காரை அறிமுகப்படுத்தும் முன்னரே குத்தகை திட்டத்தை அறிவித்த சிட்ரோன்!

கார்களை குத்தகை அடிப்படையில் வாங்கி பயன்படுத்துவதற்கான திட்டத்தை இந்தியாவில் சிட்ரோன் கார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

காரை அறிமுகப்படுத்தும் முன்னரே குத்தகை திட்டத்தை அறிவித்த சிட்ரோன்!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ குழுமம் தனது கீழ் செயல்படும் சிட்ரோன் நிறுவனத்தின் மூலமாக இந்தியாவில் இரண்டாவது இன்னிங்சை துவங்க திட்டமிட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் தனது முதல் மாடலாக சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வந்தது.

காரை அறிமுகப்படுத்தும் முன்னரே குத்தகை திட்டத்தை அறிவித்த சிட்ரோன்!

இந்த புதிய எஸ்யூவி மாடலானது அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து, பல புதிய மாடல்களையும் அறிமுகம் செய்வதற்கு அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

காரை அறிமுகப்படுத்தும் முன்னரே குத்தகை திட்டத்தை அறிவித்த சிட்ரோன்!

இந்தநிலையில், தனது கார்களுக்கான சிறப்பு கடன் திட்டங்களை வழங்குவதற்காக ஆக்சிஸ் வங்கியின் உதவியுடன் புதிய நிதி நிறுவனத்தை துவங்கியது. இதைத்தொடர்ந்து, கார்களை குத்தகை அடிப்படையில் வாங்கி வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதற்கான புதிய திட்டத்தையும் அறிவித்துள்ளது.

காரை அறிமுகப்படுத்தும் முன்னரே குத்தகை திட்டத்தை அறிவித்த சிட்ரோன்!

கார்களை குத்தகை விடுவதற்கான திட்டத்தை இந்த புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த நிலையில், அடுத்து ஏஎல்டி நிறுவனத்துடன் இணைந்து கார்களை குத்தகை திட்டத்தை அறிவித்துள்ளது சிட்ரோன்.

காரை அறிமுகப்படுத்தும் முன்னரே குத்தகை திட்டத்தை அறிவித்த சிட்ரோன்!

ஏஎல்டி நிறுவனம் ஏற்கனவே 40 நாடுகளில் கார் குத்தகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் சிட்ரோன் கார்களை குத்தகை அடிப்படையில் விற்பனை செய்வதற்கான திட்டத்தை ஏஎல்டி நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது.

காரை அறிமுகப்படுத்தும் முன்னரே குத்தகை திட்டத்தை அறிவித்த சிட்ரோன்!

முன்தொகை இல்லாமல் சிட்ரோன் கார்களை வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கான வாய்ப்பை இந்த நிறுவனம் வழங்கும். இந்த திட்டத்தின் மூலமாக, முதலீட்டு அபாயம், தேவையற்ற செலவீனங்களை வாடிக்கையாளர்கள் தவிர்க்க முடியும் என்று சிட்ரோன் தெரிவித்துள்ளது.

காரை அறிமுகப்படுத்தும் முன்னரே குத்தகை திட்டத்தை அறிவித்த சிட்ரோன்!

இந்தியாவில் கார் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக முன்னணி கார் நிறுவனங்கள் கார்களை குத்தகை அடிப்படையில் வழங்கும் திட்டத்தை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், முதல் கார் மாடலை அறிமுகம் செய்வதற்கு முன்பாகவே, கார் குத்தகை திட்டத்தை சிட்ரோன் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #சிட்ரோன்
English summary
Citroen has launched car leasing services called 'Citroen Lease' in India.
Story first published: Friday, October 4, 2019, 11:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X