சிட்ரோன் சி5 ஏர்-க்ராஸ் எஸ்யூவி பாண்டிச்சேரியில் சோதனை ஓட்டம்...

2019ல் எம்ஜி மோட்டார்ஸ், கியா மோட்டார்ஸ் என இரு புதிய நிறுவனங்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகின. இதனை தொடர்ந்து அடுத்த வருடத்தில் பிரான்ஸ் நாட்டின் பிஎஸ்ஏ க்ரூப்பை சேர்ந்த சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் கால் பதிக்கவுள்ளது.

இதனால் இந்நிறுவனத்தின் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி கார்கள் பாண்டிச்சேரிக்கு அருகே சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 4 ஏர்க்ராஸ் எஸ்யூவி கார்கள், கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன.

சிட்ரோன் சி5 ஏர்-க்ராஸ் எஸ்யூவி பாண்டிச்சேரியில் சோதனை ஓட்டம்...

அனைத்து கார்களும் ஹரியானா மாநிலத்திற்கு உரிய எச்ஆர் நம்பர் ப்ளேட்டையும், ஆன் டெஸ்ட் என்கிற ஸ்டிக்கரையும் கொண்டுள்ளன. இந்த ஸ்டிக்கர் ஐசிஏடி (இண்டர்நேஷ்னல் சென்டர் ஆப் ஆட்டோமோட்டிவ் டெக்னாலஜி) என்கிற அமைப்பால் ஒட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து சிட்ரோன் நிறுவனம் இந்த அமைப்பிடம் இருந்து ஒழுங்குமுறை ஒப்புதலுக்காக காத்திருப்பது தெரிய வருகிறது.

சிட்ரோன் சி5 ஏர்-க்ராஸ் எஸ்யூவி பாண்டிச்சேரியில் சோதனை ஓட்டம்...

எந்தவொரு மறைப்பும் இன்றி சோதனை ஓட்டத்தில் கார்களை ஈடுப்படுத்தியுள்ள சிட்ரோன் நிறுவனம், சில மாதங்களுக்கு முன்னதாக மறைப்புடன் சோதனை ஓட்டத்தை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏர்க்ராஸ் எஸ்யூவி காரை உலக சந்தையில் 2017ல் ஷாங்காய் நகரத்தில் சிட்ரோன் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

உலக சந்தையில் இந்த காருக்கு போட்டியாக கியா ஸ்போர்டேஜ், நிஸான் காஷ்காய் மற்றும் ஹூண்டாய் டக்சன் போன்ற எஸ்யூவி மாடல்கள் உள்ளன. வோக்ஸ்ஹால் கிராண்ட்லேண்ட் எக்ஸ், பியூஜியோட் 3008 மற்றும் டிஎஸ்7 க்ராஸ்பேக் போன்ற க்ரூப்பில் உள்ள மற்ற நிறுவனங்களின் கார்களை போன்று பிஎஸ்ஏ க்ரூப்பின் இஎம்பி2 ஃப்ளாட்ஃபாரத்தில் சிட்ரோனின் இந்த சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

சிட்ரோன் சி5 ஏர்-க்ராஸ் எஸ்யூவி பாண்டிச்சேரியில் சோதனை ஓட்டம்...

இதனால் இந்த ஏர்க்ராஸ் மாடல் தனித்துவமான தோற்றத்தை பெற்றுள்ளதால், போக்குவரத்து நெரிசலில் பல கார்களுக்கு மத்தியில் இருந்தாலும் தனித்து தெரியும். குறிப்பாக டைனாமிக் முன்புற அமைப்பை இந்த கார் பெற்றுள்ளதால் மிகவும் இளமையான தோற்றத்தை கொண்டுள்ளது.

கம்பேக்ட் அளவில் இந்த கார் இல்லாததால் உட்புறத்தில் அதிகளவில் காலியான இடத்தை பெற்றுள்ளது. மற்றப்படி இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ள தொழிற்நுட்பங்கள் மற்றும் அலாய் சக்கரங்களின் அளவுகள் உள்ளிட்டவை அறிமுகத்திற்கு சில நாட்களுக்கு முன்னரே தெரியவரும்.

சிட்ரோன் சி5 ஏர்-க்ராஸ் எஸ்யூவி பாண்டிச்சேரியில் சோதனை ஓட்டம்...

128 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் டீசல், 178 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 2 லிட்டர் டீசல், 128 பிஎச்பி பவரை வழங்கக்கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளிட்ட என்ஜின் தேர்வுகளில் இந்த கார் அறிமுகமான நாடுகளில் விற்பனையாகி வருகிறது. ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் யூனிட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் என்னென்ன மாற்றங்கள் இந்திய அறிமுகத்தின்போது இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சிட்ரோன் சி5 ஏர்-க்ராஸ் எஸ்யூவி பாண்டிச்சேரியில் சோதனை ஓட்டம்...

இந்திய சந்தையில் தனது முதல் அறிமுக கார் என்பதால் சிட்ரோன் நிறுவனம் இந்த காரில் பல சிறப்பம்சங்களை கொண்டுவரும். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகமாகலாம் என கூறப்படும் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிக்கு இந்திய சந்தையில் ஃபோக்ஸ்வேகன் டிகுவான், ஹூண்டாய் டக்சன் போன்ற மாடல்கள் கடுமையான போட்டியினை தரவுள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ #auto news
English summary
Citroen C5 Aircross Suv Spied
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X