எஸ்யூவி மாடல்களை வரிசை கட்டப்போகும் சிட்ரோன் நிறுவனம்!

சிட்ரோன் நிறுவனம் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி தவிர்த்து மூன்று புதிய கார்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் சிட்ரோன் நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கருதப்படும் கார் மாடல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எஸ்யூவி மாடல்களை வரிசை கட்டப்போகும் சிட்ரோன் நிறுவனம்!

முதல் மாடல்

சென்னையில் நடந்த விழாவில் சிட்ரோன் நிறுவனம் தனது சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை முதலாவது மாடலாக இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வர இருக்கிறது. அதேபோன்று, மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் கிடைக்கும்.

எஸ்யூவி மாடல்களை வரிசை கட்டப்போகும் சிட்ரோன் நிறுவனம்!

அடுத்த ஆண்டு செப்டம்பரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த மாடலானது ஜீப் காம்பஸ், டாடா ஹாரியர், ஹூண்டாய் டூஸான் மற்றும் விரைவில் வரும் எம்ஜி ஹெக்டர், கியா எஸ்பி2 ஆகிய எஸ்யூவி மாடல்களுக்கு நிகரானதாக இருக்கும். இந்த எஸ்யூவி பெட்ரோல், டீசல் மாடல் தேர்வுகளில் கிடைக்கும். தமிழகத்தில்தான் அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது.

எஸ்யூவி மாடல்களை வரிசை கட்டப்போகும் சிட்ரோன் நிறுவனம்!

சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ்

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிக்கு அடுத்ததாக இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இரண்டாவது மாடல் சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ் எஸ்யூவி. இந்த எஸ்யூவி பெரும் ஆவலை ஏற்படுத்துவதற்கான காரணம், சிட்ரோன் நிறுவனத்தின் விலை குறைவான எஸ்யூவி தேர்வாக இருக்கும். அதாவது, 4 மீட்டர் நீளத்திற்கும் குறைவான நீளமுடைய, காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலாக இருக்கும்.

எஸ்யூவி மாடல்களை வரிசை கட்டப்போகும் சிட்ரோன் நிறுவனம்!

சிட்ரோன் சி3 ஹேட்ச்பேக் காரின் அடிப்படையிலான எஸ்யூவி மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படும் வாய்ப்புள்ளது. இந்த எஸ்யூவியும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகிய மாடல்களுடன் போட்டி போடும்.

எஸ்யூவி மாடல்களை வரிசை கட்டப்போகும் சிட்ரோன் நிறுவனம்!

சிட்ரோன் சி4 ஏர்க்ராஸ்

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் மாடலைவிட குறைவான விலையில் வர இருக்கும் மாடல். அடுத்த தலைமுறை சி4 ஏர்க்ராஸ் எஸ்யூவிதான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இது சி3 ஏர்க்ராஸ் காரின் கூடுதல் வீல் பேஸ் கொண்ட மாடலாக இருக்கும். சீனாவில் தற்போது 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

எஸ்யூவி மாடல்களை வரிசை கட்டப்போகும் சிட்ரோன் நிறுவனம்!

அதாவது, சி3 ஏர்க்ராஸ் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின் ஆப்ஷன்கள் கூடுதல் பவரை வெளிப்படுத்தும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் உள்ளது. இந்தியாவில் ஹூண்டாய் க்ரெட்டா, நிஸான் கிக்ஸ் மற்றும் ரெனோ டஸ்ட்டர் ஆகிய மாடல்களுடன் போட்டி போடும்.

எஸ்யூவி மாடல்களை வரிசை கட்டப்போகும் சிட்ரோன் நிறுவனம்!

சிட்ரோன் சி3 ஹேட்ச்பேக் கார்

இறுதியாக தனது சி3 ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு சிட்ரோன் திட்டமிட்டுள்ளது. அதாவது, அடுத்த தலைமுறை மாடல் இந்தியாவில் வரும் என்று தெரிகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் கொடுக்கப்படும் வாய்ப்புள்ளது. மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20, ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட பிரிமீயம் ஹேட்ச்பேக் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

எஸ்யூவி மாடல்களை வரிசை கட்டப்போகும் சிட்ரோன் நிறுவனம்!

உற்பத்தி

சிட்ரோன் கார்கள் அனைத்தும் சென்னை அருகே திருவள்ளூரில் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில்தான் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. மேலும், எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆகிய முக்கிய பாகங்கள் ஓசூரில் அமைக்கப்பட்டு இருக்கும் ஆலையிலிருந்து சப்ளை பெறப்பட இருக்கிறது. இந்த ஆலையில் ஏற்கனவே எஞ்சின் உற்பத்தி துவங்கப்பட்டுவிட்டது. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும் கார்கள் மற்றும் எஞ்சின் உள்ளிட்ட உதிரிபாகங்களை ஏற்றுமதி செய்யவும் சிட்ரோன் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பிஎஸ்ஏ குழுமம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #சிட்ரோவன்
English summary
Citroen's Expected Product Line-Up For India.
Story first published: Saturday, April 6, 2019, 10:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X