இன்னோவா, செல்டோஸ் மார்க்கெட்டை குறிவைத்து களமிறங்கும் சீன கார் நிறுவனம்

சீனாவை சேர்ந்த மற்றொரு கார் நிறுவனம் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க இருக்கிறது. அத்துடன், புதிய கார் மாடல்களையும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த உள்ளது. விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இன்னோவா, செல்டோஸ் மார்க்கெட்டை குறிவைத்து களமிறங்கும் சீன கார் நிறுவனம்

சீனாவை சேர்ந்த செயிக் குழுமம் தனது கீழ் செயல்படும் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூலமாக இந்திய கார் சந்தையில் கால் பதித்தது. அடுத்து, கிரேட்வால் நிறுவனமும் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க ஆயத்தமாகி வருகிறது.

இன்னோவா, செல்டோஸ் மார்க்கெட்டை குறிவைத்து களமிறங்கும் சீன கார் நிறுவனம்

இந்த நிலையில், சீனாவை சேர்ந்த FAW Haima என்ற சீன கார் தயாரிப்பு நிறுவனமும் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க முடிவு செய்துள்ளது. வரும் பிப்ரவரியில் நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவின் மூலமாக இந்தியர்களின் கவனத்தை ஈர்க்க திட்டமிட்டுள்ளது.

இன்னோவா, செல்டோஸ் மார்க்கெட்டை குறிவைத்து களமிறங்கும் சீன கார் நிறுவனம்

ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான மஸ்தாவின் கார்களை ரீபேட்ஜ் முறையில் மாற்றங்களை செய்து சீனாவில் இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் மஸ்தாவின் தயாரிப்புகள் இல்லாத நிலையில், எஃப்ஏடபிள்யூ நிறுவனம் நேரடியாக களமிறங்க முடிவு செய்துள்ளது.

இன்னோவா, செல்டோஸ் மார்க்கெட்டை குறிவைத்து களமிறங்கும் சீன கார் நிறுவனம்

தற்போது செடான், எஸ்யூவி, எம்பிவி மற்றும் மின்சார கார்களை எஃப்ஏடபிள்யூ நிறுவனம் விற்பனை செய்கிறது. இந்த நிலையில், தனது ஹெய்மா 8எஸ் என்ற மிட்சைஸ் எஸ்யூவி காரை இந்தியாவில் முதலாவது மாடலாக அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இன்னோவா, செல்டோஸ் மார்க்கெட்டை குறிவைத்து களமிறங்கும் சீன கார் நிறுவனம்

இந்த புதிய கார் மாடல் மிட்சைஸ் எஸ்யூவி ரகத்தில் நிலைநிறுத்தப்படும். இதில் 193 எச்பி பவரையும், 293 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதனுடன், 7எக்ஸ் என்ற தனது எம்பிவி கார் மாடலையும் இந்தியாவில் களமிறக்கும் திட்டத்தை வைத்துள்ளது.

இன்னோவா, செல்டோஸ் மார்க்கெட்டை குறிவைத்து களமிறங்கும் சீன கார் நிறுவனம்

அண்மையில் சீனாவில் நடந்த குவாங்ஸோ ஆட்டோ எக்ஸ்போவில்தான் 7எக்ஸ் எம்பிவி கார் அறிமுகம் செய்யப்பட்டது. ஹெய்மா 8எஸ் எஸ்யூவியில் இருக்கும் அதே எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்தான் இதிலும் இடம்பெற்றுள்ளன.

இன்னோவா, செல்டோஸ் மார்க்கெட்டை குறிவைத்து களமிறங்கும் சீன கார் நிறுவனம்

இந்த 7எக்ஸ் எம்பிவி கார் 7 சீட்டர் மாடலாக வர இருக்கிறது. மேலும், இந்தியாவின் தன்னிகரற்ற எம்பிவி மாடலாக வலம் வரும், டொயடோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட அளவில் பெரியதாக இருக்கிறது.

இன்னோவா, செல்டோஸ் மார்க்கெட்டை குறிவைத்து களமிறங்கும் சீன கார் நிறுவனம்

இந்த கார்கள் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்த கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன.

Source: Autocarindia

Most Read Articles
English summary
Chinese based car maker Haima will make their Indian debut at the 2020 Auto Expo
Story first published: Wednesday, November 27, 2019, 12:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X