடு உள்ளிட்ட பிரச்னைகள் இவற்றில் முக்கியமானவை. எனவேதான் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு முடிவுரை எழுத முயன்று வருகிறது மத்திய அரசு.

இன்னும் 45 நாட்கள்தான்.. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு சங்கு.. அதிரடியாக முடிவுரை எழுதும் மோடி அரசு

எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தால், நாட்டிற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்று மத்திய அரசு உறுதியாக நம்புகிறது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஏராளமான சலுகைகளை மத்திய அரசு வாரி வழங்கி வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவார்கள் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இன்னும் 45 நாட்கள்தான்.. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு சங்கு.. அதிரடியாக முடிவுரை எழுதும் மோடி அரசு

அதே சமயம் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் மீதான மத்திய அரசின் கிடுக்குப்பிடி இறுகி கொண்டே செல்கிறது. இந்த வரிசையில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான பதிவு கட்டணம் மற்றும் அவற்றின் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணங்களை மத்திய அரசு பல மடங்கு உயர்த்தவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளிவந்தன.

இன்னும் 45 நாட்கள்தான்.. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு சங்கு.. அதிரடியாக முடிவுரை எழுதும் மோடி அரசு

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

மத்திய அரசின் இந்த அதிரடி திட்டம் தொடர்பாக தற்போது மேலும் பல்வேறு கூடுதல் தகவல்கள் வெளியே வந்துள்ளன. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் கிட்டத்தட்ட தங்கள் ஆயுளின் கடைசி அத்தியாத்தில் உள்ளன. பெட்ரோல், டீசல் வாகனங்களை படிப்படியாக புழக்கத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு இத்தகைய திட்டங்கள் தேவை என்பது மத்திய அரசின் எண்ணம்.

இன்னும் 45 நாட்கள்தான்.. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு சங்கு.. அதிரடியாக முடிவுரை எழுதும் மோடி அரசு

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பதிவு கட்டணம் மற்றும் அவற்றின் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணங்களை உயர்த்துவதற்காக வரைவு அறிக்கை ஒன்றை முன்மொழிந்துள்ளது. இதில், பல மடங்கு கட்டண உயர்விற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இன்னும் 45 நாட்கள்தான்.. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு சங்கு.. அதிரடியாக முடிவுரை எழுதும் மோடி அரசு

இரு சக்கர வாகனங்களுக்கான பதிவு கட்டணம் தற்போது வெறும் 50 ரூபாயாக மட்டுமே உள்ளது. இதனை ஆயிரம் ரூபாயாக உயர்த்த மத்திய அரசு அதிரடியாக திட்டமிட்டுள்ளது. அதேபோல் இரு சக்கர வாகனங்களுக்கான புதுப்பிப்பு கட்டணங்கள் 2 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்படலாம்.

இன்னும் 45 நாட்கள்தான்.. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு சங்கு.. அதிரடியாக முடிவுரை எழுதும் மோடி அரசு

அதே நேரத்தில் உங்கள் புதிய பெட்ரோல் அல்லது டீசல் காரை பதிவு செய்ய இனி நீங்கள் 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டிய நிலை உருவாகலாம். அவற்றின் பதிவை புதுப்பிக்க வேண்டுமென்றால், இனி 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். தற்போதைய நிலையில் இவை இரண்டுக்குமான கட்டணம் எவ்வளவு தெரியுமா? வெறும் 600 ரூபாய் மட்டுமே!!

இன்னும் 45 நாட்கள்தான்.. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு சங்கு.. அதிரடியாக முடிவுரை எழுதும் மோடி அரசு

அதே சமயம் கேப்ஸ் என்றால், பதிவு செய்யவும், பதிவை புதுப்பிக்கவும் முறையே 10 ஆயிரம் மற்றும் 20 ஆயிரம ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டியதிருக்கும். தற்போதைய நிலையில் இதற்கான கட்டணம் வெறும் ஆயிரம் ரூபாய்தான். வழக்கமான எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கு வேகத்தடை ஏற்படுத்துவதற்காக இந்த அதிரடி நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது.

இன்னும் 45 நாட்கள்தான்.. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு சங்கு.. அதிரடியாக முடிவுரை எழுதும் மோடி அரசு

அதே நேரத்தில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான பதிவு கட்டணத்தை 5 ஆயிரம் ரூபாயில் 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது. இதுவே இறக்குமதி செய்யப்படும் மோட்டார்சைக்கிள் என்றால், அதற்கான பதிவு கட்டணமாக 20 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியதிருக்கும். இதற்கு தற்போதைய நிலையில் 2,500 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இன்னும் 45 நாட்கள்தான்.. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு சங்கு.. அதிரடியாக முடிவுரை எழுதும் மோடி அரசு

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், ''தற்போது இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கருத்துக்களும் கேட்கப்பட்டு வருகின்றன. அடுத்த 40 முதல் 45 நாட்களுக்குள் இறுதி கட்டண விபரங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம்'' என்றார். அவர் மேலும் கூறுகையில், ''இதுதவிர லாரி, பஸ் போன்ற கமர்ஷியல் வாகனங்கள் மற்றும் இதர வர்த்தக வாகனங்களுக்கான புதுப்பிப்பு கட்டணங்களை 27 மடங்கு உயர்த்த திட்டமிடப்பட்டு வருகிறது.

இன்னும் 45 நாட்கள்தான்.. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு சங்கு.. அதிரடியாக முடிவுரை எழுதும் மோடி அரசு

15 ஆண்டுகளை கடந்து விட்டால், இதுபோன்ற வாகனங்களை அதன் உரிமையாளர்கள் ஸ்கிராப் செய்யும் முடிவை எடுக்க வேண்டும் என்பதற்காக 27 மடங்கு கட்டண உயர்வு குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது'' என்றார். அதே சமயத்தில் கமர்ஷியல் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை அடிக்கடி ஃபிட்னஸ் டெஸ்ட்டுக்கு உட்படுத்தும் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி 15 ஆண்டுகளுக்கும் மேலான வாகனங்களை ஆண்டுக்கு இரு முறை பிட்னஸ் சோதனைக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இன்னும் 45 நாட்கள்தான்.. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு சங்கு.. அதிரடியாக முடிவுரை எழுதும் மோடி அரசு

அதேபோல் காலாவதியாவதற்கு முன்பாக புதிய ஃபிட்னஸ் சான்றிதழை பெற தவறினால், 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களின் உரிமையாளர்களுக்கு, ஒவ்வொரு நாளுக்கும் கூடுதலாக 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கும் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது.

இன்னும் 45 நாட்கள்தான்.. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு சங்கு.. அதிரடியாக முடிவுரை எழுதும் மோடி அரசு

இவை எல்லாம் தவிர பஸ் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களை மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்துவதற்கு தேவையான திட்டங்களும் இதில் முன் வைக்கப்பட்டுள்ளன. இதன்படி பிட்னஸ் டெஸ்டிங் அமைப்புகள், பஸ்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான முன்னுரிமை இருக்கைகள் போன்ற வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இன்னும் 45 நாட்கள்தான்.. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு சங்கு.. அதிரடியாக முடிவுரை எழுதும் மோடி அரசு

நாட்டின் பொருளாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் மத்திய அரசின் முயற்சிகள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றே. ஆனால் இவ்வளவு கடுமையும், தீவிரமும் காட்டப்படுவது சரியா? எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது என்பது இன்னும் கொஞ்சம் சுமூகமாகவும், படிப்படியாகவும் இருக்க வேண்டுமா? என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.

Source:Times of India

Most Read Articles
English summary
Registration Charges For Both Two And Four Wheelers To Increase By 25 Times — Here’s Why!. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X