சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி விற்பனை குறித்த புதிய தகவல்!

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனை செய்வதற்கான திட்டம் குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி விற்பனை குறித்த புதிய தகவல்!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ குழுமம் இந்தியாவில் மீண்டும் கார் வர்த்தகத்தை துவங்க இருக்கிறது. தனது கீழ் செயல்படும் சிட்ரோன் பிராண்டு கார்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. முதல் மாடலாக சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிதான் விற்பனைக்கு களமிறக்கப்பட இருக்கிறது.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி விற்பனை குறித்த புதிய தகவல்!

கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் வைத்து சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்தியாவில் வெளியிடப்பட்டது. மிக தனித்துவமான டிசைன் அம்சங்களுடன் இந்த கார் இந்தியர்களின் ஆவலைத் தூண்டி இருக்கிறது.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி விற்பனை குறித்த புதிய தகவல்!

இந்த நிலையில், அடுத்த ஆண்டு செப்டம்பரில் இந்த புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில், முதல்கட்டமாக இந்தியாவில் 10 முக்கிய நகரங்களில் மட்டுமே இந்த சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிய வந்துள்ளது.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி விற்பனை குறித்த புதிய தகவல்!

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியில் முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், 19 அங்குல அலாய் வீல்கள், முப்பரிமாண கோணத்தில் ஒளிரும் எல்இடி டெயில் லைட்டுகள், பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை இந்த காரின் முக்கிய அம்சங்கள்.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி விற்பனை குறித்த புதிய தகவல்!

உட்புறத்தில் 8.0 அங்குல எச்டி தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்ப்டடு இருக்கிறது. இந்த காரில் 12.3 திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கும். பின்புறத்தில் சாய்மான வசதியுடன் கேப்டன் இருக்கைகள் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி விற்பனை குறித்த புதிய தகவல்!

புதிய சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் 131 பிஎஸ் பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வர இருக்கிறது.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி விற்பனை குறித்த புதிய தகவல்!

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி யூரோ என்சிஏபி அமைப்பின் க்ராஷ் டெஸ்ட்டில் 4 நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பாதுகாப்பிலும் சிறந்த கார் மாடலாக இருக்கும்.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி விற்பனை குறித்த புதிய தகவல்!

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு சென்னை அருகே திருவள்ளுவரில் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Businessline

Most Read Articles
மேலும்... #சிட்ரோன்
English summary
According to a new report, PSA Group is planning to launch Citroen C5 Aircross in India by phased manner.
Story first published: Friday, December 20, 2019, 17:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X